திங்கள், நவம்பர் 30, 2020

tamilnadu

img

மூத்த தலைவர் தோழர் எம்.ராஜாங்கம் படத் திறப்பு நிகழ்ச்சி...

திருநெல்வேலி:
நெல்லை மாவட்டத்தின் முதுபெரும்தொழிற்சங்கத் தலைவர் தோழர் எம்.ராஜாங்கத்தின் படத்திறப்பு நடைபெற்றது.பாளையங்கோட்டை சிஐடியு மாவட்டஅலுவலகத்தில் நடைபெற்ற இந்த படத் திறப்பு நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்ட தலைவர் எம்.வேல்முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆர்.மோகன் வரவேற்று பேசினார். மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், தோழர் ராஜாங்கத்தின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.

சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் ஆன்லைன் மூலமாக புகழஞ்சலி செலுத்தினர்.மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழுஉறுப்பினர் வீ,பழனி, சிஐடியு மாநிலச் செயலாளர் ஆர்.ரசல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் காசிவிஸ்வநாதன், தொமுச மாநில அமைப்பு செயலாளர் தர்மன், எச்.எம்.எஸ். மாநில துணை தலைவர் சுப்பிரமணியன், சிஐடியு மாநில துணை தலைவர் ஆர்.எஸ்.செண்பகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணிமாநில துணைத்தலைவர் ஆர்.கிருஷ்ணன், வீரவநல்லூர் முன்னாள் பேரூராட்சித் தலைவர் எஸ்.கே.பழனிச்சாமி, காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்டபொதுச்செயலாளர் செ.முத்துக்குமாரசாமி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர்பார்த்தசாரதி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் செ.பால்ராஜ், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பி.கற்பகம், மார்க்சிஸ்ட் கட்சி நெல்லை தாலுகாச் செயலாளர் சுடலைராஜ், பாளை தாலுகா செயலாளர் பா.வரகுணன், மின்ஊழியர் மத்திய அமைப்பு ஓய்வுபெற்ற சங்க மாநில துணை பொதுச்செயலாளர் ராஜாமணி, மாற்றுத்திறனாளிகள் சங்கமாவட்ட தலைவர் தியாகராஜன், ரேவாமாவட்ட செயலாளர் முத்து கிருஷ்ணன்,அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் டாக்டர் ராமகுரு, ஏ.ஐ.சிசிடியு மாவட்ட செயலாளர் கணேசன், டிடிஎஸ்.எப் மாவட்ட செயலாளர் சந்தானம், ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் உமாபதிசிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிஐடியு மாவட்ட பொருளாளர் எஸ்.பெருமாள் நன்றி கூறினார்.

;