அன்புள்ள சீமான் அவர்க ளுக்கு வணக்கம்... சமீபத்தில் ஒரு பத்திரி கையாளர் சந்திப்பில் உங்களிடம் கேள்வி எழுப்பிய ஒரு பத்திரிகையாளரின் பெயரைக் கேட்டு அவர் தன் பெயர் சிராஜூதீன் என்று சொன்னதும் அப்படியானால் நீ அப்படித்தான் பேசுவாய் என்று நீங்கள், சொன்னதையும் கேட்க நேர்ந்தது. உண்மையில், அதன் முழுப் பொருள் அறிந்து தாங்கள் பேசினீர்களா என்று எனக்கு தெரியாது. ஆனால், நீங்கள் என்ன நோக்கத்திலிருந்து பேசியிருந்தாலும் அது கொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் சூறை யாடலுக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும் காரணமாகும் என்பதை தங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இது எனது கருத்தல்ல; இன்றைய இந்தியா வின் நடைமுறை. குறிப்பாக 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வெறுப்புப் பேச்சின் காரணமாக இசுலாமியர் மீதும், கிறித்தவர்கள் மீதும் தாக்குதல் உச்சமடைந்துள்ளது.
பிரதமரே நேரடியாக...
தேசிய குற்றச் செயல் ஆவணக் காப்பகம் 2016 முதல் 2019 வரை நடந்த வெறுப்புப் பிரச்சா ரத்தின் காரணமாக நடைபெற்ற வன்முறைக ளை தொகுத்திருக்கிறது. இத்தகைய வன்முறை கள் 4500க்கும் அதிகம் என அது பதிவு செய்தி ருக்கிறது. தற்போது இவற்றையெல்லாம் முறை யாக பதிவு செய்வதற்கான இணையதளங்கள் பெரும்பாலும் இல்லை எனலாம். இந்துஸ்தான் டைம்ஸ் Hate Tracker என்கிற ஒரு செயலியை 2017 செப். வரை பயன் படுத்தி வந்தது. ஆனால், அதன் காரணமா கவே அதன் தலைமை ஆசிரியர் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. ஒரு நிகழ்ச்சிக்காக பிரதமரை அழைக்கச் சென்றபோது அதன் முத லாளியிடம் பிரதமரே நேரடியாகச் சொன்னதால் அந்தச் செயலி கைவிடப் பட்டது என்றும் அதன் ஆசிரியர் ராஜினாமா செய்ய வேண்டி வந்தது என்று செய்திகள் வந்தன. இதேபோன்று India Spend என்கிற இணையதளமும் Hate Crime Watch Data base ஒன்றை பராமரித்து வந்தது. அதையும் கைவிட நிர்ப்பந்தித்து கைவிட்டுவிட்டார்கள்.
பியூலா ராஜேஷின் சிங்கிள் சோர்ஸ்
உண்மையில் நரேந்திர மோடி உடையை வைத்து தீவிரவாதிகளை அடையாளம் கண்டு கொள்ளலாம் என்று சொன்னதற்கும் பெயரை வைத்து நீங்கள் அடையாளம் கண்டு கொண்ட தற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. லவ் ஜிகாத், கொரோனா ஜிகாத், நாக்குரி ஜிகாத் (naukri jihad) என்று பல்வேறு வார்த்தைகள் திட்டமிட்டு இசுலாமியர்க ளுக்கு எதிராக சங்பரிவாரால் அனுதினமும் பரப்பப்பட்டே வந்து கொண்டிருக்கிறது. கொரோ னாவை ஒட்டி தப்ளிக் ஜமாத்தினர்தான் இந்தியாவில் திட்டமிட்டு கொரோனாவை பரப்பினார்கள் என்று வெறியூட்டப்பட்டது. தமிழகத்தில் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த திரு. பியூலா ராஜேஷ், சிங்கிள் சோர்ஸ் என்கிற வார்த்தையின் மூலம் கொரோ னா பரவலை விவரித்துக் கொண்டிருந்தார்.
