articles

img

தன் வினை தன்னைச் சுடும் மந்த நிலையை நோக்கி அமெரிக்கா - க.ஆனந்தன்

அமெரிக்காவில் மிகப் பெரிய பாக்ஸ் ஸ்டோர்ஸ் என்றழைக்கப்படும், சூப்பர் மால்களில் உலகின் அனைத்துப் பகுதி களிலிருந்தும் தருவிக்கப்பட்ட பொருட்கள், மக்கள் நுகர காத்துக் கிடக்கும். தாய்லாந்தின் கியோசா முதல், சீன டப்ளிங், மத்தியத் தரைக் கடல் உணவுகள், மெக்சிகன் உணவுகள், மத்திய தரைக்கடல் பகுதி உணவுகள், கொரிய, ஜப்பானிய தொழில்நுட்ப கருவி கள், சீன பொருட்கள், வங்க தேச துணிகள்என கிடைக்காத பொருட்களே இருக்காது. உலகின் எந்த மூலையிலும் விளைவிக்கக்கூடிய விளை பொருட்க ளில் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்தவை அந்த மால்க ளுக்கு அனுப்பப்படுகிறது. 

கடைகளில் காலி அலமாரிகள் 

அப்படிப்பட்ட அந்த அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக குழந்தைகளுக்கான உணவுப் பொருட் களே கிடைக்கவில்லை. மிகப்பெரிய மால்களிலும், சூப்பர் ஸ்டோர்களிலும் குழந்தை உணவுப் பொருள் அலமாரிகள் காலியாக கிடக்கின்றன. குழந்தை ‘ஃபார்முலாக்களை’ வழங்கி வந்த அமெரிக்கர்கள், அந்த குழந்தை உணவு கிடைக்காமல் திகைத்து நின்ற னர். இராணுவத்தில் உள்ள கையிருப்புகள் முதலில் வெளியிடப்படும் என ஜனாதிபதி அறிவித்தார். பின்னர் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இராணுவத்திலிருந்து உற்பத்தி செய்து அளித்தும் நிலைமையில் சிறிதளவே முன்னேற்றம் உள்ளது.  குழந்தை உணவுப் பொருட்கள் மட்டுமல்ல; மேலும் பல பொருட்களுக்கு தட்டுப்பாடான நிலை நிலவுகிறது. உதாரணமாக பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் டாம்பன் தற்போது தட்டுப்பாடாக உள்ளது. பெருந்தொற்றின் தொடக்கத்தில் மக்கள் டாய்லட் பேப்பருக்கு அடித்துக் கொண்டதைப் போல தற்போது கடைகளில் எப்போதாவது ஸ்டாக் வந்தால் பெண்கள் அடித்துக் கொள்ளும் நிலையில் உள்ளனர்.  அடுத்து உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அமெரிக்க ஏகாதி பத்தியம் சர்வதேச உணவு வர்த்தகத்தை கட்டுப் படுத்துவதால் தன்னை மட்டும் காத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும்  மத்திய, தென் அமெரிக்க நாடுகள் உணவுப் பற்றாக் குறையின் தாக்கத்தை சந்திக்க வேண்டியிருக்கும் நிலை உருவாகியுள்ளது. 

இத்தகைய தட்டுப்பாடு ஒரு சோசலிச நாட்டில் வந்திருந்தால், அந்த காலி அலமாரிகளை உலகம் முழு வதும் உள்ள செய்தி நிறுவனங்கள் 24 மணி நேரமும் காட்டி, சோசலிசத்தின் தோல்வியாக சித்தரிக்கப் பட்டிருக்கும். அமெரிக்காவில் தட்டுப்பாடு என்றால், அது அமெரிக்காவின் உள்நாட்டு பிரச்சனை போல அமெரிக்காவில் மட்டும் விவாதிக்கப்படுகிறது. இவை தவிர வேறு சில பிரச்சனைகளையும் சாதாரண அமெரிக் கர்கள் சந்திக்கின்றனர்.

