articles

img

அரசியல் சாசன அரிச்சுவடி கூட தெரியாதவர் ஆளுநராக நீடிப்பதா? - கே.பாலகிருஷ்ணன்

தமிழ்நாட்டின் அட்டூழியங்கள் ஆளுநர் செயல்பாடுகள், அர சியல் வெளியில் தொடர்ந்து கண்டிக்கப்பட்டு வந்த போதிலும், அவ ரின் அலங்கோலங்கள் முடிவுக்கு வந்த பாடில்லை. ஒன்றிய ஆட்சியின் ஆதரவு  இருப்பதால், தமக்கு ஏதோ வானளாவிய அதிகாரங்கள் வந்துவிட்டதாக பாவித்துக் கொள்கிறார். அதிலிருந்துதான் அவரின் அன்றாட உத்தரவுகளும், பேச்சுக்களும் அமைந்திருக்கின்றன. அண்மையில் தமிழ்நாடு முதலமைச்ச ருக்கு எழுதிய கடிதத்தில் மாநில அமைச்  சர் செந்தில் பாலாஜியை தாமே நீக்கு வதாக அறிவித்தார், “அவர் அமைச்சராக நீடிப்பது சட்ட நடைமுறைகளுக்கு இடை யூறு ஏற்படுத்துமோ என்ற நியாயமான அச்சம் ஏற்படுகிறது. இந்த சூழலில் அரசி யல் அமைப்புச் சட்டத்தின் 154, 163,  164வது பிரிவுகளின் கீழ் அமைச்சரை பதவி யிலிருந்து நீக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது. அதன்படி செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குகிறேன்” எனக்கூறியுள்ளார்.

ஆனால், உண்மையில் மேற்கண்ட பிரிவுகள் எதிலும் அமைச்சர்களை நேரடி யாக நியமிப்பதற்கும், நீக்குவதற்கும் ஆளுநருக்கு அதிகாரத்தினை அரசியல்  சாசனம் வழங்கவில்லை. பிரிவு 163, குடி யரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஆளு நர் அந்தந்த மாநிலத்தில் உள்ள அமைச்ச ரவையின் கூட்டு முடிவு மற்றும் ஆலோச னைகள் அடிப்படையில் செயல்பட வேண்  டுமென்றே கூறியுள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பில் ஆளுநர்கள் அந்தந்த மாநில அமைச்சரவையின் கூட்டு முடிவின் அடிப்படையில்தான் செயல்பட வேண் டுமே தவிர, அவருக்கென தனிப்பட்ட அதிகாரங்கள் இல்லை என தெளிவாக வரையறுத்துள்ளது. அடுத்து, அரசியல் சாசனப் பிரிவு 164 பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பி னர்களின் ஆதரவு பெற்றவரை முதல மைச்சராக ஆளுநர் நியமிக்கலாம். முதல மைச்சரின் பரிந்துரையின் அடிப்படை யிலேயே அமைச்சர்களை ஆளுநர் நிய மிக்க வேண்டும். இதன்படி தனது அமைச்  சர்களை தேர்ந்தெடுக்கவும், நீக்கவுமான அதிகாரம் மாநில முதலமைச்சருக்கு மட்டுமே உள்ளது. இதில் ஆளுநர் நேரடி யாக மூக்கை நுழைப்பதற்கு அணு அள வும் வாய்ப்பில்லை. அரசியல் நிர்ணய சபையில் இது குறித்து ஆழ்ந்த விவாதம்  நடத்தும் போது, டாக்டர் பி.ஆர். அம்பேத் கர் அவர்கள் மிகத் தெளிவாக ஆளு நர்கள் சுயேட்சையாக எந்த நிர்வாக நட வடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என  தெளிவாக கூறியுள்ளார். அந்த வகை யில் அமைச்சர்களை நியமிக்கவோ, நீக்  கவோ இவருக்கு அதிகாரமில்லை என்பது தெளிவு.

நாடு விடுதலை பெற்றது இவருக்கு தெரியுமா?

