வருடத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே கிடைக்கும் வேலையை அவ்வப்போது செய்து வருபவர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள். தொடர்ச்சியாக வேலை இல்லாமல் அன்றாடம், அத்துக் கூலிகளாக வருமானத்தை ஈட்டும் முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வுக்கால வாழ்க்கை அப்படி ஒன்றும் சுலபமாக இல்லை.
தமிழ்நாட்டில் முந்தைய அதிமுக ஆட்சியில், அமைப்புசாரா தொழிலாளர்களின் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களின் விபரப் பதிவுகள் (manual record ) மற்றும் மின்னணு தரவுகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளன. அதில் ஒன்று தான், கொரோனா பேரிடர் காலம். அன்றைக்கு, யாரு டனும் கலந்தாலோசிக்காமல் அதிமுக அரசு, தன்னிச்சையாக ஆன்லைன் மூலம் அனைத்துப் பணி களையும் செய்வது என முடிவு செய்தது. கடுமை யான எதிர்ப்பையும் மீறி இதை அமலாக்கியது.
விளைவு, பணப் பயனுக்காக விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்துக் கிடந்தும் தொழிலாளர் களுக்கு கிடைக்கவில்லை. காரணத்தைக் கேட்ட போது, நல வாரியத்தில் பதிவு செய்த புகைப்படம், கையொப்பம், ரேசன், ஆதார் அட்டை ஆவணங்கள், தரவுகள் இணையதளத்தில் காணாமல் போய்விட்டது என்று, அதைப் பராமரித்து வந்த தனியார் ‘டேட்டா’ நிறுவனம் போகிற போக்கில் கூறியது.
பணப் பயன்கள் வழங்குவதில் வாரியத்தின் தெளிவின்மை காரணமாக தகுதியில்லாதவர்கள் அதிகம் பயனடைந்தனர். கணிசமானவர்களுக்கு பல முறை உதவித்தொகை வழங்கி உள்ளனர். உண்மை யான, தகுதியான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இது தொழிலாளர் நலவாரியங்களின் நோக்கத்தையே சிதைத்தது.
தில்லு முல்லு - முறைகேடு!
உதாரணத்திற்கு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியச் செயல்பாடுகள் குறித்து, இந்திய தணிக்கை ஆணவம் வெளியிட்டுள்ள வாரி யான அறிக்கையின் சில அம்சங்களை இங்கு காணலாம்.
தமிழ்நாட்டில் 2022ஆம் ஆண்டில் கணக்கிடப்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் எண்ணிக்கை சுமார் 44 லட்சம் என்றாலும், 2022 மார்ச் 31 நிலவரப்படி நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள் 20 லட்சத்து 58 ஆயிரத்து 125 பேர்.இவர்களில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 48 தொழிலாளர்கள் மட்டுமே ஓய்வூதியம் பெறு கிறார்கள். 19.30 லட்சம் தொழிலாளர்களின் நலன் தொடர்புடையது என்பதால் கட்டுமான நலவாரி யத்தின் செயல்பாடுகள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
நல வாரிய உறுப்பினர்களில் 5 லட்சத்து 77 ஆயிரத்து 850 நபர்களின் கைபேசி பெண்களை வேண்டு மென்றே பதிவேற்றம் செய்யவில்லை. அதே நேரத்தில், உறுப்பினர் அல்லாத ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் கைபேசி எங்களை பதிவு செய்துள்ளனர்.
தொழிலாளர்களில் 18,838 ஆதார் எண்களை பணப் பயன்களுக்காக பலமுறை பயன்படுத்தி உள்ளனர். மேலும் 25,416 நபர்களின் ஆதார் எண் களை பதிவு முறைகேடாக பயன்படுத்தி உள்ளனர். இவர்களுக்கும் வாரியத்திற்கும் சம்பந்தமே இல்லை. அதேபோல், 4 லட்சத்து 35 ஆயிரத்து 471 தொழி லாளர்களின் வங்கி கணக்கு எண்களை பதிவேற்றம் செய்யாமல்; 9 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஒரே வங்கி கணக்கு எண் பதிவு செய்துள்ளனர்.
