இ ந்திய நாட்டின் பொதுத்துறை மற்றும் பட்டி யலிடப்பட்ட வணிக வங்கிகளிடமிருந்து பெருமளவில் கடன்வாங்கிவிட்டு, திட்ட மிட்டே திருப்பிச் செலுத்தாமல் இருக்கிற பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் கைவசம் நிலுவையில் இருக்கிற வராக்கடன் தொகை 2023 ஜுன் மாத விபரங்களின்படி மேலும் 3லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த 5 நிதி ஆண்டு களில் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் ரூ.10லட்சம் கோடி அளவிற்கு வராக்கடன் என்ற பெயரில் பெரு முதலாளிகளுக்கு கொடுத்த கடனை தள்ளுபடி செய்திருப்பது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்ற கேள்வி பதிலில் தெரியவந்துள்ளது. அதாவது 2019 மார்ச் முதல் நாள் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு வராக்கடன் அதிகரித்துள்ளது.
இந்தியா-அதாவது பாரதம், மோடி அரசாங்கத்தின் மதவெறி- கார்ப்பரேட் கூட்டுக்களவாணிகளால்.