விடுதலைக்கு முன்பு 1935ம் ஆண்டு  நிறைவேற்றப்பட்ட இந்திய சட்டம் 51ன்  படி, “ஆளுநர் நேரடியாக அமைச்சர்  களை நியமிக்கலாம் எனவும், அமைச்  சர்கள் ஆளுநரின் திருப்திக்கு செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந் தது. ஆனால், விடுதலைக்குப் பிறகு  இந்த ஷரத்து நீக்கப்பட்டு 164வது பிரிவு  சேர்க்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் ஏற்க னவே ஆளுநருக்கு இருந்த அதிகாரம் முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது. இந்திய நாடு விடுதலையடைந்ததையோ,  அதன் பிறகு அரசியல் அமைப்புச் சட்டம்  உருவாக்கப்பட்டதையோ கணக்கிலே கொள்ளாமல் ஏதோ பிரிட்டிஷ் ஆட்சி யின் கீழ் கவர்னர் செயல்படுவது போல தமிழ்நாடு ஆளுநர் எழுத்துப்பூர்வமாக தெரிவிப்பது விந்தையாக உள்ளது. இந்த அரசியல் அரிச்சுவடி கூட தெரியாத ஒருவர் தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிப்  பது பொருத்தமற்றதாகும். மேலும், ஆளு நர்கள் அமைச்சர்களை தீர்மானிப்ப தற்கும், நீக்குவதற்கும் அதிகாரமளிக்கும் வழி ஏற்படுமானால் அது இந்திய அர சியலமைப்பையே அடித்து நொறுக்கு வதாக அமைந்துவிடும். ஆளுநர் தனது கடிதத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது நீதிமன்றத்தில் வழக்கு உள்ள சூழ்நிலையில் அவர்  அமைச்சராக நீடிப்பது சட்டநடைமுறை களுக்கு இடையூறு ஏற்படுமோ என்ற ஐயத்தில் அவரை பதவி நீக்கம் செய்வ தாக கூறியுள்ளார். இதிலும் ஆளுநர் அர சியல் அமைப்பு சட்டத்தில் அடிப்படைக்  கோட்பாடுகளை கவனத்தில் கொள்ளா மல் கடிதம் எழுதியுள்ளார்.

அரசியல் அமைப்பில் ஒரு சட்டமன்ற உறுப்பினரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமானால் சில விதிமுறைகளை குறிப்பிட்டுள்ளது. அந்த விதிமுறைகளில் ஒரு அமைச்சர் மீது வழக்கு இருப்பது அல்லது கைது  செய்திருப்பதை காரணம் காட்டி பதவி  நீக்கம் செய்ய வழியில்லை. ஏற்கனவே  இந்திய அரசியலில் பல முதலமைச்சர் கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் மீது வழக்குகள், கைதுகள்  இருந்த போதிலும் அவர்கள் அமைச் சர்களாகவே நீடித்துள்ளார்கள். குறிப்  பாக, இன்றைய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது கொலை வழக்கு நிலுவையில் இருந்த போது அவர் குஜராத் அரசின் உள்துறை அமைச்ச ராக நீடித்தார். செல்வி ஜெயலலிதா மீது  ஊழல் வழக்குகள் மற்றும் கைது செய்யப்பட்ட போதிலும் அவர் முதல மைச்சராக நீடித்தார் என்பது கண்கூடு. இந்நிலையில் செந்தில்பாலாஜி மீது வழக்கு உள்ளது என்பதற்காகவே அவரை பதவி நீக்கம் செய்வதற்காக சட்டப்படி எந்த முகாந்திரமும் இல்லை. ஒருவர் தன் மீதான வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற் றால் மட்டுமே அவர் சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினர் பதவியை இழந்து விடு வார் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்  கூறுகிறது. இந்நிலையில் செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை கூட தாக்  கல் செய்யப்படாத நிலையில் அவரை பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் அறவே கிடையாது.

