நீதியை தாமதப்படுத்தும், வழக்குகள் தாக்கல் செய்ய நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய ‘‘மின்னணுத் தாக்கல்’’ (e-filing) முறையை ரத்து செய்க! தமிழ்நாடு வழக்கறிஞர்களின் ஒத்த குரல் மூலம் எழுப்பப்படும் மேற்படி கோரிக்கையை உச்ச நீதி மன்றமும், உயர் நீதிமன்றமும் செவிமடுக்கும் என்று நம்புகிறோம். நீதிமன்றங்களை நாடிவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான, சரியான தீர்ப்பை வழங்கு வதே நீதிமன்றங்களின் அடிப்படைக் கோட்பாடாகும். அவ்வாறு விரைவான, சரியான தீர்ப்பை வழங்கு வதற்கு நவீன அறிவியல் முன்னேற்றத்தை நீதிமன்ற நடவடிக்கைகளில் மேற்கொள்வதில் கொள்கைய ளவில் எந்த கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. ஆனால் நீதிபரிபாலனத்தில் மிகுந்த தொடர்புடைய வழக்கறிஞர் சங்கங்களையும், ஏனைய அமைப்பு களையும், கலந்தாலோசிக்காமல், உச்சநீதிமன்றத் தின் வழிகாட்டுதல் என்ற பெயரில் படிப்படியாக தமிழ்நாட்டில் சென்னை உயர்நீதிமன்றத்தால் வழக்கு கள் தாக்கல் செய்ய அமல்படுத்தப்பட்ட கட்டாய ‘‘மின்னணு தாக்கல்’’ {e-filing} முறை வழக்காடிகளுக் கும், வழக்கறிஞர்களுக்கும் வழக்குகளை தாக்கல் செய்வதில் பல சிக்கல்களையும், காலவிரயத்தையும் அதிக பொருட்செலவையும் ஏற்படுத்தியதால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள் அந்த முறைக்கு எதிராக பலவகையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.
முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் “முன் ன்ஜாமீன்” மனு மட்டும் கட்டாய “மின்னணுத் தாக்கல்’’ பதிவு செய்யும்முறை அமல்படுத்தப்பட்டது. ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படாமல், வெறு மனே மனுவை மட்டும் தட்டச்சு செய்து முன் ஜாமீன் மனு தாக்கல் செய்வதில் அதிக சிரமங்கள் இல்லை யென்ற போதிலும், அவற்றை சரிபார்த்து, எண்கள் வழங்கி, நீதிமன்ற விசாரணைக்கு வருவதற்கு இரண்டு வாரங்கள் தேவைப்படுகிறது. அந்தச் சூழ்நிலை யில் படிப்படியாக ஏனைய வழக்குகளும் கட்டாய ‘‘மின் னணுத் தாக்கல்’’ முறையில் செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்றத்தால் சுற்றறிக்கை விடப்பட்டது.
தற்காலிக நிறுத்திவைப்பு
07.03.2024 தேதியிட்ட சென்னை உயர்நீதிமன்ற சுற்றறிக்கையின் மூலம் 01.04.2024 முதல் கட்டாய ‘‘மின்னணுத் தாக்கல்’’ முறையை விரைவாகச் செயல் படுத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிக்கை வெளியிடப்பட்டு, 01.04.2024 முதல் அம்முறை அம லுக்கு வந்தபின் வழக்குகளை தாக்கல் செய்வதில், பல சிக்கல்கள் ஏற்பட்டது.அதனால், தமிழ்நாடு முழு வதும் வழக்கறிஞர்கள் சங்கங்களுடைய கூட்டமைப்பு கள் நீதிமன்றப் புறக்கணிப்பு செய்தன. ஜனநாயக எண்ணங்கொண்ட வழக்கறிஞர் அமைப்புகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஏனைய நீதிபதி கள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஏனைய நீதிபதிகள் ஆகியோருக்கு கட்டாய “மின்னணுத் தாக்கல்’’ முறையின் குறைபாடுகளை விளக்கி மனுக்கள் அனுப்பின. சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கம், மெட்ராஸ் பார் அசோ சியேஷன், பெண் வழக்கறிஞர்கள் சங்கம், லா அசோசி யேஷன் ஆகிய சங்கங்கள் கூட்டாகவும், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களை சந்தித்து மனுக்கள் அளிக்கப்பட்டன. அதன் பேரில் இந்த கட்டாய “மின்னணுத் தாக்கல்” முறை வரும் 03.06.2024 வரை சென்னை உயர்நீதிமன்றத் தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டாய ‘‘மின்னணுத் தாக்கல்’’ முறையின் பாதகங்களை விளக்கி ஜனநாயக எண்ணங்கொண்ட 5 வழக்கறிஞர் அமைப்புகள், {1} அகில இந்திய வழக்க றிஞர்கள் சங்கம், {2} சனநாயக மற்றும் சமூக நலன்க ளுக்கான வழக்கறிஞர்கள் மையம், {3} இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், தமிழ்நாடு பிரிவு, (4) ஜன நாயக வழக்கறிஞர்கள் சங்கம், (5) சமத்துவ வழக்கறி ஞர்கள் சங்கம் ஆகியவை கூட்டாக இணைந்து துண்டுப் பிரசுரம் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மத்தியில் விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.
எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள்
இந்த கட்டாய “மின்னணுத் தாக்கல்’’ முறையில் வழக்கை தாக்கல் செய்யும்போது கீழ்காணும் நடை முறைச் சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. 1) ஒரு வழக்கறிஞர் கட்டாய ‘‘மின்னணுத் தாக்கல்’’ முறையில் வழக்கை தாக்கல் செய்வதற்கு அவரு டைய சொந்த புரோஃபைல் (Profile)- ஐ உருவாக்கி விட்டு, அந்த சொந்த கணக்கின் மூலம்தான் வழக்கை தாக்கல் செய்யமுடியும். போதுமான அளவு சர்வர் (Server) இணைப்பு இல்லாத காரணத்தால், அப்படி ஒரு வழக்கறிஞரின் தனிப்பட்ட புரோஃபைல் (Profile)- ஐ உருவாக்குவதிலேயே பல்வேறு கட்டங்களில் காலதாமதம் ஏற்படுகிறது. 2) கட்டாய ‘‘ மின்னணுத் தாக்கல்’’ முறையில் வழக்கை தாக்கல் செய்யும்போது அனைத்து வகை வழக்குக ளுக்கும், ஏற்ற வகையில் வலைதளம் வடிவமைக்கப் படாததால் சில வகை வழக்குகளை பதிவேற்றம் செய்யவே முடிவதில்லை. 3) வழக்கின் ஆவணங்களை பதிவேற்றுவதற்கான ஆவண அளவு (File Size) ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவதால் பெரிய அளவு ஆவ ணங்களை சுருக்கி பதிவேற்றம் செய்வதில் கூடுதல் காலதாமதம் ஏற்படுகிறது. ஒவ்வொருமுறை பதி வேற்றம் செய்யும்போதும் அந்த ஆவணத்தின் அளவு வலைதளத்தில் காண்பிக்கதக்க அளவில் வடிவமைக்கப்படாததால் பெரிய அளவு ஆவணங்க ளை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டி யுள்ளது. தனது அலுவலகத்தில் இணைய வசதி இல்லாத வழக்கறிஞர்கள், கணினி சேவை மையங்க ளை நாடும்போது இதற்கு பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியுள்ளது. 4) வழக்கு ஆவணங்களை பதிவேற்றுவதற்காக பயன் படுத்தப்பட வேண்டியுள்ள எம்எஸ்ஆபிஸ் வேர்டு மேக்கர் (M.S.Office Word PDF Maker), ஒசிஆர் கன்வெர்ட்டர் (OCR Convertor) ஆகிய மென்பொ ருட்களை பணம் செலுத்தி மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் கூடுதல் பணிச்சுமை மற்றும் வழக்கு செலவினங்கள் உண்டாகிறது.
