நெய்வேலி நிலத்தடி நீரில் நச்சுத்தன்மை அதிகரிப்பு
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அதிர்ச்சி அறிக்கை
நெய்வேலி, ஏப். 19- கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி (நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்) அனல் மின் நிலையங்கள் மற்றும் பழுப்பு நிலக்கரி சுரங்கங்களுக்கு அருகிலுள்ள நீர்நிலைகள், நிலத்தடி நீர் மற்றும் மண் ஆகியவற்றில் பாதரசம் அதிக அளவில் இருப்பதை கண்டறிந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (டிஎன்பிசிபி) மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (என்ஜிடி) தெற்கு அமர்வுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின்படி, நெய்வேலி பகுதிகளில் சில மேற்பரப்பு நீர் மாதிரி களில் பாதரச செறிவு அனுமதிக்கப் பட்ட வரம்பை விட 115 மடங்கு அதிகமா கவும், நிலத்தடி நீரில் 62 மடங்கு அதிக மாகவும் இருந்தது. இந்த மாதிரிகள் டிசம்பர் 17, 2024 அன்று நெய்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டன. நிக்கல், ஈயம் மற்றும் காட்மியம் ஆகியவற்றின் உயர்ந்த அளவுகளும் கண்டறியப்பட்டன. இருப்பினும் தன்னார்வ தொண்டு நிறுவனமான பூவு லகின் நண்பர்கள் முந்தைய அறிக்கை கள் இருந்தபோதிலும் செலினியம் தொ டர்பாக எந்த சோதனையும் சோதிக்கப் படவில்லை.
17இல் 15 பகுதிகள்
பரிசோதிக்கப்பட்ட 17 மேற்பரப்பு நீர் மாதிரிகளில், 15 பாதுகாப்பான வரம் பை விட பாதரச அளவைக் காட்டியது (0.0012 மி.கி / எல் மு முதல் 0.115 மி.கி/ எல் வரை). பக்கிங்ஹாம் கால் வாய் மிக உயர்ந்த பாதரச மட்டத்தைக் கொண்டிருந்தது. அது வரம்பை விட 115 மடங்கு அதிகம். எவ்வாறாயினும், இந்த நீர்நிலைகள் “ஐஎஸ் 2296 வகுப்பு இ (குடிநீர் அல்லது பாசனத்திற்கு ஏற்றதல்ல)” என வகைப்படுத்தப் பட்டுள்ளன. எனவே பாதரச அளவு விதிமீறல்களாக குறிப்பிடப்பட வில்லை என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியது. அதே போன்று வளையமாதேவி கூட்டு நீர் வழங்கல் திட்டம், பரவ ணாறு, வலஜா ஏரி மற்றும் அய்யன் ஏரி போன்ற சில மாசுபட்ட நீர்நிலை கள் குடிநீர் ஆதாரங்களாக இருப்பதால் பாதரச அளவு விமர்சனங்கள் முக்கி யத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியான வானதிராயபுரத்தில், வசிப்பவர்கள் பல ஆண்டுகளாக நிலத்தடி நீரை தங்கள் முதன்மை குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தி வந்தனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
விவசாய நிலங்களும்...
நெய்வேலி மற்றும் பரங்கிப் பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து 2023-ஆம் ஆண்டில் சுயாதீன ஆய்வை நடத்திய பூவுலகின் நண் பர்கள் குழுவைச் சேர்ந்த பிரபாகரன் வீரராசு, “பொதுமக்களின் சுகாதார பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு ஒரு மருத்துவக் குழுவை நிய மிக்க வேண்டும்” என்று கூறுகிறார். அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்க ளில் நடத்தப்பட்ட பரிசோதனையில், வடக்கு வேலூர் மற்றும் தொல் காப்பியார் நகரில் குடிநீரில் பாதரச அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட 250 மடங்கு அதிகமாக இருப்பது தெரிய வந்தது. நிக்கல், காட்மியம், துத்தநா கம், போரான் மற்றும் செலினியம் போன்ற பிற கன உலோகங்களும் விவ சாய வயல்கள் மற்றும் நீர்நிலைகளிலி ருந்து மாதிரிகளில் பாதுகாப்பான அளவை விட அதிகமாக காணப் பட்டன. தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த பிரச்சனையை தானாக முன்வந்து அறிந்து, தன்னார்வ தொண்டு நிறு வனம் சார்பாக தலையீட்டு மனுவை தாக்கல் செய்தது. தன்னார்வ தொண்டு நிறுவனம் அறிவித்த அளவில் கனரக உலோக மாசுபாடு இருப்பதை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முன்பு மறுத்தாலும், அதன் சொந்த சமீபத்திய கண்டுபிடிப்புகள் இப்போது தீவிரத்தை உறுதிப்படுத்துகின்றன. இந்த வழக்கு கடைசியாக ஏப்ரல் 16-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அடுத்த மற்றும் இறுதி விசாரணை ஜூன் 12-ஆம் தேதி நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.
ஆபத்து
தண்ணீரில் சிறிய அளவிலான பாதரசத்தை வெளிப்படுத்துவது நரம்பு, செரிமான மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்புகளில் நச்சு விளைவுக ளுடன் கடுமையான உடல்நலப் பிரச்ச னைகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி கிளம்பியுள்ளது.