ஒன்றிய அரசுக்கு தெரியாமல் நடந்திருக்காது

இருப்பினும் மேற்சொன்ன பிரிவு களை குறிப்பிட்டு ஒரு அமைச்சரை நீக்கி  உத்தரவிட்ட ஆளுநர் அடுத்த சில மணி  நேரங்களில் ஒன்றிய உள்துறை அமைச்ச கத்தின் தலையீட்டின் பெயரில் அதை நிறுத்தி வைப்பதாகவும் இந்திய அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையை கேட்டுள்ள தாகவும் தெரிவித்துள்ளார். ஆளுநரின் இந்த அறிவிப்பு ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றுவது போல் உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அம லாக்கத்துறை நடவடிக்கை நீதிமன்ற தலையீடுகள் போன்றவைகள் கடந்த ஜூலை 13ந் தேதி முதல் நாடு முழுவதும் பர பரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் சூழ்  நிலையில் ஏதோ ஒன்றிய அரசுக்கு சம்பந்த மில்லாமல் பதவி நீக்கம் செய்து விட்டது போலும் பின்னர், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் தலையீட்டின் பேரில் நிறுத்தி வைத்துள்ளது போலும் அவர்  தெரிவித்திருப்பது “எங்கப்பன் குதி ருக்குள் இல்லை” என்பது போல்  உள்ளது. ஒன்றிய அரசின் ஆலோசனை யின்றி ஆளுநர் அவரை பதவி நீக்கம்  செய்திருக்க வாய்ப்பில்லை. தமிழ்நாடு  முதலமைச்சரின் வலுவான எதிர்வினை யும், நாடு முழுவதும் அரசியல் கட்சி தலை வர்கள், வழக்கறிஞர்கள், முன்னாள் நீதி பதிகள் உள்ளிட்ட பலரும் எழுப்பிய பலத்த  கண்டனத்தின் விளைவாகவும் தனது நடவடிக்கையினை வாபஸ் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதோடு ஒன்  றிய அரசுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்பது போல காட்ட தனது உத்தரவை திரும்பப் பெற்றுள்ளார்.

ஒன்றிய பாஜக அரசு ஆளுநர்களை பயன்படுத்தி எதிர்கட்சிகள் ஆளும் மாநில  அரசுகளுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருவது வாடிக்கையாகி வரு கிறது. ஏற்கனவே கேரள மாநில ஆளு நர் ஆரிப் முகமது கான், கேரள நிதிய மைச்சரை மாற்ற வேண்டும் என்று முத லமைச்சருக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்து சூடுபட்டுக் கொண்டார். அண்மையில், தில்லி மாநில அரசின்  அதிகாரங்களில் துணை நிலை ஆளு நர் தலையிட முடியாது என்பதை உச்சநீதி மன்றம் உறுதி செய்தது. உடனே, மோடி அரசாங்கம் ஒரு அவசர சட்டத்தை இயற்றி, தில்லி மாநில அரசாங்கத்திற்கு இருந்த அதிகாரங்களை துணை நிலை ஆளுநருக்கு மாற்றியது. எல்லாத் தரப் பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்த பிற கும் இந்த கருப்புச் சட்டத்தை திரும்பப் பெறவில்லை. அதுதான் அவர்களின் உண்மையான முகம். இவ்வாறு மாநில அரசுகளை சுதந்தி ரமாக செயல்பட விடாமல் தொடர்ந்து அர சியல் சட்டத்திற்கு விரோதமாக நடவ டிக்கைகளை மேற்கொண்டு மாநில அரசு களை செயல்பட விடாமல் குழப்புவது,  முடக்கிப் போடுவது சம்பந்தப்பட்ட மாநில மக்கள் நலனுக்கு கேடுவிளைவிப்பதாகும்.

நீடிக்க தகுதியில்லை

இவ்வகையில் அரசியல் சட்ட விழு மியங்களை காலில் போட்டு மிதித்து தான டித்த மூப்பாக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு ஆளுநராக நீடிப்பதற்கு தகுதியற்றவர். இவருக்கு சனாதனத்தின் கொடூரமும் புரியவில்லை. அரசியல் சட்டத்தின் விழு மியமும் தெரியவில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுக்கு எதி ராக போட்டி அரசாங்கம் நடத்த வேண்டு மென்ற குரூரம் மட்டுமே ஆர்.என்.ரவி யிடம் உள்ளது. இந்த பொறுப்பில் நீடிக்க  அவர் தகுதியற்றவர். ஆளுநர் பொறுப்பி லிருந்து இவரை நீக்குவதே அரசியல் சட்டத்திற்கு அளிக்கும் குறைந்தபட்ச மரி யாதையாக இருக்கும்.
 

;