மனுத்தாக்கல் நாள் பிரச்சனை
5) கட்டாய ‘‘மின்னணுத் தாக்கல்’’ முறையில் வழக்கைதாக்கல் செய்யத் துவங்கிய நாள், வழக்கு தாக்கல்செய்யப்பட்ட நாளாக (Date of Filling) கருதப்படுவதில்லை. கட்டாய ‘‘ மின்னணுத் தாக்கல்’’ முறையில்அனைத்துப் படிநிலைகளும் நிறைவுற்ற பின்னரேவழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது ஒவ்வொரு வழக்கிற்கான காலவரையறையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 6) சில நேர்வுகளில், ஒரு வழக்கு கால நிர்ணயச்சட்டத்தின்படி கடைசி நாளில் (Late of Limitation) தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்போது கட்டாய ‘‘மின்னணுத் தாக்கல்’’ முறையில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறு / தாமதம்காரணமாக சட்டப்படிஉரிமையிருந்தும் ஒரு வழக்கையே தாக்கல் செய்யமுடியாமல் வழக்காடிகள் வழக்குரிமையை இழக்க நேரிடும். 7) இந்த கட்டாய ‘‘ மின்னணுத் தாக்கல்’’ முறையில் வழக் கிற்கான நீதிமன்றக் கட்டணங்களை செலுத்துவ தற்கு பயன்படுத்தப்படும் இ - பேமெண்ட் கேட் வே (e-payment gateway) செயலிகளில் உரிய பணம் செலுத்தப்பட்டாலும்கூட செலுத்தப்பட்ட தொகை இ - ஃபில்லிங் போர்ட்டல் (e-filling Portal) - க்கு சென்றடைவதில் ஏற்படும் தாமதம் வழக்கு ஆவ ணங்களில் பதிவேற்றம் செய்வதில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. 8) இந்த கட்டாய ‘‘ மின்னணுத் தாக்கல்’’ முறையில் வழக்கிற்கான கூடுதல் நீதிமன்றக் கட்டணங்களை செலுத்துவதற்கு ஏற்ற வகையில் வலைதளம் வடிவமைக்கப்படாததால் நீதிமன்றத்தில் நேரிடை யாக அக்கட்டணங்களை செலுத்திய பிறகே வழக்கு தாக்கல் முழுமையாக நிறைவடையும். இதனால், தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது. 9) கட்டாய ‘‘மின்னணுத் தாக்கல்’’ முறையில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை சரிபார்ப்பதற்கு போது மான எண்ணிக்கையில் அலுவலர்கள் இல்லாத கார ணத்தினாலும் கூடுதல் கால தாமதம் ஏற்படுகிறது. 10) ஒரு முறை கட்டாய “மின்னணுத் தாக்கல்” முறை யில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்களில் திருத்தம்/குறைபாடு ஏதும் இருப்பில் அவ்வழக்கின் ஆவணங்களை குறைபாடு நீக்கி மீண்டும் பதிவேற்றம் செய்வதில் கூடுதல் காலதாமதமும், அதே அளவிலான பொருட்செலவும் ஏற்படுகிறது. 11) கட்டாய ‘‘மின்னணுத் தாக்கல்’’ முறையில் ஒவ்வொரு கட்டத்திலும் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும் ஒடிபி (OTP) எண்களை உள்ளீடு செய்யும்போது ஏற்படும் தொழில்நுட்ப இடர் கள் தேவையற்ற காலதாமதத்தை கூட்டுகிறது. மேற்கூறப்பட்ட சிக்கல்களை வழக்கறிஞர்கள் வழக்குகளை தாக்கல் செய்யும்போது அனுதினமும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் கீழ்க்கண்ட கோரிக்கைகள் / தீர்வுகள் முன்மொழியப்படுகின்றன. 1. கட்டாய ‘‘மின்னணுத் தாக்கல்’’ முறை தொடர்பாக தேசிய அளவில் வழக்கு மற்றும் நீதிமன்ற நடவ டிக்கைகளில் தொடர் Crazy அனைத்து தரப்பின ரிடமும் கலந்தாலோசித்தும், கருத்துக்கேட்பும் நடத்திய பிறகே நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.
