districts

img

தமுஎகச இலக்கிய சந்திப்பு

கோவை, நவ.11- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங் கத்தின் இலக்கிய சந்திப்பு ஞாயிறன்று நடைபெற்றது. இதில்,  மறைந்த கவிஞர் தணிகைச்செல்வனுக்கு நினைவஞ்சலி  செலுத்தப்பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங் கத்தின், கோவை மாவட்டக் குழு சார்பில் இலக்கிய சந்திப்பு  நிகழ்வு தாமஸ் கிளப்பில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, கவி ஞர் ஜின்னா தலைமை வகித்தார். இதில், மறைந்த எழுச்சிக்  கவிஞர் தணிகைச்செல்வனுக்கு நினைவஞ்சலி செலுத்தப் பட்டது. முன்னதாக, பனைவிடலி எனும் சிறுகதைத் தொகுப்பை  அறிமுகம் செய்து எழுத்தாளர் அரவிந்தன் ரவிச்சந்திரன் உரையாற்றினார்.  எழுத்தாளர் கு.இலக்கியன் ஏற்புரை யாற்றினார். கவிஞர் திருமாவளவனின் புத்தனின் புனை பெயர் ஆந்தை எனும் கவிதைத் தொகுப்பை அறிமுகம் செய்து  பேரா. கந்தசுப்ரமணியம் உரையாற்றினார்.  கவிஞர் திருமாவ ளவன், கவிஞர் க.சோ.வீரசோழன் ஆகியோர் ஏற்புரை யாற்றினர். இதில், தமுஎகச கோவை மாவட்டத் தலைவர் டி.மணி,  மாவட்டச் செயலாளர் அ.கரீம் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.