articles

img

தலித் - பழங்குடியினர் மீது தொடரும் தீண்டாமை - தாக்குதல்கள்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக செழிப்பான சமூக நீதி பாரம்பரியத்தைக் கொண்டது தமிழ் நிலம். சித்தர்கள் துவங்கி ஐயன் திருவள்ளுவர், வைகுண்டசாமிகள், வள்ளலார், அயோத்திதாச பண்டிதர், ரெட்டைமலை சீனிவாசன், இம்மானுவேல் சேகரன், தந்தை பெரியார், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் என மாபெரும் சமூக நீதிப் பாரம்பரியம் தமிழ்நாட்டுக்கு உண்டு. எனவே தான், தமிழ்நாடு சமூக நீதியில் முன்னணி மாநிலமாக இருக்கிறது.  இருப்பினும் தமிழ்நாடு முழுவதும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பாதிப்புகள் தொடர்கின்றன இது குறித்த விபரம் கீழே தந்துள்ளோம். இப்பிரச்சனையில் தமிழ்நாடு அரசு உடன் தலையிட்டு உரிய நடவடிக்கைகளையும், தீர்வினையும் மேற்கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

கும்பல் வன்முறை

1 இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் நெட்டேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்பவர் 2023 பிப்ரவரி 18 சிறுமுகை கிராமத்தில் திருவிழாவிற்கு சென்று திரும்பிய தினேஷ் என்பவரை சீர்தாங்கி கிரா மத்தைச் சார்ந்த ஹரி தாக்கியுள்ளார். இது  குறித்து நியாயம் கேட்கச் சென்ற ஜீவா, பால்ராஜ், தினேஷ் ஆகியோரை தாக்கிய தோடு மட்டுமல்லாமல் ஜீவாவின் ஆடை யைக் கிழித்து முகத்தில் சிறுநீர் கழித்துள்ள னர். பிப்ரவரி 24ஆம் தேதி தாக்குதலுக்குள் ளான ஜீவா உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் மீது பொய் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பேரில் பொய் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். 

2 கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சாத்தப் பாடி மேல்மனைக்குடி பட்டியலின மக்கள் 6.3.2023 அன்று மாசி மகம் திருவிழா வில் ஒலிபெருக்கியோடு சாமி ஊர்வலம் வந்தவர்களை மேல்மனக்குடி கிராமத்தைச் சார்ந்த ஆதிக்க சாதியினர் தடுத்து கடுமை யாகத் தாக்கி படுகாயத்தோடு ஆம்புலன்ஸில் ஏறிய பின்பும் கும்பல் தாக்குதல் நடத்தி யுள்ளனர். பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு திரும்பப் பெறப்பட வேண்டும்.

வழிபாட்டு உரிமைக்கான போராட்டம்

1 விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் அறநிலையத் துறைக்கு சொந்தமான திரௌ பதி அம்மன் கோவிலில் திருவிழாவுக்கு பட்டி யலின மக்கள் வந்தபோது வெளியூரில் பொறி யியல் படித்துக் கொண்டிருக்கும் மாணவன் கதிரவன் ஆதிக்க சாதியைச் சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் மணிவேல், தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் இழிவாகப் பேசி தாக்கி யுள்ளனர். குற்றவாளிகள் அனைவர் மீதும் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும். திரௌபதி அம்மன் கோவிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரி மையை தர வேண்டும்.

2 திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம் பட்டு ஒன்றியம் தென்முடியனூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்களுக்கு ஆலய வழிபாட்டு உரிமையை அரசு உறுதிசெய்தது. மீண்டும் அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. வழிபாட்டு உரிமைக்கு குரல் கொடுத்த பேராசிரியர் முருகன் கொலை மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்டார். பட்டியலின மக்களின் கடை ஒன்று எரிக்கப்பட்டது. பட்டிய லின மக்கள் சமூகப் புறக்கணிப்பு செய்யப் பட்டனர். மிரட்டிய நேரு மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதிவு செய்யப் பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப் பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். முத்துமாரியம்மன் கோவிலில் வழிபாட்டு உரிமை தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்கள் மீதான தாக்குதல்