கணிசமான எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பதிவு விடுப்பட்டுள்ளது. இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் அடங்கும்.
இதுமட்டுமல்ல, உபரி நிதிகளின் விவேகமற்ற முதலீடுகளால் அவற்றின் மீதான வட்டி குறைவாக பெறப்பட்டுள்ளது. ஏற்றுக்கொள்ள முடியாத செல வினங்களால் வாரியத்தின் நிர்வாகச் செலவானது அதன் உச்சவரம்பான ஐந்து விழுக்காட்டையும் தாண்டிவிட்டது.
கட்டுமானத் தளங்கள், வேலை கொடுப்பவர்கள் விவரங்களை தொழில் துறையின் பாதுகாப்பு சுகாதார இயக்குநர் முறையாக பதிவு செய்ய வில்லை. அதிகாரங்களையும் பகிர்ந்து அளிக்க வில்லை. இது மேலும் மேலும் தவறு செய்வதற்கு வழி வகுத்தது மட்டுமின்றி, நலவாரிய நோக்கத்தையும் சீரழித்தது.
தோண்டத் தோண்ட முடை நாற்றம்...
2017 முதல் 2022ஆம் ஆண்டு வரை உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்த கட்டுமான நிறு வனங்கள், வேலை அளித்தவர் எண்ணிக்கை 8,074 என்று கூறப்பட்ட நிலையில், இந்திய தணிக்கை தலைவர் குழு ஆய்வு செய்த போது, 18,587 கட்டு மான பணிகளில் 101 மட்டுமே பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் கட்டிட அனு மதி வழங்கும் போது, கட்டுமான செலவை மதிப்பிடு வதில் சீரான தன்மை இல்லை. சில இடங்களில் (வேண்டிய நபர்களுக்கு ஆதரவாக) குறைத்தும் பல இடங்களில் அதிகமாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது.
கட்டுமான நல வாரியத்திற்கு உள்ளாட்சி அமைப்பு களால் செலுத்தப்பட்ட ‘செஸ்’ வரிவசூல் தொகை மற்றும் கணக்கு பராமரிப்புகள் குறித்து 10 மாவட்டங் களில் 124 உள்ளாட்சி அமைப்புகளை தணிக்கை செய்தபோது, 99 உள்ளாட்சி அமைப்புகளால் வசூ லிக்கப்பட்ட ரூ.221.81 கோடியை செலுத்தவில்லை. டிடி மூலம் தான் செஸ் தொகையை வசூலிக்க வேண்டும் என்ற நடைமுறை விதியை மீறி சென்னை மாநக ராட்சி ரொக்கமாகவும், இசிஎஸ் முறையில் வசூல் செய்துள்ளது.
2017 -22 ஆம் ஆண்டுகளில் கட்டுமான தொழி லாளர் நல வாரியத்திற்கு ரூ. 206.08 கோடி செஸ் (தொழி லாளர் நல நிதி) வந்தபோதும், வெறும் ரூ.8.57 லட்சம் மட்டுமே கணக்கில் வரவு வைத்துள்ளனர். இது தவிர 5 மாநகராட்சிகளில் ரூ.6.25 கோடி, 6 நகராட்சிகளில் ரூ.3.31 கோடி, 28 பேரூராட்சிகளில் ரூ.1.34 கோடி, 13 கிராமப்புற வட்டாரங்களில் ரூ. 1.40 கோடி, 52 கிராமப்புற ஊராட்சிகளில் ரூ.2.43 கோடி என்று மொத்தமாக ரூ.14.73 கோடியை நலவாரியக் கணக்கில் வரவு வைக்கவில்லை.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் கட்டிட உரிமையா ளர்கள் 2017-18 ஆம் ஆண்டுகளில் சலான் படி செலுத்தியது ரூ. 17.62 கோடி. ஆனால், வங்கியில் வெறும் ரூ. 1.77 கோடி மட்டுமே வரவு வைத்துள்ளனர். மீதம் சுமார் ரூ.15 கோடியை ‘சுவாகா’ செய்தது யார் என்பதை கண்டுபிடிக்கவில்லை!
