பொன்னமராவதி, மே 5- ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கியுள்ள ஏழை-எளிய தொழிலாளர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொன்னமராவதி வட்டாரக் கிளையின் சார்பில் முதல்கட்ட நிவாரணமாக அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. தலைவர் ராஜகோபாலன் தலைமை வகித்தார். பொன்னமராவதி வட்டாரக் கல்வி அலுவலர் ராஜா சந்திரன் முன்னிலை வகித்தார். பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன் நிவாரண பொருட்கள் வழங்கி துவக்கி வைத்தார்.\
வட்டாட்சியர் உதவி
30 சாலையோர வியாபாரிகளுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை பொன்னமராவதி வட்டாட்சியர் திருநாவுக்கரசு வழங்கினார்.