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், அச்சம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி யில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அன்பு தாஸ்,சக்திவேல். இவர்கள் இருவரும் மார்ச் 21 அன்று ஆலம்பட்டியில் உள்ள சந்தோஷ் (பிற்படுத்தப்பட்ட சமூகம்)என்பவரின் கடை யில் மிட்டாய் திருடியதாக அவர்கள் இருவரை யும் கடைக்காரர் தூணில் கட்டி வைத்து அடித் துள்ளார். தகவல் அறிந்த விடுதியின் காப்பாளர் விஜயன் மாணவர்கள் இருவரையும் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார். தகவல் அறிந்து காவல்துறை நிர்வாக அலுவலரிடம் புகார் பெற்று குற்றவாளி சந்தோஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல்துறை 294(b) 323.342,506(1) IPC மற்றும் பிரிவு 75 of JJ act கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. இவ்வழக்கில் எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய் யப்பட வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிய ஆதிதிராவிட நல விடுதிக் காப்பாளர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் குடும்பத்திற்கு பாதுகாப்பும் உரிய நிவாரணமும் வழங்கிட வேண்டும். கல்வி நிலையங்களில் குறிப்பாக, திரு வண்ணாமலை, தண்டராம்பட்டு, நெடுங்காவடி ஊராட்சி நடுநிலைப்பள்ளி, ஈரோடு பெருந்துறை பாலக்கரை பள்ளி ஆகியவற்றில் நிலவும் சாதிய பாகுபாடுகள் களையப்பட வேண்டும். 

வன்கொடுமைகள் 

1 மதுரை மாவட்டம், கின்னிமங்கலம்– இறந்த சடலத்தை திருமங்கலம் செக்கானூரணி மெயின் ரோடு வழியாக எடுத்துச் செல்லும் போது பூக்கள் சிந்தக்கூடாது, வெடிவெடிக்கக் கூடாது என ஆதிக்க சாதியினர் ஆயுதங்க ளால் தாக்கியுள்ளனர். இவர்கள் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நட வடிக்கை எடுத்திட வேண்டும்.

2 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் உடன்குடி பேரூராட்சி தூய்மைப் பணி யாளர் சுடலைமாடன் பணி மூப்பு அடிப்படை யில் மேஸ்திரி பதவி உயர்வு பெற வேண்டும். ஆனால் முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆயிஷா லஞ்சம் கேட்டதோடு லஞ்சம் தர  மறுத்ததால் சாதியின் பெயரைச் சொல்லி திட்டியதில் சுடலைமாடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். குற்ற வாளி கைது செய்யப்படாத நிலையில் ஒரு மாதத்திற்குப் பின்பு குற்றவாளி காவல் நிலை யத்தில் மார்ச் 2023ல் சரணடைந்துள்ளார்.  உயிரிழந்த சுடலைமாடன் குடும்பத்திற்கு நிவாரணம் அளிப்பதோடு, குடும்பத்தில் ஒரு வருக்கு அரசுப் பணி வழங்கிட வேண்டும்.

3 சேலம் மாவட்டம் எடப்பாடி ஆடையூர் ஆர்சி ரெட்டியூர் பட்டியலினப் பெண் அம்பிகா தாக்கப்பட்ட வழக்கு. - தான் வேலை பார்க்கும் கடையின் உரிமையாளர் சரண்யாவை செங்குட்டப்பட்டி மாதையன் கடை வாசலில் நின்று ஆபாசமான வார்த்தைகளால் பேசிய தை தட்டிக் கேட்ட பட்டியலினப் பெண் அம்பி காவை மாதையன் கன்னத்தில் செருப்பால் அடித்து ஆடையைக் கிழித்துள்ளார் அம்பி காவின் கணவனும் தாக்கப்பட்டுள்ளார். எஃப் ஐ ஆர் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி மாதையன் கைது செய்யப்பட வேண்டும். அம்பிகாவிற்கு நிவாரணம் தரப்பட வேண்டும்.

4 தூத்துக்குடி மாவட்டம், வடலி கிராமம், பட்டியல் சமூகத்தைச் சார்ந்த சண்முகராஜ் எனும் கூலித் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  

5 சேலம் மாவட்டம் பெத்தநாயக்கம் பாளை யம் ராஜலட்சுமி கொலை. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை இதுவரை வழங்கப்படவில்லை.  