ஆண்டுக்கு ரூ.800 கோடி
கட்டுமான செலவுகளில் உரிமையாளர்களிடம் ஒரு விழுக்காடு நல வாரியத்திற்கு தொழிலாளர் நல வரி (செஸ்) வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 800 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்தத் தொகையை முறையாக கணக்கீடு செய்து பயன்படுத்த வேண்டும்.
முதலீடு செய்ய வேண்டும். இதுபோன்ற பணிகள் மிகப்பெரிய சவாலாகும். இதற்கு சிறந்த நிதி மேலாண்மை அமைப்பு, திறமையான திட்டமிடல், ஒருங்கிணைப்பு, சிறந்த நடைமுறைகள் தேவைப்படுகிறது.
ஆனால், கட்டுமான நல வாரியம் மதிப்பீடு செய்து வசூல் செய்த தொழில் வரி எவ்வளவு? இதில் முறையாக செலுத்தப்பட்டதா? ரொக்கம், காசோலை, டிடி முறையில் வந்தது எவ்வளவு? - இந்தத் தரவுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை.
இந்த நிலையில்தான், ஆன்லைன் மூலம் பதிவு செய்த 74 லட்சக்கணக்கான தொழிலாளர்களின் தரவு களை காணவில்லை என்ற பிரச்சனை எழுந்தது. ஒரு தனியார் டேட்டா நிறுவனத்தின் பொறுப்பற்ற செயல்பாடுகளால் சுமார் 40 லட்சம் தொழிலாளர்கள் பணப் பயன்கள் எதையும் பெற முடியாமல் போனது. அழித்த ஆவணங்களை மீண்டும் பதிவேற்றம் செய்வது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. இந்த விவகாரம், சட்டமன்றத்தில் எதிரொலித்தது.
சிபிஎம் தலையீடு !
சுமார் 40 லட்சம் தொழிலாளர்கள் புதுப்பிக்க முடியாமல், நலவாரிய பயன்கள் எதையும் பெற முடியாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும் பிரச்சனையை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றார் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்த சூழ்நிலை யில், நல வாரிய செயல்பாடுகள் குறித்து சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் துறை உயர் அலுவலர்களின் திறனாய்வு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
ஓடி ஓடி உழைத்தாலும் ஒரு நாளில் ஓய்வெடுக்கத் தான் வேண்டும்; ஓய்வெடுக்கும் காலத்தில் கொஞ்சம் பொருளாதார பலமும் இருந்தால்தான் மிச்சமிருக்கும் வாழ்க்கை கஷ்டமில்லாமல் கழிக்கலாம் என்பது பலரது எண்ணமாகும்.
அரசு ஊழியர்கள் மற்றும் முறைப்படுத்தபட்ட நிறுவன பணியாளர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து பின்னர் வழங்கும் ஓய்வூதிய தொகை சற்று உதவிகரமாக இருக்கிறது.
ஆனால், முறையான திட்டங்களால் தொழிலாளர் நலவாரியத்திற்கு கோடிக்கணக்கில் பணம் வந்தும், அதை செயல்படுத்துவதில் காணப்படும் இடர்பாடுகள், தொழில் வரி பயன்பாடு, வசூலில் தேக்கம், உறுப்பினர் பதிவு, நலத்திட்டங்கள் அமலாக் கம் இவை அனைத்தையும் சரி செய்து, தொழிலாளர் நல வாரியத்திற்கு புத்துயிர் ஊட்ட வேண்டும் என்பது தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாகும்.
2017 -22 ஆம் ஆண்டுகளில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்திற்கு
ரூ. 206.08 கோடி செஸ் (தொழிலாளர் நல நிதி) வந்தபோதும், வெறும் ரூ.8.57 லட்சம் மட்டுமே கணக்கில் வரவு வைத்துள்ளனர்.
தகவல் ஆதாரம்: இந்திய தணிக்கை தலைவர்
2017-2022 ஆண்டு அறிக்கையின் குறிப்புகள்