ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா தோற்றது, இந்திய ரசிகர்களின் மனதை மிகவும் பாதித்துள்ளது.
அதை காரணமாக வைத்து ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் டிராவிஸ் ஹெட், மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரின் இணையர்கள் மீது மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன.
மேக்ஸ்வெல் அவர்களின் மனைவி விநிராமன் சமூக வலைதளத்தில் தங்களைவசை பாடுபவர்களுக்கு ‘‘குளிர் மாத்திரை’’
(chill pill) எடுத்துக் கொள்ளுங்கள், உலகத்தில் ஏராளமான முக்கியமான பிரச்சனைகள் நிறைய உள்ளது என்று தெரிவித்து ளார்.
நமது ‘கலாச்சாரத்தில்’ ஆழமாக வேரூன்றியுள்ள பெண் வெறுப்பை விளையாட்டுகளிலும் பார்க்க முடிகிறது.
இதில் சோகம் என்னவென்றால் ரசிகர்கள் பலர், கிரிக்கெட் விளையாட்டின் அடிப்படையே நன்றாக விளையாடும் குழு வெற்றி பெறும் என்கிற உண்மையை ஒப்புக்கொள்ள மறுப்பதுதான்.
இது ஒரு தனிச் சம்பவம் மட்டுமல்ல, இதே போல ஏற்கனவே விராட் கோலி அவர்கள்ஆரம்ப காலத்தில் மோசமாக விளையாடியதற்கு, அனுஷ்கா சர்மா குறிவைக்கப் பட்டார்.
நமது சமூகத்தின் உள்ளார்ந்த - வலுவான பெண் வெறுப்பு என்பது இணைய நடவடிக்கைகளிலும் தொடர்கிறது. அதனை பெண்கள் பொறுத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.
சமச்சீரற்ற வகையில் ஆண், பெண் விளையாட்டு வீரர்களின் இணையர்கள் நடத்தப்படுகிறார்கள். பெண் விளையாட்டு வீரர்களின் துணைவர்கள் இவ்வளவு தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதில்லை.
பாலின ரீதியாக இரு வேறு நிலைப்பாடுகளை இச்சமூகம் எடுக்கிறது. உலகம் முழுவதும் பாலின சமத்துவத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிற வேளையில், இணைய மிரட்டல்கள் மூலமாக நடைபெறும் சம்பவங்கள் சொல்லுக்கும் செயலுக்குமான முரண்பாடுகள் அதீதமாக இருப்பதை பார்க்கிறோம்.டிஜிட்டல் உலகத்தில் நம்முடைய சமூகம் பயணிக்க வேண்டும் என்றால் பெண்களுக்கு மரியாதையும், அவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிற பக்குவமும் வேண்டும்.
விளையாட்டில் தோற்பது என்பதை நம்மை மேம்படுத்திக் கொள்வதற்கு ஒருவாய்ப்பாக பயன்படுத்த வேண்டும். அதைவிடுத்து வீரர்களை திட்டுவது, அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களை, குழந்தைகளை துன்பம் தரும் சூழ்நிலைக்குஆட்படுத்துவது சரியல்ல;
விளையாட்டின் முக்கியத்துவமே மக்களை ஒற்றுமை படுத்துவதும், ஒற்றுமையை வளர்ப்பதுதான்.
எனவே விளையாட்டை ஆயுதமாக பயன்படுத்தி வெறுப்பையும் வன்முறையையும் அழித்து, அதன் உற்சாகத்தையும் அழகையும் ஏற்போம்.
எப்போதும் விளையாட்டுகள் நமக்குகற்றுத் தருவது ஒற்றுமையும், பகை பரப்பும்
செயல்களை ஒதுக்கி தள்ளுவதுமே!
பிசினஸ் லைனில் வெளியான கட்டுரையிலிருந்து...
- தமிழில் : ஆர்.மைதிலி