6 திருப்பூர் மாவட்டம் அவினாசி பேரூராட்சி கந்துவட்டிக் கொடுமையால் தற்காலிக சுகா தாரப் பணியாளர், பட்டியல் சமூக இளம்பெண்  பரிமளா படுகொலை செய்யப்பட்டுள்ளார். (மே 2022)  

7 திருவண்ணாமலை மாவட்டம் பாப்பம்பட்டு ஊராட்சி அருந்ததியர் பகுதி மீது 2022 செப்டம்பர் 18,19,20 தேதிகளில் அடியாட்கள் கொண்டு தாக்கப்பட்டுள்ளார்.  

8 திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் பெத்த நாயக்கன் பட்டி துப்புரவுத் தொழிலாளி அன்னம்மாள் மர்மமான முறையில் மரண மடைந்துள்ளார்.(ஜூன் 2022)  

9 திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் சிலுவார்பட்டி தப்பாட்டக் கலை ஞர் கணேசன் எரித்துக் கொலை செய்யப்பட் டுள்ளார்.  

10 திருச்சி மண்ணச்ச நல்லூர் கிழக்கு ஒன்றி யம் ஆயக்குடி கிராமம் பட்டியல் சாதி இளை ஞர்கள் கால்மேல் கால் போட்டு அமர்வது போல் பிளக்ஸ் வைத்ததால் தாக்கப்பட்டுள்ளனர்.  

11 புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் நாங்குப்பட்டி கிராமம் திருவிழா வில் பட்டியலின குடும்பம் மீது தாக்குதல் (மே 2022) நடத்தப்பட்டுள்ளது.

12 புதுக்கோட்டை மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி பட்டியல் சாதி வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி இந்து ஊராட்சித் துணைத் தலைவர் செருப்பால் அடித்துள்ளார். (மே2022)

13 மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி – டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்ச்சி யை தடுத்து சாதி இந்துக்கள் கலவரம் (2022 ஏப்ரல்) செய்துள்ளனர்.

14 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூ ராட்சி துப்புரவுத் தொழிலாளி இசக்கி முத்து, அஜீத்குமார் இருவரும் குப்பைகளைக் கொட்டச் சென்றபோது பேரூராட்சித் தலைவர் சுதா என்பவரின் கணவர் மோகன்லால் இசக்கிமுத்துவை சாதியைச் சொல்லி திட்டி அவமானப்படுத்தினார்.  

15 மயிலாடுதுறை மாவட்டம் கொல்லம் ஒன் றியம் மாதானம் கோயிலுக்கு முன்புள்ள பட்டியலின மக்களின் தரைக்கடை கூரைகளை ஆதிக்க சாதியினர் பிரித்து ஆற்றில் எறிந்த தோடு கடை உரிமையாளர்களின் மீது தாக்கு தல் நடத்தப்பட்டது.

16 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மூங்கில் துறைப்பட்டு அம்பேத்கர் நகர் குடியிருப்பு பகுதிகளுக்குள் சாதி ஆதிக்க வெறியர்கள் புகுந்து இருசக்கர வாகனங்கள்,  குழாய் இணைப்புகள் , வீட்டுப் பாத்திரங்கள் ஆகியவைகளை உடைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. (18.03.2023)  

17 திருவண்ணாமலை மாவட்டம் மோட்டூர் கிராமம் பட்டியலின இளைஞர் போனில் பேசிக்கொண்டிருந்த போது குடித்துவிட்டு வந்த பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த நபர் ஒருவர் கடுமையாக திட்டியதால் ஏற்பட்ட கை கலப்பை காரணமாக வைத்து பட்டியலின குடியிருப்பிற்குள் புகுந்து  17.01.2023 அன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

18 திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் செட்டிப்பட்டி அருந்ததிய மக்கள் சுடு காட்டுப்பாதை கேட்டு போராடியதற்கு அவர் கள் மீது பொய் புகார் தரப்பட்டு 3 பெண்கள் உட்பட 11 பேர் மீது ஆதிக்க சாதியினர் தாக்கு தல் நடத்தினர். (02.12.2022)