வெறுப்புப் பேச்சுக்கு வெகுமதி
சமீபத்தில் பாஜக எம்.பி., ரமேஷ் பிதூரி பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பி னர் டேனிஸ் அலியை இசுலாமியத் தீவிரவாதி, மாமாபய (PIMP), சுன்னத் செய்யப்பட்டவன் என்றெல்லாம் பேசினார். இத்தனையும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயே நடந்தது. அது ஒன்றும் அந்த நபரின் தனிப்பட்ட தவறு அல்ல. மாறாக, அந்தக் கட்சிக்குள் அது பதவி உயர்வு பெறுவதற்கான தகுதியாகவே கருதப் படுகிறது. இந்தப் பேச்சுக்கு பின்பாக ரமேஷ் பிதூரி ராஜஸ்தான் மாநிலத்தின் டோன்ங் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நிய மிக்கப்பட்டிருக்கிறார்.
முன்னோடி மோடியே!
சொல்லப்போனால் நரேந்திர மோடிதான் இதற்கெல்லாம் முன்னோடி. இசுலாமி யர்களைப் பற்றி குறிப்பிடும்போது ஹம்பாஞ்ச் ஹமாரா பச்சீஸ் அதாவது நாமிருவர் நமக்கு இருபத்து ஐவர் எனப் பேசினார். குஜராத்தில் இசு லாமியர்களுக்கான நிவாரண முகாம்களைப் பற்றி குறிப்பிடும்போது நாங்கள் ஒன்றும் குழந்தை உற்பத்தி தொழிற்சாலைகளை பராம ரித்துக் கொண்டிருக்க முடியாது என்று பேசினார். 2016ஆம் ஆண்டு ஆனந்த் குமார் ஹெக்டே என்கிற கர்நாடகா நாடாளுமன்ற உறுப்பினர் “இசுலாம் இருக்கும் வரை உலகில் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது. உலகிலி ருந்து இசுலாமை ஒழிக்கவில்லை என்றால் பயங்கரவாதத்தை ஒழிக்கவே முடியாது” என்று பேசினார். அதன் பிறகு அவர் மத்திய அமைச்ச ராக்கப்பட்டார். ராஜேஷ்வர் சிங் என்கிற ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நிர்வாகி “இசுலா மியர்களும் கிறித்தவர்களும் 2021 டிசம்பர் 31க் குள் இந்தியாவிலிருந்து துடைத்தெறி யப்படுவார்கள்” என்று பேசினார். பீகார் சட்டமன்ற தேர்தலின்போது அமித்ஷா பீகாரில் ஆர்ஜேடி வெற்றி பெற்றால் பாகிஸ்தானியர்கள் தீபாவளி கொண்டாடு வார்கள் எனப் பேசினார். ஹிஜாப்பை தீவிரவா திகளின் உடை என்று பல இடங்களில் பல சங்பரிவார் அமைப்பினர் பேசியிருக்கிறார்கள். கோலி மாரோ, பாகிஸ்தானுக்கு போ, ராமனின் பிள்ளைகள் இல்லை என்று ஆயிரக்க ணக்கான வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளை அவர்கள் பொது வெளியில் கொட்டிவிட்டுப் போகிறார்கள்.
நீங்கள் காட்டிய முகபாவம்..
அதைப் போல ஒன்றுதான் சிராஜீதின் என்கிற பெயரை வைத்து நீங்கள் காட்டிய முகபாவமும் பேச்சும். இதனுடைய விளைவு கள்தான் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் எல்லாம் இசுலாமியர்கள், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்கிற கருத்தாக்கமும். இதுவெல்லாம் ஒரே நேரத்தில் ஏற்படுவதல்ல. வெவ்வேறு காலங்களில் பொறுப்பற்ற முறை யிலும் வன்மத்தோடு வீசி எறியப்படும் இத்தகைய வார்த்தைகள் தனிமனிதர் மற்றும் சமூகத்தின் சிந்தனை அடுக்குகளில் சேமித்து புழுத்து அழுகி ஒரு குறிப்பிட்ட சூழல் வன்முறையாக வெடித்துக் கிளம்புகின்றன. இத்தகைய கருத்துகள் ஒருவன் மூளைக்குள் சென்றுவிட்ட பிறகு இசுலாமியர் கள் மீது அள்ளி வீசப்படும் அவதூறுகளும் உண்மை போன்ற தோற்றத்தோடு தலை விரித்தாடுகின்றன. அதனால்தான் சில தனி மனிதர்களுக்கு இடையிலான சச்சரவுகள் கூட மிக எளிதாக மதச்சாயம் பூசப்பட்டு சச்சரவில் ஈடுபட்ட சிறுபான்மை நபருக்கு எதிராகவும் அதன் தொடர்ச்சியாக சிறுபான்மை சமூ கத்திற்கு எதிராகவும் தலைவிரித்தாடுகிறது.
