காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்ப உயர்வால் உணவுப் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுவரும் அச்சுறுத்தலை குறைக்க நியூசிலாந்து விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடத்தில் பழங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் ஆய்வகத்தில் செயற்கைமுறையில் விலங்கு இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டது பற்றிய செய்திகள் வந்தநிலையில் பழங்களில் இதே போன்ற ஆய்வுகள் நடைபெறுவது மிக அபூர்வம்.
சுவையும் மணமும்
நியூசிலாந்தின் தென்பகுதியில் இருக்கும் கிரைஸ்ட்சர்ச் (Christchurch) நகரில் செயல் படும் தாவரங்கள் மற்றும் உணவு ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தாவர செல்களில் இருந்து பழங்களை உருவாக்கிவரு கின்றனர். இவை உண்மையான பழங்களைப் போலவே வருங்காலத்தில் அனைவரும் உண் ணும் வகையில் சுவையும் மணமும் கொண்ட வையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. மாறி வரும் உலகச் சூழலில் இது உணவுப் பாது காப்பை உறுதி செய்ய உதவும் என்று விஞ்ஞானி கள் கருதுகின்றனர்.
மாறும் சூழலில்
நியூசிலாந்து உட்பட உலகில் பல நாட்டு விவசாயிகள் பழங்கள் உள்ளிட்ட தோட்டக் கலைப் பயிர்களை உற்பத்தி செய்வதில் திறமை மிக்கவர்கள் என்றாலும் மக்கட்தொகைப் பெருக்கம், அதிகரிக்கும் நகரமயமாக்குதல், மாறிவரும் காலநிலை போன்றவற்றால் நிலைமை நாளுக்குநாள் மாறிவருகிறது என்று அரசு ஆதரவில் இயங்கிவரும் தாவர மற்றும் உணவு ஆய்வுமையத்தின் உணவு வடி வமைத்தல் (Food by design) திட்டத்தின் கீழ் பழங்களை செயற்கையாக உருவாக்கும் பிரிவின் விஞ்ஞானி டாக்டர் பென் ஸ்கான் (Dr Ben Schon) கூறுகிறார்.
உணவு விரயத்தைத் தடுக்க உதவும் செயற்கைப் பழங்கள்
விலங்குகளை கொல்லாமல் செயற்கை முறையில் ஆய்வகத்தில் இறைச்சி உற்பத்தி செய்யப்படுவதால் கிடைக்கும் நன்மைகளை விட இதில் அதிக நன்மைகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆப்பிளின் நடுப்பகுதி அல்லது ஆரஞ்சு பழத்தின் தோல் மற்றும் பிற கழிவாக தூக்கியெறியப்படும் பகுதிகள் இல்லா மல் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பழத்தின் சத்துள்ள பகுதி மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதால் உணவு பாழாக்கப்படுவது குறைகிறது.
வேளாண் வளர்ச்சி
இந்த ஆய்வுகள் இப்போது ஆரம்பகட்டத்தி லேயே இருக்கின்றன என்றாலும் ஆய்வகப் பழங்கள் வருங்காலத்தில் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும்போது அது நீடித்த நிலை யான வேளாண் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்று நம்பப்படுகிறது என்று ஆக்லாந்து மாசே (Massey) பல்கலைக்கழக மூத்த உணவியல் விஞ்ஞானி டாக்டர் ஆலி ராஷி டைனெஜாட் (Dr Ali Rashidinejad) கூறுகிறார். ஆய்வகப் பழங்கள் என்பது முற்றிலும் புதிய தொரு கருத்து.
நிரூபண நடைமுறைகள்
இதனால் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவதற்கு முன் இவற்றின் பாதுகாப்பு தன்மையை நிரூபிக்க நீண்ட ஒழுங்குமுறை கிளினிக்கல் ஆய்வுகளுக்கு இவை உட்படுத் தப்படும். என்றாலும் வரும் ஒரு சில ஆண்டு களில் இப்பழங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வரத்தொடங்கும் என்று நம்பப்படுகிறது. நுகர்வோர் இப்பழங்களை ஏற்க முன்வர வேண்டும். முதியவர்கள் ஒருவேளை இவற்றை வாங்க தயக்கம் காட்டலாம்.