19 மதுரை சிலமலைப்பட்டி பட்டியலின மக்களின் சுடுகாட்டுப்பாதையை ஆதிக்க சாதியினர் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிர மிப்பை அகற்றக்கோரி நடத்திய சாலை மறி யலில் காவல் துறையினர் பட்டியலின மக்கள் மீது கடும் தாக்குதலை நிகழ்த்தினர். (ஜனவரி 2023)

20 மதுரை மாவட்டம் காயம்பட்டி பொங் கல் திருநாளன்று ஆதிக்க சாதியினர் பகுதிக்குள் வேகமாக வாகனம் ஓட்டி வந்ததாக சொல்லி இளைஞரையும் அவரது மனைவி குழந்தைகளை தாக்கியதோடு இல்லாமல் பெண்ணின் சேலையை உருவி ஆதிக்க சாதியினர் அவமானப்படுத்தினர். (ஜனவரி 2023)

21 கரூர் புணவாசிபட்டி கிருஷ்ணராயபுரம் வட்டம் வ.உ.சி பெயர் பலகையில் சாணி யை அடித்ததாக சொல்லி பட்டியலின இளை ஞரை வழக்குப் பதிவு செய்யாமல் காவல் துறையினர் ஒளித்து வைத்திருந்தனர்.  

22 செங்கல்பட்டு செய்யூர் வட்டம் கானத் தூர் வண்ணார் சமூகத்தைச் சார்ந்த நந்தகுமார் வீட்டை ஆதிக்க சாதியினர் தீயிட்டுக் கொளுத்தினர் .

 23 சிவகங்கை இந்திரா நகரில் அருந்த திய சமூகத்தை சார்ந்தவர் பொதுவெளி யில் வைத்து ஆதிக்க சாதியினரால் அடிக் கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார்.

 24 தூத்துக்குடி ஏரல் பிரகாசபுரம் கூட்டு றவு வங்கி ஊழியரான தனசிங் (பட்டியலினம்) என்பவரை வங்கி மேலாளர் சாதியை சொல்லி திட்டி இழிவாக நடத்துதல்.  இப்பிரச்சனைகள் மீது உரிய முறையில் தலையிட்டு குற்றவாளிகள் அனைவரின் மீதும்  சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்வ தோடு, பாதிக்கப்பட்ட பட்டியலின குடும்பங்களுக்கு உரிய முறையில் இழப்பீடு வழங்கிட வேண்டும்.

மனை / நிலம் / பாதை மீட்பு

1 விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றி யம், கள்ளிக்குளம், பி. வில்லியனூர் கிராமம் பட்டியலினப் பெண் அஞ்சலைக்கு சொந்த மான நிலத்தை அபகரிக்க முற்பட்ட திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரனை தட்டி கேட்ட தால் அஞ்சலை தாக்கப்பட்டு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். குற்றவாளி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப் பட வேண்டும்.

2 சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் நாகநாதபுரம் – 12 அருந்ததியர் கள் வீடு கட்டுவதை சாதி இந்துக்கள் தடுக்கி றார்கள். நீதிமன்றத் தடையாணையை திரும்பப் பெற்று நிலத்தை அரசு ஒப்படைக்க வேண்டும். (செப்டம்பர் 2022)

3 ஓசூர் – ஆதி திராவிட நலத்துறையால் பட்டி யல் சாதி மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி. துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். (ஜூன் 2022)

4 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றி யம் படந்தபுளி கிராமம் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டுக்கு மழைக் காலங்களில் எரிமேடை காத்திருக்கும் அறை அமைத்துத் தர வேண்டும். (அக் டோபர் 2022)

5 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றி யம் படந்தபுளி கிராமம் அருந்ததியர் சமூக மக்கள் வாழும் பகுதியை வருவாய் கிராமத்தி லிருந்து பிரித்து பத்து கிலோ மீட்டர் உள்ள கிராமத்துடன் இணைத்ததால் இன்னல்க ளுடன் தவித்து வருகின்றனர். (அக்டோபர் 2022)