ராமநவமியும் அனுமன் ஜெயந்தியும்
ஒரே ஒரு சம்பவத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். தமிழ்நாட்டில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இசுலாமியர்கள் மீது வன்முறைகள் நடப்பதைப் போல வடஇந்திய மாநிலங்களில் ராம நவமி மற்றும் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இசுலாமியர்கள் குறி வைத்து தாக்கப்படுவது வழக்கமான ஒன்றாகி வருகிறது. இந்தாண்டு ஆக்ராவில் ராம நவ மியை ஒட்டி இசுலாமியர்கள் வாழும் பகுதி வழியாகத்தான் ஊர்வலம் போவோம் என்று அடம் பிடித்து ஊர்வலம் போனார்கள். போகிற வழியில் நடுரோட்டில் நிறைமாத கர்ப்பிணி யான இரண்டு பசுக்கள் கழுத்து அறுக்கப்பட்டு ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது. கூட்டத்தின் பொது புத்தியில் ஏற்கனவே ஏற்றப்பட்டிருந்த வெறுப்புப் பேச்சுகள் வெறிபிடித்த நிலைக்கு தள்ளிவிடுகிறது. இசுலாமியன் என்றால் மாட்டுக்கறி சாப்பிடுபவன். கோமாதாவை கொன்றுவிட்டான் என்று பித்தம் தலைக்கேறி அதைச் செய்தவன் யார் என்று பார்ப்பதற்குப் பதிலாக. செய்தவன் எவனோ ஒரு இசுலாமி யன்; எனவே இசுலாமியர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று இசுலா மியர்கள் தாக்கப்பட்டார்கள், அவர்களது கடைகள் நொறுக்கப்பட்டன, வீடுகள் தீக்கிரை யாகின, ஒரு தெருவினர் முழுவதுமே ஊரை விட்டு விரட்டப்பட்டார்கள்.
கோமாதாவை கொன்றது இந்து மகா சபா நிர்வாகி
நான்கு நாட்களுக்குப் பின்பு சிசிடிவியை ஆராய்ந்த போலீஸ் குற்றவாளிகளை கைது செய்தது. நிறைமாத கர்ப்பிணியான அந்த கோ மாதாவை கழுத்தறுத்து ரத்தத்தை நடு ரோட்டில் ஓடவிட்ட அந்த நால்வரில் ஒருவன் அகில இந்திய இந்து மகா சபாவின் மாவட்ட நிர்வாகி. மற்ற மூவரும் அவனது கூட்டாளி கள். சீமான் அவர்களே, அந்த பசுவை அறுத்த வன் இசுலாமியன் அல்ல. ஆனால், மாட்டுக்கறி உண்பவர்கள் என்கிற முத்திரையை அவர்கள் மீது குத்தி வெறுப்பை வளர்த்துவிட்ட பிறகு எந்தத் தூண்டுதலும் இல்லாமல் ஒரு தெருவையே அழித்துவிட முடிகிறது. வெறுப்புப் பேச்சின் விசத் தீவிரத்தை இதைவிட துலக்கமாக வேறெதுவும் சொல்லிவிட முடியும் என்று எனக்கு தெரியவில்லை.
பஜ்ரங்தள் நிர்வாகியை பாதுகாத்தவர் வீடு இடிப்பு
இன்னொரு சம்பவத்தையும் நான் உங்க ளுக்கு சொல்ல விரும்புகிறேன். சமீபத்தில் அரியானா நூவில் அனீஸ் என்கிற ஒரு இசு லாமியரின் வீடு இடிக்கப்பட்டது. அதற்கான காரணமாக இசுலாமிய வன்முறையாளர்கள் அவர் வீட்டிலிருந்து கல்லெறிந்ததாக சொல்லப் பட்டது. அவர் ஒரு வன்முறைச் சூழல் நிலவு வதை அறியாமல் அந்த வழியில் வந்த மூன்று பேருக்கு அடைக்கலம் கொடுக்கிறார். ஒரு நாள் இரவு முழுவதும் தன் வீட்டில் தங்க வைத்திருக்கிறார். அடுத்த நாள் அவர்களை பத்திரமாக சொந்த ஊரில் சேர்த்துவிட்டு வந்திருக்கிறார். அவர்கள் பத்திரமாக சேர்க்கப்பட்ட பிறகு தாங்கள் பஜ்ரங்தள் நிர்வா கிகள் என்று சொல்லியிருக்கிறார்கள். இவரு டைய வீடு அடுத்த நாள் இடிக்கப்படுவதற்காக புல்டோசர்கள் சூழ்ந்து நிற்கும்போது காப்பாற் றப்பட்ட பஜ்ரங்தள் நிர்வாகி போலீசோடும் நிர்வாக அதிகாரிகளோடும் பேசியிருக்கிறார். ஆனால், அனீஸ் இசுலாமியன் என்கிற கார ணத்தினாலேயே இடிக்கப்பட்டது.
