tamilnadu

img

போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு

போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளன (சிஐடியு) 16 ஆவது மாநில மாநாடு தருமபுரியில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனத்தின் 16 ஆவது மாநில மாநாட்டிற்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம், சிஐடியு மாநிலச் செயலாளர் சி. நாகராசன் தலைமையில் நடைபெற்றது.போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் சிறப்புரையாற்றினார். சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் 16 ஆவது மாநில மாநாடு ஆகஸ்ட் 5,6,7 ஆகிய தேதிகளில் தருமபுரி மதுராபாய் சுந்தர ராஜராவ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான வரவேற்புக்குழு தலைவராக எம்.சுருளிநாதன், செயலாளராக சி.நாகராசன், பொருளாளராக சி.முரளி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.