articles

img

தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்து; வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்தி முன்னேறுவீர்!

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎஸ்எல்) 80ஆவது ஆண்டு விழா - சிறப்பு மாநாடு ஜூலை 4 அன்று தலைநகர் கொழும்பு அருகே உள்ள மகரகாமாவில் எழுச்சியுடன் நடைபெற்றது. இவ்விழாவில் இந்தியா, சீனா, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றன.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியக் குழுவின் சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று வாழ்த்துரை நிகழ்த்தினார். அவரது உரையின் தமிழ் வடிவம்:

அன்பார்ந்த தோழர்களே! 80ஆவது ஆண்டு விழா காணும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கும், கட்சியின் தலைமைக்கும் உறுப்பினர்களுக்கும் எங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். கடுமையான பொருளாதார நெருக் கடியின் விளைவாக அவதிப்பட்டுக் கொண்டிருக் கும் இலங்கை மக்களுக்கும் எங்கள் ஒருமைப் பாட்டைத் தெரிவித்துக் கொள்வதற்கு இந்த சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன். மிகவும் நெருக்கமான அண்டை நாடுகளாக இருந்துவரும் இலங்கையும், இந்தியாவும் பல நூறு ஆண்டுகளாகவே மிகவும் நெருங்கிய விதத்தில் சமூக-பொருளாதார, கலாச்சாரப் பிணைப்பினைப் பரஸ்பரம் பகிர்ந்து கொண் டுள்ள நாடுகளாகும்.   

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான பங்கு

சகோதரக் கம்யூனிஸ்ட் கட்சிகளாகிய நாம், நம்முடைய நாடுகளில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தின் வளமான பாரம்பரியத்தைப் பெற்றுள்ளோம். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, 1943இல் காலனிய எதிர்ப்புப் போராட்டத்தின் மத்தியில் அமைக்கப்பட்டது. மார்க்சிய-லெனி னியத்தின் விழுமியங்களை உயர்த்திப்பிடித்து, ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், சமூகத்தில் உள்ள பிற்போக்குத்தனத்தின் அனைத்து வடி வங்களுக்கு எதிராகவும் கட்சி முன்மாதிரியான பங்கினை ஆற்றியுள்ளது. இலங்கையில் ஒடுக்கு முறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான போராட்டத் தில் ஓர் ஐக்கிய முன்னணியைக் கட்டி எழுப்ப வேண்டும் என்கிற அறைகூவலை கம்யூனிஸ்ட் கட்சிதான் முதன் முதலில் கூறியது. தொழிலா ளர்களின் உரிமைகள் மற்றும் நிலச் சீர்திருத் தங்கள் உட்பட சமூக மற்றும் பொருளாதாரப் பிரச் சனைகளில் கட்சி, இதர இடதுசாரி மற்றும் முற் போக்கு குழுக்களுடன் இணைந்து செயல் பட்டுள்ளது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியானது, அதன் வரலாறு முழுவதும் என்.எம்.பெரேரா, பீட்டர் கெனமன் (Peter Keuneman), கால்வின் ஆர்.டி.சில்வா (Colvin R de Silva), என். சண்முகதாசன், டி.பி. சுபா சிங்கே, ராஜா கொள்ளூரி (Raja Coll ure) மற்றும் இங்கே மேடையில் அமர்ந்திருக்கும் டி.இ.டபிள்யு. குணசேகரா போன்ற பல முக்கிய மான தலைவர்களைப் பெற்றிருக்கிறது. இந்த 80 ஆண்டுகளில் உங்கள் கட்சி, குறிப்பாக, உள்நாட்டு யுத்தத்தின்போது, பல சோதனைக ளைக் கடந்திருக்கிறது. இந்தக் காலங்களில் கட்சியை தலைமைதாங்கி நடத்திய இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுக்கும், முன் னணி ஊழியர்களுக்கும் வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