6 சேலம் மாவட்டம் நங்கவள்ளி பேரூராட்சி பாசக்குட்டை கிராமம் அருந்ததியர் குடும் பங்களுக்கு மயானம் இல்லாததால் ரோட்டின் ஓரத்தில் அடக்கம். மயானத்துக்கு இடம் ஒதுக்கப்படவேண்டும். (ஏப்ரல் 2022)

7 திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் சிறுபுழல்பேட்டை எம்ஜிஆர் நகர் – அருந்ததியர் மக்களின் நிலம் ஆக்கிரமிப்பு. தொடர் போராட்டங்களுக்குப் பிறகு நிலம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. (மே 2022)

8 திருவண்ணாமலை மாவட்டம் எடப்பாளை யம் கிராமம் எம்ஜிஆர் நகர் – பழங்குடி சமூகத்தைச் சார்ந்த ஏழுமலையின் நிலம் மற்றும் வீட்டை அகற்ற வருவாய்துறை முயற்சி செய்து வருகின்றனர். (ஜூன் 2022)

9 திருச்சி துறையூர் ஒன்றியம் செல்லியம் பாளையம் அருந்ததியர் குடியிருப்பு சாலை பராமரிப்பு இன்மையால் உள்ளது. (மே 2022)

10 திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், ராம நாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமநாத புரம், சொட்டக்களம் புதூர் ஆகிய ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் சுமார் 150 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மயானப் பாதை இல்லை. தொடர்ச்சியாக மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. (ஜனவரி 2023)  மேற்கண்ட பிரச்சனைகளில் அரசு உரிய முறையில் தலையிட்டு தீர்வு காண வேண்டு மென கேட்டுக் கொள்கிறோம்.

பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் மீதான பாரபட்சம்

பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர் கள் மீதான பாரபட்சம், பாகுபாடுகள் களைவ தற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய அறி வுறுத்தல்களை மேற்கொள்ள வேண்டும். அனைத்து பட்டியலின ஊராட்சி மன்றத் தலை வர்களும் ஜனநாயகப் பூர்வமாக இயங்குவதை உறுதி செய்திட வேண்டும். சுதந்திர தினக் கொடி ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும். 

தீண்டாமை

1 2022ல் தமிழ்நாட்டில் பல இடங்களில் தீண் டாமை சுவர்கள் அம்பலத்துக்கு வந்து தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் தொடர் தலை யீட்டின் பேரில் அரசு நிர்வாகம் நடவடிக்கை யும் எடுத்து சுவர்கள் அகற்றப்பட்டுள்ளன. உ.ம். தோக்கமூர், வாழவந்தான் கோட்டை (திருவள்ளூர்), பாடலூர் (பெரம்பலூர்). இது போன்ற தீண்டாமை சுவர்கள் தமிழ்நாட்டில் பிற பகுதிகளிலும் உள்ளனவா என்பதை அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்த வேண்டும்.

2 சென்னைப் பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு மீறல், சாதியப் பாகுபாட்டு அணுகு முறை குறித்து 2022 ஆகஸ்ட் 22 தேதியிட்ட தமிழ்நாட்டின் முதல்வர், முதன்மை செயலா ளர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆகியோருக்கு தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. இருப்பினும் முற்றிலும் களைவ தற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.  

3 திண்டுக்கல் பழனி வட்டம் ஆயக்குடி பேரூ ராட்சி டிகேஎன் புதூர் பொதுக் குளத்தை ஆக்கிரமிப்பு செய்த ஆதிக்க சாதியினரை தடுத்ததற்காக அருந்ததியர் மக்கள் சாதி விலக்கம் செய்யப்பட்டனர்.  

4 திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் ஒன்றியம் உப்பரிப்பட்டி கிராமம் அருந்த தியர் மக்களின் கோயில் சாதி இந்துக்களால் முடக்கம் செய்யப்பட்டுள்ளதை மீட்டெடுத்து அம்மக்களின் வழிபாட்டு உரிமையை உறுதி செய்திட வேண்டும்.