பலவகை ஆய்வகப் பழங்கள்
ஆனால் சத்துகள் நிறைந்திருந்தால் புதிய உணவுகளை இளைஞர்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. இப்பழங்கள் சூழலை பாது காப்பிற்கு உதவும். இந்த ஆய்வுத்திட்டம் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தொடங்கப் பட்டது. நீல பெரி, ஆப்பிள், செர்ரிப், திராட்சை, பீச் பழங்கள், நியூசிலாந்தில் காணப்படும் ஃபெய்ஜோவஸ் (feijoas) மற்றும் நெக்ட்டாரின்ஸ் (nectarines) போன்ற பழங்கள் ஆய்வகத்தில் உருவாக்கப்படுகின்றன.
நகரப்பகுதிகளுக்குப் பொருத்தமான ஆய்வகப் பழ உற்பத்தி
வரும் ஒரு சில ஆண்டுகளில் சுவை மிக்க இப்பழங்களை உண்ணமுடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பழத்திசுக்களை செயற்கையாக ஆய்வகத்தில் உற்பத்தி செய்யும் இத்தொழில்நுட்பம் நகரப்பகுதி களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும் என்று தாவர மற்றும் உணவு ஆய்வுமையத்தின் கொள்கை வகுப்புப்பிரிவு தலைவர் டாக்டர் சாம் பால்ட்வின் (Dr Sam Baldwin) கூறு கிறார்.
இயற்கைப்பேரிடர்களால் ஏற்படும் இழப்பு
நகரப்பகுதிகளில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும்போது கிராமங்களில் இருந்து இவற்றை நகரங்களுக்கு எடுத்துவருவதால் உருவாகும் கார்பன் உமிழ்வைத் தடுக்கமுடி யும். இறக்குமதி செய்யப்படும் பழவகைகள் நீண்டநெடும் தொலைவில் இருந்து வருவ தால் போக்குவரத்து மூலம் அவற்றை நுகர்வோ ரின் கார்பன் கால்தடம் (Carbon footprint)அதிகமாகிறது. புவி வெப்ப உயர்வின் மூலம் இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் இழப்பைத் தடுக்கலாம்.'
புயல் சேதம்
2023 தொடக்கத்தில் நியூசிலாந்தில் வீசிய கேப்ரியெல் (Gabrielle) புயலால் அந்நாட்டின் பழக்கிண்ணம் என்று அழைக்கப்படும் ஹாக்ஸ் வளைகுடா (Hawkes Bay) பகுதியில் பாதிக்கும் மேற்பட்ட பழத்தோட்டங்கள் நாசமடைந்தன. கிவி (Kiwi) பழங்களை விவசாயிகள் அறு வடை செய்யும் நேரத்தில் இந்த புயல் வீசி பெரும் அழிவை ஏற்படுத்தியது. வருங்கால உலகில் மக்கட்தொகை அதிகரிக்கும். அப்போது பயிர் செய்வதற்குரிய பரப்பு குறையும். சாதகமற்ற காலநிலை நிலவும்.
பசி போக்க உதவும் ஆய்வகப் பழங்கள்
அப்போது நாம் இன்று கடைபிடிக்கும் நடை முறைகளை பின்பற்றமுடியாமல் போகும். இன்றைய பயிர் முறை காலநிலை பிரச்சனை களுக்கு தீர்வை ஏற்படுத்தாது. வளமிழந்த மண், வெப்பமான பூமி, மாசுகள் நிறைந்த சூழ லில் வருங்காலத்தில் ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும் இந்த பழங்கள் உலக மக்க ளின் பசி பட்டினியைப் போக்கி உணவுப் பாது காப்பை உறுதி செய்ய உதவும் என்று விஞ்ஞானி கள் நம்புகின்றனர்.