நவீன தாராளமயக்  கொள்கைகளின் தாக்குதல்கள்

உலகம் முழுவதையும், குறிப்பாக நம் இரு நாடுகளையும், சுற்றி வளைத்திருக்கும் இன் றைய நெருக்கடிக்குக் காரணம், ஆளும் வர்க் கங்களால் பின்பற்றப்பட்டு வரும் நவீன தாரா ளமயக் கொள்கைகளில் வேரூன்றியிருக்கிறது. இக் கொள்கைகளின் விளைவாக, நாம் உள் நாட்டு விவசாயத்தையும், தொழில் வளர்ச்சியை யும் காவு கொடுத்து, அந்நிய மூலதனத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, அதீத மான இறக்குமதிகளைச் சார்ந்திருக்கத் தள்ளப் பட்டிருக்கிறோம். அதீத செலவுமிக்க உள்கட்டமைப்புத் திட்டங்க ளும், ஊழலும் இவற்றுடன் சேர்ந்தே வந்து, மக்க ளின் சுமைகளை அதிகரித்தன. சர்வதேச நிதி முகமைகளின் கட்டளைகளுக்கு அடிபணிந்து, மக்கள் மீது சிக்கன நடவடிக்கைகள் திணிக்கப் பட்டன. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குதல், தொழிலாளர் நலச் சட்டங்களை தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றும் விதத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருதல், மின்சாரம், தண்ணீர் போன்ற மக்களின் அத்தி யாவசியப் பயன்பாடுகளின் மீது கட்டணங்களை எளிதாக உயர்த்தும் விதத்தில் சட்டங்களை நிறை வேற்றுதல், ஆடம்பர பொருள்கள் மீதான இறக்கு மதி வரிகளைக் குறைத்தல் போன்றவை கொண்டு வரப்பட்டன. ஓய்வூதியச் சட்டங்களில் சீர்திருத்தங் கள், விருப்ப ஓய்வுத் திட்டங்களை அறிமுகப் படுத்தல் போன்றவற்றிற்கான முன்மொழிவு களும் இந்த வரிசையில் சேர்ந்தன. இந் நட வடிக்கைகள் அனைத்தும் ஒருமுறை ஏற்கப்பட்டு அமல்படுத்தப்படுமாயின், நிச்சயமாக இவை மக்களின் மீதான சுமைகளை அதிகரித்திடும்.

கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை மழை

மறுபக்கத்தில், இப்போதுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுகிறோம் என்ற பெயரில், அரசாங்கங்கள் பெரும் கார்ப்பரேட்டு களுக்கு பெரிய அளவில் சலுகைகளை வாரி வழங்கிக் கொண்டிருப்பதையும் காண்கிறோம்.  ஆயினும் உலக அனுபவம் காட்டுவது என்ன? கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகள் கொடுப்பதா லோ, அவர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்வ தாலோ (bailing out), பொருளாதாரத்தை அதன் நெருக்கடியிலிருந்து விடுவித்திட முடியாது. மாறாக ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் வருமானங்களை யும் வளங்களையும் இழந்து வறிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.   

இலங்கை மக்களின் எழுச்சி

இந்தப் பின்னணியில்தான் நாங்கள்,  இலங்கையில் நடைபெற்ற ‘அரகலயா(Aragal aya)’என்ற மக்கள் எழுச்சியை ஆர்வத்துடன் நோக்கினோம். இந்த இயக்கமானது அரசாங்கம் அத்தியாவசியப் பண்டங்களை விநியோகம் செய்வதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையின் ஆரம்பக் கட்டத்திலிருந்து, அரசாங்கத்தை ஆட்சி அதிகாரத்திலிருந்து கீழே இறங்கு என்று நிர்ப்பந்திக்கும் அளவிற்கும், ஆட்சி அமைப்பு முறையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று கோரும் நிலைக்கும், அதற்காக அரசமைப்புச்சட்டத்தில் உரிய திருத்தங்களைக் கொண்டுவரக் கோரியும், எப்படி இந்த இயக்கம்  பலம் பெற்று வந்தது என்று கூர்ந்து கவனித்தோம்.

இந்திய மக்களின் போராட்டம்

இந்தியாவில் நாங்கள் மதவெறி எதேச்சதிகார அரசாங்கத்திற்கு எதிராக உக்கிரமான போராட் டங்களை மேற்கொண்டிருக்கிறோம். விவசாயி கள், தொழிலாளர்கள் மற்றும் சாமானிய மக்க ளில் பல்வேறு பிரிவினரின் உரிமைகளைப் பாது காப்பதற்கான போராட்டங்களின் பல்வேறு வடிவங்களில் ஈடுபட்டு வருகிறோம். வேளாண் மையை கார்ப்பரேட் மயமாக்குவதற்கு எதிராக ஓராண்டு காலம் நடைபெற்ற விவசாயிகளின் தொடர் போராட்டம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இதேபோன்று, தொழிலாளர் வர்க்கமும், தொழி லாளர் சட்டங்களில் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் தொழிலாளர் நலச் சட்டங்கள் தொழிலா ளர் விரோதச் சட்டங்களாக மாற்றப்பட்டிருப்பதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறது. அநேக மாக அனைத்துப் பகுதி மக்களும் விலைவாசி யைக் கட்டுப்படுத்தக் கோரியும், வேலையின்மை மற்றும் பொருளாதார தாக்குதல்களுக்கு எதிராக வும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். மேலும், ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசமைப்புச்சட்ட உத்தரவாதங்கள் பலவற்றின் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள், எங்கள் நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயகக் குணாம்சத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டங் களையும் நடத்திக் கொண்டிருக்கிறோம். மற்றும் உலகம் முழுதும் பல்வேறு நாடுகளிலும் நடை பெற்றுவரும் மகத்தான மக்கள் போராட்டங்களிலி ருந்தும் உத்வேகத்தைப் பெற்று முன்னேறிக் கொண்டும் இருக்கிறோம்.

