articles

img

பொதுத்துறை கூட்டுறவு கிராம வங்கிகளை பாதுகாக்க 4000 கி.மீ. பிரச்சாரப் பயணம் - டி.ரவிக்குமார்,

“வங்கிகளை காப்போம் தேசத்தை காப் போம்” என்ற முழக்கத்துடன் வங்கி ஊழியர்கள் ஜூலை 19 முதல் 22 வரை தமிழ கத்தில் 4 முனைகளிலிருந்து 4 நாட்கள் 4000 கி.மீ. வேன் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர்.  “பொதுத்துறை வங்கிகளை தனியார்மய மாக்கப் போகிறோம்” என்று மீண்டும் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் பாஜக அரசின் 9 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் அறிவித்துள்ளார். இதனால் வங்கிகள் தனியார் மய ஆபத்து மீண்டும் தலை தூக்கி உள்ளது.  அதே போல் சாமானிய மக்களுக்கு சேவை புரியும் கூட்டுறவு வங்கிகளை தனியார்மய மாக்கவும், அவற்றை மாநில அரசுகளிடமி ருந்து பறித்து, ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ள வுமான முயற்சி நடைபெறுகிறது. கிராம வங்கிகள் மொத்தக் கடனில் 90 சதவீத கடனை கிராமப்புற ஏழை மக்களுக்கு வழங்கி வரு கின்றன. அந்த வங்கிகளின் 49 சதவீதப் பங்கு களை தனியாருக்கு விற்பதற்கான முயற்சி நடை பெறுகிறது. அது நடைபெற்றால் “ஏழை மக்களுக் கான சேவை” என்ற, கிராம வங்கிகள் உருவாக் கப்பட்டதன் நோக்கம் சிதைக்கப்பட்டுவிடும்.  வங்கிகள் தனியார்மயமானால்... Fசாதாரண மக்களுக்கான சேவை பின்னுக்கு தள்ளப்படும்.

வைப்புத் தொகைக்கு பாதுகாப்பு இருக்காது.

 

  1.     சேவைக் கட்டணங்கள் உயரும். Fபொதுத்துறை, கூட்டுறவு மற்றும் கிராம வங்கி கள் இல்லாமல் போனால் இன்று தனியார் வங்கிகளில் கிடைக்கும் ஓரளவு சேவையும் காணாமல் போகும்
  2. .  தனியார் வங்கிகள்  லாபம் ஒன்றையே குறி யாகக் கொண்டு மக்களை/வாடிக்கையாளர் களை கசக்கிப் பிழியும்.
  3. சாமானிய மக்களுக்கான முன்னுரிமைக் கடன் முழுவதுமாக கைவிடப்படும். Fகோடிக்கணக்கான ஜன்தன் கணக்குகள் பராமரிக்கப்படாது.
  4. வங்கிப் பணியாளர் தேர்வில் வெளிப் படைத்தன்மை இருக்காது.
  5.  பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு கைவிடப் படும். F உயர்மட்ட ஊழல் தீவிரமடையும்.
  6.  சாமானிய மக்களுக்கான கடன்களின் வட்டி கடுமையாக உயரும்.
  7. விவசாயம், சிறுதொழில், கல்வி, ஏழை நடுத்தர மக்களுக்கான கடன்கள் ஆகியவை மறுக்கப்படும். Fஇந்திய தேசத்தின் பொருளாதாரம் தேக்க மடையும். இது ஒட்டுமொத்தமாக நாட்டின் நலனுக் கும், நாட்டு மக்களின் நலனுக்கும் பேராபத் தாகும்.

 

5 லட்சம் காலிப் பணியிடங்கள்

வங்கிகள் தனியார்மயத்தை எதிர்த்து நாடெங்கிலும் உள்ள 10 லட்சம் வங்கி ஊழியர் கள் அதிகாரிகள் 2021 மார்ச் 15, 16 மற்றும் டிசம்பர் 16, 17 ஆகிய நான்கு நாட்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதனால் இந்த ஆபத்து தற்காலிகமாக தள்ளி போடப்பட்டது. ஆனால், ஒன்றிய நிதி அமைச்சரின் சமீப அறிவிப்பால் அந்த ஆபத்து மீண்டும் தலை தூக்கியுள்ளது. அரசு வங்கிகள் திட்டமிட்டே முடக்கப்படு கின்றன. 5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப் படாமல் விடப்பட்டுள்ளன. கடுமையான ஊழி யர் பற்றாக் குறையால் வாடிக்கையாளர் சேவை மிகவும் பாதிப்படைகிறது. கடை நிலை ஊழியர் கள், ஆயுதமேந்திய காவலர்கள் தற்காலிக ஊழியர்களாகவும் லட்சக்கணக்கான வணிக முகவர்கள் ஒப்பந்த முறையிலும் நியமிக்கப் பட்டு அவர்கள் கடுமையான உழைப்புச் சுரண்ட லுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். எஸ்.எம்.எஸ் கட்டணம், ஏடிஎம் கட்டணம், பணம் செலுத்தும் கட்டணம்,  பாஸ்புக் கட்டணம், குறைந்த பட்ச இருப்புக் கட்டணம் என்று பல வகையில் வாடிக்கையாளர்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அப ராதம் வசூலிக்கப்படுகிறது.

மறுபுறம் பெரு முத லாளிகளின் வராக்கடன்கள் ரத்து செய்யப் படுகின்றன. வேண்டுமென்றே கடனை திருப்பிக் கட்டாதவர்களிடமும், மோசடிப் பேர்வழிகளிட மும் சமரச ஒப்பந்தம் போட்டு அவர்களை காப் பாற்றும் முயற்சியில் ரிசர்வ் வங்கியே முனைப்பு காட்டுகிறது. எனவே, இவற்றையெல்லாம் அம் பலப்படுத்தியும், பொதுத்துறை, கூட்டுறவு, கிராம வங்கிகளை பாதுகாக்கவும், வலியுறுத்தி தமிழ் நாடு முழுவதும் சென்னை, ஓசூர், கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய மையங்களிலிருந்து ஜூலை 19 அன்று துவங்கி திருச்சியில் ஜூலை 22 அன்று பொதுக்கூட்டத்துடன் வங்கி ஊழியர்களின் பிரச்சாரப் பயணம் நிறைவடைய உள்ளது. ஜூலை 19 அன்று காலை சென்னை டி.எம்.எஸ். வளாகம் முன்பு கே.ஆறுமுக நயினார் (சிஐடியு) மற்றும் டி.செந்தில்குமார் (ஏஐஐஇஏ);   ஓசூர் ரயில் நிலையம் அருகில் ஸ்ரீதர் (சிஐடியு) மற்றும் கல்யாணசுந்தரம் (டிஎன்ஜி இஏ); தூத்துக்குடி ஓட்டல் சுகம் அருகில்ஜெகன் பெரியசாமி (தூத்துக்குடி நகர மேயர்) மற்றும் பி.ராஜு (பிஎஸ்என்எல்); கோயம்புத்தூர் மேட்டுப் பாளையத்தில் செந்தில்குமார் (டிஎன்ஜி இஏ) ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர். திருச்சி பொதுக் கூட்டத்தில் சிஐடியு  மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், இந்திய வங்கி  ஊழியர்சம்மேளனத் தலைவர் சி.ஜே.நந்த குமார், பயணக்குழுத் தலைவர்கள், சிஐடியு மற்றும் சகோதரச் சங்கங்களின் தலைவர் கள் பங்கேற்கின்றனர்.
 

;