இருமுறைகளையும் அனுமதித்தல்
2. ‘‘மின்னணுத் தாக்கல்’’ முறையை அனைத்து வழக்கு கள் மற்றும் வழக்கு நடவடிக்கைகளுக்கும் கட்டா யப்படுத்தாமல், கூடுதலாக, வழக்குகளை நேரடி யாக தாக்கல் செய்யும் ( Physical -filing) முறையை தொடர அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே, நீதி மன்றங்களில் விசாரணை இருமுறைகளிலும் {Hybrid -Physical & Virtual} நடைபெற அனு மதித்ததுபோலவே வழக்கு / மனுத் தாக்கல் செய்வதி லும் இருமுறைகளையும் (Hybrid- Physical & e-filing} அனுமதிப்பதே மேற்குறிப்பிட்ட சிக்கல் களை தவிர்க்க சாத்தியமான நடைமுறைத் தீர்வாகும். 3) படிப்படியாக ‘‘ மின்னணுத் தாக்கல் ’’ முறையை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை யில் இருமுறைகளில் ( Hybrid –Physical & e-filing) வழக்கு / மனுத் தாக்கல் செய்ய அனு மதித்து, நேரடியாக (Physical filing) தாக்கல் செய்யும் வழக்குகளை நீதிமன்றப் பதிவகம் (Registry) ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு முழுமையாக இ - ஃபைலிங் (e-filing) செய்து கொள்ளத் தேவையான ஏற்பாடு களை செய்ய வேண்டும். 4. சென்னை உயர்நீதிமன்றத்தில் பல கோடி ரூபாய் செலவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நீதிமன்ற ஆவணங்களை டிஜிட்டலைசேசன் (Digitization) செய்யும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ள 300-க்கு மேற்பட்ட தொழில்நுட்பப் பணி யாளர்களைக் கொண்டே மேற்குறிப்பிட்ட வகையில் நேரடியாக தாக்கல் (Physicial filing) செய்யப் படும் வழக்குகளை இ - ஃபைலிங் (e-filing) முறை யில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். 5. மின்னணுத் தாக்கல் முறை முழுமையாகவும், குறை கள் ஏதுமின்றியும் செயல்படும் வரை மேற்குறிப் பிட்ட வகையில் செயல்படுவது சாமானியர்களின் தாமதமற்ற நீதி பெறும் உரிமையை உறுதி செய்வ தாக அமையும்.
நேரடித்தாக்கல்முறை தொடரவேண்டும்
6. மின்னணுத் தாக்கல் முறை முழுமையாக, குறைகள் ஏது மின்றி செயல்படக்கூடிய சூழ்நிலையிலும், வழக்கு களை / மனுக்களை நேரடியாக தாக்கல் செய்யும் (Physical Filing} முறையைத் தொடர வேண்டும் எக்காரணம் கொண்டும், நேரடி தாக்கல் முறை முற்றிலுமாக இரத்து செய்யப்படக்கூடாது. 7. அவசர நிவாரணம் கோரி, வழக்காடிகளாலும், வழக்கறிஞர்களாலும் நீதிமன்றங்களில் / நீதிபதிக ளின் முன் நேரடியாக தாக்கல் செய்யப்படும் அவசர / இடைக்கால மனுக்களை நேரடியாக தாக்கல் செய்யும் பிஸிக்கல் ஃபைலிங் (Phy sical Filing) உரிமையானது, மிகவும் அத்தியாவ சியமான, நீதி பரிபாலனம் தோன்றிய காலந் தொட்டு உள்ள உரிமையாகும். இவ்வுரிமை, இ - ஃபைலிங் (e-filing) முறையால் தடுக்கப் படுமாயின் அது நீதி பரிபாலனத்திற்கு கேடாக அமை யும். ஆகவே, எக்காரணம் கொண்டும் அவ்வுரிமை பறிக்கப்படக்கூடாது.
நேரில் விளக்கி - நிரந்தரத் தீர்வு காண
மேற்கூறிய கோரிக்கைகளை விவாதம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூடி கடந்த 30.04.2024 அன்று சங்க உறுப்பினர்களின் கருத்துகளின் அடிப் படையில் கட்டாய ‘‘மின்னணுத் தாக்கல்’’ சம்மந்தமான அனைத்து சுற்றறிக்கைகளையும், சென்னை உயர்நீதி மன்றம் நிறுத்திவைக்க வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களையும், ஏனைய நீதிபதிகளையும் சந்தித்து கோரிக்கைகளை விளக்குவது என்றும், தமிழ்நாடு தழுவிய அளவில் அனைத்து வழக்கறிஞர் கள் சங்கங்களையும் ஒருங்கிணைத்து கட்டாய “மின் னணுத் தாக்கல்’’ சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் முடிவு செய்யப்பட்டது.
கட்டுரையாளர்: மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்