சரிவடையும் உற்பத்தியும் நுகர்வும்

உடல் திடீரென வீங்கத் தொடங்கினால் சிறுநீரகங்க ளின் செயல்பாட்டை மருத்துவர்கள் சந்தேகிப்பார் களே, அதைப் போல், அமெரிக்காவில் கடைகளில் சாமான்கள் இல்லை என்பது போலவே வேறு பல புற அறிகுறிகள் வலுவாக தோன்றத் தொடங்கியுள்ளன.  இந்த மே மாதம் அமெரிக்காவில் வீடு கட்டுவது மிகப் பெரிய சரிவை சந்தித்ததாக வர்த்தகத் துறை அறிக்கை தெரிவிக்கிறது. வீடு கட்டும் கடனுக்கான வட்டி விகிதம் கடந்த 13 வருடங்களில் இல்லாத அளவு உயர்ந்துள் ளது.  பிலடெல்பியா உட்பட மத்திய அட்லாண்டிக் பகுதி களில் பல தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தியை குறைத்து விட்டதாகவும் இரண்டு வருடத்தில் இதுவே மிகவும் குறைவான உற்பத்தி என்றும் பிலடெல்பி யாவின் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த மே மாதத்தில் அமெரிக்கர்கள், சில்லரை வர்த்தகத்தில் செலவிடுவதை மிகவும் குறைத்துவிட்டதாக காமர்ஸ் துறை தெரிவிக்கிறது. இரண்டாவது காலாண்டில் முதல் காலாண்டு போலவே மொத்த உள்நாட்டு உற்பத்தி இருக்கும் என அட்லாண்டா ரிசர்வ் வங்கி கணித்துள் ளது, கடந்த ஜூன் 30 தேதி முடிந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.5 சதவீதம் வீழ்ச்சியடைந் தது(வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் ஜூன்17).

‘கரடி’ ஆதிக்கத்தில்  அமெரிக்க பங்குகள்

மற்றொரு புறத்தில் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த அமெரிக்க பங்கு சந்தைகள் “பங்கி ஜம்ப்” செய்வது போன்று கடும் சரிவை சந்திக்கிறது. கடந்த வியாழனன்று(ஜூன் 16) அமெரிக்காவின் தொழிற்சாலை சராசரி புள்ளிகளான “டோ ஜோன்ஸ்” 30,000 புள்ளிகளுக்கு கீழே சென்றுள் ளது. இது ஆண்டுக்கு ஆண்டு (YTD -Year To Date) என்ற விகிதப்படி 16 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.  புளு சிப் கம்பெனிகளின் பங்குகள் இந்த ஆண்டு (YTD) 18 சதவீதம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.  எஸ் அண்ட் பி 500 (அமெரிக்காவின் முன்னணி 500 நிறுவனங்களின் பங்குகள்) இந்த ஆண்டு (YTD) 23சதவீதம் வீழ்ச்சிய டைந்துள்ளது. அமெரிக்காவின் தொழில்நுட்ப பங்கு களான நாஸ்டாக்  மிக அதிக வீழ்ச்சியான 32 சதவீத சரிவை இந்த ஆண்டு (YTD) சந்தித்துள்ளது (வால்ஸ்ட்ரீட் ஜெர்னல்  ஜூன்17). அமெரிக்காவின் பங்கு சந்தை கரடிகளின் கட்டுப்பாட்டில் சென்று விட்டதாகவும், காளையின் ஓட்டம் முடிந்து விட்டதென்றும் தெரிவிக்கின்றனர். எஸ்.அண்ட் பி 500 பங்குகள் 29,000- அதற்கு கீழ் சென்றால் அது கரடி சந்தை என்ற வரையறை வைத்துள்ளனர். ஒரு முறை கரடி தனது கூரிய நகங்களின் பிடியில் சந்தையை கைப்பற்றினால் அதனை மீண்டும் வெளி யில் எடுக்க மிக நீண்ட காலம் பிடிக்கும் என பொரு ளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். 

