ஞாயிறு, நவம்பர் 29, 2020

tamilnadu

img

தனியார் தொலைக்காட்சியில் வந்த செய்தியால் - சாலையோர வியாபாரிகளுக்கு வந்த உதவித்தொகை

மதுரை:
மதுரையில் கடந்த ஏப்ரல் 21ம்தேதி நியூஸ் 18 தொலைகாட்சியில் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் ஊரடங்குக்கு பின் சாலையோர விற்பணையாளர்களின் வாழ்க்கை நிலைபற்றிய விவாதத்தில் சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க மதுரை மாவட்ட பொருளாளர் மோகன் வியாபாரிகளின் வாழ்க்கை நிலை குறித்து பேசினார்.

அந்த செய்தியினை தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ரூ16ஆயிரமும் வரை அவருடைய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தனர் .பலர் அரிசியும் அனுப்பி வைத்தார்கள். அவற்றை  ஏழ்மைநிலையில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்களாக வாங்கி ஞாயிறு அன்று சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.தெய்வராஜ், சாலையோர வியாபாரிகள்  சங்க  மாவட்ட பொதுச் செயலாளர் சந்தியாகு, பொருளாளர் மோகன் ஆகியோர் வழங்கினார்கள்.
 

;