இசுலாமியப் பெயர் என்பதாலேயே
சமீபத்தில் ஓடும் ரயில் ஒரு ரயில்வே போலீஸ் பெயர், கேட்டு பெயர் கேட்டு துப்பாக்கி யால் மூன்று பேரை சுட்டுக் கொன்றார். அந்தப் பயணிகள் இசுலாமியர்களின் பெயர்களைத் தாங்கி நின்றதைத் தவிர அவர்கள் வேறெது வும் செய்யவில்லை. உங்களைப் போன்றவர்கள் சிராஜூதினா, அப்துல்லாவா, அகமதுவா என்று கேட்ட விச யங்கள் அவன் மூளைக்குள் சென்று தேங்கி அழுக்காக, வெறுப்பாக மாறி துப்பாக்கியில் வெடித்திருக்கிறது. மூன்று உயிர்கள் போய் விட்டன. மூன்று குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. வெறுப்புப் பேச்சு எத்தனை விசத்தை மனித மனதிற்குள் அகற்ற முடியாத படி கொண்டு சேர்க்கும் என்பதற்கு இதுவெல் லாம் ஓரிரு உதாரணங்கள் மட்டுமே. உங்கள் பேச்சு யாரோ ஒரு ரயில்வே போலீசை, ஏதோவொரு போலீஸ்காரரை, புல்டோசரோடு நிற்கும் ஒரு அதிகாரியை, கோமாதாவை குல மாதாவாக நினைக்கும் ஏதோவொரு இளைஞனை வெறி கொள்ளச் செய்யும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
99 பேர் கொலை
முடிப்பதற்கு முன்பாக ஒரேயொரு விச யத்தை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகி றேன். 2014-ஆம் ஆண்டு மே மாதத்திற்கும் 2019 ஏப். 30க்கும் இடையே வெறுப்புப் பேச்சின் காரணமாக 99 பேர் கொல்லப்பட்டிருக்கி றார்கள். 703 பேர் காயமடைந்திருக்கிறார்கள். அதன் பிறகு பல்வேறு சமயங்களில் இது போன்ற வெறுப்புப் பேச்சின் அடிப்படையிலான குற்றங்கள் அங்குமிங்குமாக பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. ஆனால் இந்தப் பேச்சுகள் எல்லாம் அப்பாவி மனிதர்கள் அவர்களு க்கு இசுலாமியப் பெயர் இருக்கிறது என்கிற காரணத்திற்காகவே கொல்லப்பட்டிருக்கி றார்கள்.
ஒரு வாழைப் பழத்துக்காக...
இறுதியாக, சமீபத்தில் நடந்த ஒன்றைச் சொல்லி என் வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன். நேற்றைக்கு முன்தினம் தலை நகர் தில்லியில் ஒரு 26 வயது பையன் பிள்ளை யார் முன்பிருந்த பிரசாத வாழைப்பழம் ஒன்றை எடுத்து சாப்பிட்டுவிட்டான் என்பதற்காக கம்பத்தில் கட்டி வைத்து அடித்தே கொல்லப் பட்டிருக்கிறான். ஒரே குற்றம் அவன் பெயர் இசார் முகமது என்பதுதான். அன்புமிக்க சீமான் அவர்களே, நீங்கள் ஏற் கனவே ஒரு சேதத்தை விளைவித்துவிட்டீர் கள். வெறுப்பை தூவிவிட்டீர்கள். எதிர் காலத்திலாவது இதுபோன்ற வெறுப்புப் பேச்சு கள் பேசுவதை விட்டுவிடுங்கள். இல்லையேல் ஏதோவொரு கொலைக்கும் சூறையாடலுக் கும் ஏதோவொரு பாலியல் வன்கொடுமைக்கும் உங்கள் பேச்சு காரணமாக அமைந்துவிடும்.
நன்றி
க.கனகராஜ்
.