40 ஆண்டுகளில்  இல்லாத பணவீக்கம்

மற்றொரு புறத்தில் அமெரிக்காவில், நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் 8.6 சத வீதமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோலின் விலை ஒரு கேலனுக்கு 2 டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் மிக மிக அதிகமாக உயர்ந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விலையேற்றமே பணவீக்கத்திற்கு காரணம் என நிதித்துறை தெரிவிக்கிறது. அமெரிக்க பொருளாதாரம் தீவிர மந்த நிலையை (Recession) நோக்கி செல்கிறது. சில தனிப்பட்ட பொரு ளாதார அறிஞர்கள் அமெரிக்க பொருளாதாரம் ஏற்கெ னவே மந்த நிலையை எட்டிவிட்டதாக தெரிவிக்கின்ற னர். அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பாவல், அமெரிக்கா மந்த நிலையை தவிர்த்துவிட லாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  ஆனால்  அதிகாரப்பூர்வமான அறிவிப்பை, என்பிஇஆர் (NBER) என்ற அமைப்பு, உற்பத்தி, சில்லரை வர்த்தகம், வீடு களின் வருமானம் ஆகியவற்றை பல மாதங்களுக்கு ஆய்வு செய்து அறிவிக்கும்; ஆகவே அதற்கு சற்று அதிக காலம் எடுக்கும் என வால்ஸ்ட்ரீட் ஜர்னல் ஏடு தெரிவிக்கிறது.  இதற்கிடையில் ஆகஸ்ட் 24 அன்று அமெரிக்கா வின் வர்த்தக அமைச்சகம் அடுத்த காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சிக்கான புள்ளிவிவரத்தை வெளி யிட்டுள்ளது.தொடர்ந்து இந்த காலாண்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) சுருங்கியுள்ளதாக தெரி வித்துள்ளது. இது தொடர்ச்சியான இரண்டு காலாண்டு களாக பொருளாதாரம் சுருங்கி வருவதை காட்டுகிறது. முதல் காலாண்டில் 1.6சதவீதம் அளவிற்கு சுருங்கிய பொருளாதாரம் தற்போது மீண்டும் சுருங்கியுள்ளது. ஆனால் வேலை வாய்ப்பில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக அரசு எதிர்பார்த்த 0.8 சதவீதம் என்ற சுருக்கத்தைவிட தற்போது சற்று மேம்பட்டு 0.6 சத வீதமாக பொருளாதாரம் சுருங்கியுள்ளது. இது தொடர்ந்து இதே நிலை நீடித்தால் என்பிஇஆர் மந்த நிலை என்பதை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படும். 

வேலைவாய்ப்பு ‘அதிகரித்தும்’ நிலைமை மோசமாக உள்ளது

அமெரிக்காவில் பைடன் நிர்வாகம் வந்த பிறகு வேலை வாய்ப்பில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு விட்டதாக பைடன் பல முறை பெருமையுடன் சமூக ஊடகங்களில் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இப்போது அமெரிக்காவின் பொருளாதார நிலை யில் ஒரே வெள்ளிக் கீற்று, வேலை வாய்ப்பு அதிகரித் துள்ளதும், வேலையின்மை மிகக் குறைவாக இருப்ப தும்தான் என்கிறார்.  அதற்கு காரணம் பைடன் நிர்வாகம் கொண்டுவந்த ‘பில்ட் பேக் பெட்டர்’ என்ற 1.7 டிரில்லி யன் டாலர் திட்டம் மற்றும் 1 டிரில்லியன் கட்டுமான திட்டங்கள். இதை இரு கட்சிகளும் இணைந்து நாடாளு மன்றத்தில் நிறைவேற்றியதால் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்கின்றனர் பொருளாதார வாதிகள். 

மந்த நிலைக்கு காரணம் என்ன?

ஆனால், இவ்வளவு வேலை வாய்ப்புகள் உரு வாக்கியும் அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்வதன் காரணத்தை மட்டும் அமெரிக்காவின் எந்த முன்னணி ஊடகமும் சொல்வதில்லை. அதற்கு மிக முக்கிய காரணம், அமெரிக்கா இதர நாடுகள் மீது விதித்த பொருளாதாரத் தடைகளே என்பது அமெரிக்காவின் கார்ப்பரேட் அல்லாத ஊடகங்கள் விவாதத்தில் முன்வைக்கின்றன. கியூபா, நிகரகுவா,  வெனிசுலா, ஈரான், இராக், சிரியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் மீது மனிதாபிமானமற்ற பொருளாதார தடைகளை விதித்த போது உலகப் பொருளாதாரமோ அல்லது அமெரிக்க பொருளாதாரமோ பெரிய அளவிற்கு பாதிப்பிற்குள்ளாகவில்லை. 