5 திருவள்ளூர் மாவட்டத்தில் ராஜா நகரம் தலித் மக்களுக்கு அவர்களுக்கு ஒதுக்கிய இடத்தில் உடனடியாக குடியமர்வு செய்திட வேண்டும். தோக்கமூர் தலித் மக்கள் வீட்டை சுற்றி எழுப்பி உள்ள சுவரை அகற்றிடவும், அரசு பொது நிலத்தில் கம்பி வேலி அமைக்க எழுப்பியுள்ள சிமெண்ட் போஸ்ட்டுகளை அகற்றிடவும், 92 தலித் குடும்பங்களுக்கு ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும். விஷ்ணுவாக்கம் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைத்துத் தரவும் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

சாதி ஆணவப் படுகொலைகள் / அச்சுறுத்தல்கள்

தஞ்சாவூர் மாவட்டம், சோழபுரம் பேரூராட்சி, சாதி மறுப்புத் திருமண தம்பதிகள் சரண்யா மோகன் படுகொலை சம்பவத்தில் உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மலக்குழி மரணங்கள்

1 திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கரும்புக் குப்பம் சிப்காட் ஆலை கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி ஹரி  என்னும் தொழிலாளி மரணம் (ஜூலை 2022)

2 சென்னை பெருங்குடி கிரீன் ஏக்கர்ஸ் அப் பார்ட்மெண்ட்ஸ் – கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்யும் போது தட்சிணாமூர்த்தி, பெரியசாமி இரு தொழிலாளிகள் பலி (ஜூன் 2022)

3 சென்னை வேளச்சேரி கல்லுக்குட்டை – சென்னை வெட்டுவாங்கேணி நீலாங்கரை யைச் சார்ந்த காளிதாஸ் கழிவு நீர் தொட்டி யை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி மரணம் ( ஜூலை 2022)

4 காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு - திருமலை, ரங்கநாதன், நவீன் குமார் ஆகிய தொழிலாளிகள் சத்தியம் கிராண்ட் ரிசார்டில் கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி மரணம் (அக்டோபர் 2022)

5 சென்னை ஆவடி ஆப்டிமா அபார்ட்மெண்ட் – செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் போது திண்டிவனத்தைச் சார்ந்த முத்துகுமரன் விஷவாயு தாக்கி மரணம் (மே 2022)  ஓராண்டில் இப்படி நிறைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. எனவே, கையால் கழிவகற்று வோர் பணி அமர்த்துதல் தடை மற்றும் அவர்க ளின் மறுவாழ்வுச் சட்டம் 2013 ஐ உறுதியுடன் செயல்படுத்திட வேண்டும். இச்சட்டத்தின் படி குற்ற வாளிகள் தண்டிக்கப்படவேண்டும். பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு உறுதி செய்யப்படவேண்டும்.     உலகின் பல நாடுகளில் உள்ளதைப் போல்  புதிய தொழில்நுட்பமும் கருவிகளும் எந்திரங்க ளும் உருவாக்கப்படவேண்டும். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துப்புரவுப் பொறியியல் துறையை உருவாக்கி நிதி ஒதுக்கீடு செய்து புதிய எந்திரங்கள், கருவிகள் உரு வாக்கிட வேண்டும்.  அண்மையில் சென்னை ஐஐடியில் உரு வாக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு இயந்தி ரத்தை சோதனைக்கு உட்படுத்தி தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்திட வேண்டும்.  

பாலியல் வன்கொடுமை

1 சென்னை ஐஐடியில் படித்து வந்த மேற்கு வங்க மாணவிக்கு நேர்ந்த சாதியப் பாலியல் வன்கொடுமை  

2 நெல்லை மாவட்டம் ஆலங்குளம் வட்டம் முத்துமலை கிராமம் 9ஆம் வகுப்பு பட்டி யல் சாதி சிறுமி பாலியல் வல்லுறவு (நவம்பர் 2022)

3 வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் பரத ராமி ஊராட்சி திருவள்ளுவன் நகர் அருந்த தியர் சிறுமியை கேலி, கிண்டல், அத்துமீறல், காரில் கடத்த முயற்சி, பாலியல் துன்புறுத்தல், வீடு புகுந்து தாக்குதல் (செப்டம்பர் 2022)

4 புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கருக் காக்குறிச்சி கல்லூரி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்ய முயற்சி (ஜூன் 2022)