விரிவாக அணி திரட்டுவோம்

எங்கே மக்களின் குரல்கள் ஆட்சியாளர்க ளால் கேட்கப்பட்டு மதிக்கப்படுகிறதோ அங்கே தான் உண்மையான ஜனநாயகம் மிளிரும். மிகவும் முக்கியமாக, நவீன தாராளமயத்திற்கு முடிவு கட்ட வேண்டியது அவசியமாகும். இதற்கு, சுரண்டப்படும் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் ஒற்றுமை மிகவும் முக்கியமாகும். ஆளும் வர்க்கங்கள் இத்தகு ஒற்றுமை நம்மிடையே ஏற்படக்கூடாது என்பதற்காக, மதம், இனம், சாதி போன்ற பல்வேறு பிரிவினைகளை நம்மிடையே ஏற்படுத்திட முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்துடன் இத்தகைய பிளவுவாத சித்தாந் தங்களுக்கு எதிரான போராட்டத்தையும் முன்னெ டுத்துச் செல்லவேண்டியது அவசியமாகும். வலது சாரி சக்திகளின் வளர்ச்சிக்கு எதிரான போராட்டம் என்பது ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும்.  அதாவது நாம் சமூக, கலாச்சார, அரசியல், சித் தாந்த மற்றும் பொருளாதாரப் பிரச்சனைக ளுக்காக, மக்களை எந்த அளவிற்கு சாத்தியமோ அந்த அளவிற்கு விரிவான வகையில் அணி திரட்ட வேண்டும் என்று இந்தியாவில் நாங்கள் நடத்திடும் போராட்டங்கள் எங்களுக்கு கற்பித் திருக்கிறது.     

தமிழ் மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும்

இலங்கை மக்கள் சிறந்ததோர் வாழ்க்கைக்கா கவும், மக்களின் நலன்களுக்குச் சேவை செய்தி டும் விதத்தில் ஓர் உள்ளீடான அரசியல் அமைப் பிற்காகவும் நடத்தி வரும் போராட்டம் விரைவில் வெற்றி பெறும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த வளர்ச்சிப்போக்குகள், தமிழ் மக்களின் பிரச்ச னைக்கு ஓர் அரசியல் தீர்வை உறுதிப்படுத்தும் நடைமுறையை முன்னெடுத்துச் செல்ல வழி செய்யும் என்றும் நாங்கள் நம்புகிறோம். ஒன்று பட்ட இலங்கை என்ற கட்டமைப்பிற்குள் தமிழ் பேசும் பகுதிகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்த ளிக்கக்கூடியதாக அந்த அரசியல் தீர்வு அமைய வேண்டும். அத்தகைய அரசியல் தீர்வு இலங்கை யின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தும் என்று நாங்கள் கருதுகிறோம்.  இலங்கை மக்களும், இடது மற்றும் ஜனநாயக சக்திகளால் அணிதிரட்டப்பட்டுள்ள தொழிலாளர்- விவசாயிகள் வர்க்கமும் இப்போதுள்ள நெருக்க டியை நிச்சயமாக முறியடித்து முன்னேறிடுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.  இத்தகைய வரலாற்றுப் பாரம்பரியமுள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் பணியில் தன் முழு பங்கினையும் வகித்திடும் என்றும் நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 80ஆவது அமைப்புதினமான இத்தகைய மகிழ்வான தரு ணத்தில், மீண்டும் ஒருமுறை, எங்கள் ஒருமைப் பாட்டை உங்களுக்குத் தெரிவித்து வாழ்த்தி விடை பெறுகிறேன்.  

தமிழில்: ச.வீரமணி