அமெரிக்காவையே அதிகம் பதம் பார்த்தது சீனாவிற்கு எதிரான தடைகள்

டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த போது அமெரிக்க நிர்வாகம்,பொருளாதாரத்தில் தனது மேலாதிக்கம் பாதிக்கப்படுகிறது என்பதற்காக சீனாவுடன் புதிய பனிப்போர் தொடங்கியது. அந்த பனிப்போர் வெளிப் படையாக வெடிப்பதற்கு முன்பே சீனாவின் 5ஜி தொழில் நுட்பம் எந்த விதத்திலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்பது உறுதியாகியிருந்தும், கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு இரகசிய கதவு மென் பொருளில் இருக்கலாம் எனக் கூறி வாவே நிறுவனத்திற்கு தடை விதித்தது அமெரிக்கா. தற்போது வெளியாகியுள்ள ஆய்வுகள் அமெரிக்க அரசுக்கு பல பில்லியன் டாலர் அளவிற்கு நஷ்டம் என்றும், மேலும்  புதிய தொழில் நுட்பம் அறிமுகத்திற்கு கால தாமதமாகியதால் அமெரிக்க பொருளாதாரத்தின் வேகம் தடைபட்டதா கவும் தெரிவிக்கிறது.  சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாத அமெரிக்கா, வெளிப்படையாக பனிப்போர் நடவடிக்கைகளை அறி வித்தது. அதன் ஒரு பகுதியாக டிரம்ப்  2019 மே 10  அன்று சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்க ளில் 50 சதவீதப் பொருட்களுக்கு 25% அதிக வரி விதிப்பை அறிவித்தார். பின்னர் ஆக1,2019 தேதியன்று மீதமுள்ள பொருட்கள் மீது 10% கூடுதல் வரி விதிப்பு செய்தார். அதன் பிறகு வந்த பைடனும், அமெரிக்க நிர்வாகத்தின் தொடர் நடவடிக்கையாக பனிப்போர் நடவடிக்கையை தொடர்வதை குறிக்கும் வகையில் மேலும் பல பொருட்களுக்கு அதிக வரி விதிப்பை விரிவுபடுத்தினார். 

சீனாவிற்கு எதிரான தடைகளைத் திரும்பப் பெறும் அமெரிக்கா

இந்த வரி விதிப்பில் மிகவும் பாதிக்கப்பட்டது அமெரிக்க சாதாரண மக்கள்தான். அவர்கள் பயன் படுத்தும் பல வீட்டு சாமான்கள், சைக்கிள்கள் போன்ற வற்றிற்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பின் போதே பல பொருளாதார வல்லுனர்கள் இதில் சீனாவிற்கு பாதிப்பைவிட அமெரிக்கர்களுக்கே அதிக இழப்பு ஏற்படும் என்றனர். அது இன்று உண்மை யாகியுள்ளது. தற்போது பைடன் அரசு பல பொருட்க ளுக்கு அந்த கூடுதல் வரி விதிப்பை திரும்பப் பெற தயாராகியுள்ளது. அமெரிக்க வர்த்தக செயலர் ஜினா ரிமாண்டோ,  “எந்தெந்த பொருட்களுக்கு வரி விதிப்பை திரும்பப் பெறலாம் என்பதை பார்க்குமாறு பைடன் கேட்டுள்ளார்; நாங்கள் அந்த பணியிலிருக்கிறோம்” என தெரிவித்துள்ளார். 

ரஷ்யாவிற்கு எதிரான தடைகளே தற்போதைய நிலைக்கு காரணம்

தற்போது உணவுப் பொருட்கள் மற்றும் எரி பொருள் விலையேற்றத்திற்கு முக்கிய காரணமே ரஷ்யா மீது ‘மூளையின்றி’ விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை களே காரணம். இந்தியா ரஷ்யாவிடமிருந்து ஒரு பேரல் கச்சா எண்ணெய்யை 70 டாலர் விலைக்கு வாங்கு கிறது. அதுவும் ரூபிள்-ரூபாய் வர்த்தகத்தில். ஆனால் அமெரிக்காவோ பேரல் 120 டாலருக்கு இறக்குமதி செய்கிறது. மேலும் அமெரிக்காவில் பெட்ரோலிய நிலையங்கள் முழுமையாக தனியார்மயம் என்ப தால், சர்வதேச விலையேற்றத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவின் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் மக்களை கொள்ளையடிக்கின்றன.  அமெரிக்காவும், இதர நேட்டோ நாடுகளும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை தடை செய்வதாக அறிவித்தாலும், அவை அடுத்த ஆண்டி லிருந்துதான் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்படு கிறது. இந்த நிலையில் அவர்களை ஆட்டிப் பார்க்க ரஷ்யா தொழில் நுட்ப காரணங்கள் என்று அறிவித்து ஜெர் மனிக்கு ஏற்றுமதியாகும் எரிவாயுவை சற்று துண்டித்த வுடன், ஜெர்மனி மட்டுமல்லாது, ஐரோப்பா முழுவ தும் ஒப்பாரி வைக்க தொடங்கியது கிளைக்கதை. அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் ரஷ்யா விற்கு எதிராக அறிவித்த எரிபொருள் உட்பட அனைத்து பொருளாதாரத் தடைகளும் அமெரிக்காவின் ஏழை மற்றும் நடுத்தர உழைக்கும் மக்களையே பாதிக்கிறது. ரஷ்யா பொருளாதாரத்தினை ஜிடிபி டாலர் அடிப்படையில் பார்த்தால் உலகின் 11வது பொருளாதாரம். ஆனால், வாங்கும் சக்தி சமப்பாடு என்ற அடிப்படையில் பார்த்தால் (Purchase power parity) ஜெர்மனிக்கு சம மான பொருளாதாரம், உலகின் 6வது பெரிய பொரு ளாதாரம். உணவுப் பொருள் உற்பத்தி, இயற்கை எரிவாயு, எண்ணெய், உரங்கள் என்றால் உலகின் மிகப்பெரிய உற் பத்தியாளர் மற்றும் ஏற்றுமதி நாடாக ரஷ்யா உள்ளது. 