5 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றி யம் நாகையன்கோட்டை பட்டியலினப் பெண்ணை 2 ஆதிக்க சாதி வெறியர்கள் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த னர். புகார் தந்ததை காவல் துறை ஏற்க வில்லை. (04.02.2023)  இக்குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி டுவதோடு, இக்குற்றங்களை தடுப்பதற்கு கறா ரான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 

வழக்குகள்

1 அரியலூர் நந்தினி வழக்கு – குற்றவாளிகள் தரப்பில் 120 பி சேர்க்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்காலிக தடை. அரசு விரைந்து தடையாணையை விலக்கி வழக்கை விரைவுபடுத்த வேண்டும்.

2 உசிலம்பட்டி விமலாதேவி சாதி ஆணவக் கொலை வழக்கு – விரைவுபடுத்த அரசுத் தரப்பில் நடவடிக்கைகள் தேவை.

3 ஓசூர் நந்தீஸ் - சுவாதி வழக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப் பணி விரைவில் வழங்கப்பட வேண்டும்.

4 வேலூர் மாவட்டம் வாலாஜா அம்பேத்கார் நகர் படவேட்டமன் கோவில் தீண்டாமைச் சுவர் – நீதிமன்றத் தீர்ப்பை அமலாக்கி ஆக்கிர மிப்புகள் அகற்றப்படவேண்டும். 5 சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத் தில் சுவாதி கொலை வழக்கு – ராம்குமார் மரணத்தை மறுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும். 

காவல்துறையின் சட்டவிரோத நடவடிக்கைகள் 

1 மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் அணைக் கரைப்பட்டி கிராமம் – காதல் திருமணப் பிரச்சனையில் சகோதரரை விசாரிக்கும் போது காவல்நிலைய மரணம்.  

2 திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம் பட்டு தட்டரணை – குறவன் இனத்தை சார்ந்த  தங்கமணி காவல்நிலையத்தில் மரணம் (மே 2022)

3 வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் குகைய நல்லூர் பட்டியலின இளைஞர் சரத் குமாரை காவல் உதவியாளர் சாதிய ரீதியாக துன்புறுத்தியதால் தீக்குளித்து தற்கொலை (ஏப்ரல் 2022)

காவல்துறையின் கடமை

1 எஸ்சி - எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கும் குற்றம் நடைபெற்ற தினத்துக்கும் இடையிலான காலதாமதத்தை காவல்துறை தவிர்க்க வேண்டும்.  

2 பாதிக்கப்பட்டவர்கள் மீதே எஸ்சி - எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு இணை யான எதிர் வழக்குகளாக பொய்ப் புகார்களின் அடிப்படையில் எவ்விதமான விசாரணையும் மேற்கொள்ளாமல் கொலை மிரட்டல், பெண் களை துன்புறுத்துதல் சட்டம், குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் சட்டம் ஆகிய மிகக் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் உண்மைக்கு மாறாக வழக்கு பதிவு செய்யப்படுவது முற்றிலும் தடுத்து நிறுத்தப் பட வேண்டும்.  

3 உரிய காலத்தில் குற்றப்பத்திரிகை தயார் செய்திட வேண்டும்.

4 பாதிக்கப்பட்டவர்கள் கோருகிற அனைத்து வழக்குகளிலும் அரசு சிறப்பு வழக்கறிஞர் கள் நியமிக்கப்படவேண்டும்.

5 அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படு கிற நடைமுறையை எளிமையாக்கிட வேண்டும்.

6 மாநிலம் முழுவதும் சிறப்பு நீதிமன்றங்க ளில் நியமிக்கப்பட்டிருக்கிற அரசு வழக்கறி ஞர்களுக்கு சட்டப் பயிற்சிகள் அளித்து இவ்வழக்குகளை திறம்படவும் விரைவாகவும் நடத்திட அறிவுறுத்திட வேண்டும்.

7 பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சி யங்களின் உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டும் 8 சட்டப்படியான தீருதவி, அரசு வேலை, நிலம் ஆகியவற்றை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிட அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான நிதி ஒதுக்கீட்டை செய்திட வேண்டும்.