ரஷ்யா மீதான தடையால் தனிமைப்பட்டு நிற்கும் ஜி-7 நாடுகள்

இந்த நிலையில் ரஷ்யாவின் மீது கண்மூடித் தனமாக பொருளாதாரத் தடைகளை விதித்து, அங்கிருந்து உணவுப் பொருட்களை யாரும் வாங்கத் தடை, எரிபொருள் பெறத்தடை என்றால், அதன் பாதிப்பு அதனை அமல்படுத்தும் நாடுகளுக்குத் தான். ஆகவே தான், உலகின் பெரும்பாலான நாடு கள் ஜி7 நாடுகள் அறிவித்த பொருளா தாரத் தடைகளை அமல்படுத்த மறுத்து வருகின்றன.

அமெரிக்கா தனது வெளியுறவு அமைச்சகத்திலி ருந்தும், பாதுகாப்புத் துறையிலிருந் தும் செயலாளர் வரையிலான அதிகாரிகளையும் அனுப்பி தங்களின் தடைகளில் பங்கேற்குமாறு மிரட்டல் விடுக்கின்றனர். ஆனால், பொருளாதாரமே எல்லாவற்றையும் முடிவு செய்யும் என்பதால், அமெரிக்காவின் இந்த மிரட்ட லுக்கு உலகின் பல முன்னணி 3ஆம் உலக நாடுகள் (இந்தியா, பிரேசில், சவூதி அரேபியா உட்பட நாடுகள்) பணிய மறுத்துவிட்டனர்.  அதே சமயம் அமெரிக்காவின் பில்லியன் டாலர் ‘திருட்டு முதலாளிகள்’ (ராபர் பேரன்ஸ்) இந்த தடைக ளைப் பயன்படுத்தி அமெரிக்க மக்களை கொள்ளை யடிக்கின்றனர். அவர்களை கட்டுப்படுத்த இயலாத அமெ ரிக்க நிர்வாகம், தற்போது பெட்ரோலியப் பொருட்களின் மீதான அரசின் வரி விதிப்பை சற்று காலத்திற்கு முழுமை யாக நிறுத்திவைக்க முயல்கிறது. ஆனால் அங்கு மோடி அரசு போல வரிக் கொள்ளை இல்லையாதலால், அரசின் நடவடிக்கையால் நுகர்வோருக்கு பெரிய விலை குறைப்பு இருக்காது என்கின்றனர் (ஒரு கேலனுக்கு 18 சென்ட் வரி).

அமெரிக்கா மந்த நிலையை  தவிர்க்க முடியாது!

ஆயுத வியாபாரிகளின் அரசான அமெரிக்க அரசு, தன் காலில்  தானே சுட்டுக் கொள்வது போல, பொருளா தாரத் தடைகளை அமல்படுத்தி வருகிறது. தற்போது, அரசின் பொருளாதாரத் தடைகளே இவையெல்லா வற்றிற்கும் காரணம் என மக்கள் பேசத் துவங்கிவிட்ட னர். தற்போது அமெரிக்கா முன் உள்ள ஒரே வழி, ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்படுத்துவது, பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெறுவது ஆகியனவே! ஆனால், தனது வல்லாதிக் கத்தை நிலை நிறுத்த எந்த அளவுக்கும் செல்லத் தயங்காத அமெரிக்கா இத்தகைய - எளிய - எல்லாருக்கும் நன்மை பயக்கும் அந்த முடிவை எடுக்காது. ஆகவே, அமெரிக்கா மந்த நிலைக்கு செல்வதை தவிர்க்க இயலாது.
 


 

;