திங்கள், செப்டம்பர் 28, 2020

தமிழகம்

img

தஞ்சாவூர் எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா பாதிப்பு...

தஞ்சாவூர் 
தமிழக மக்கள் பிரதிநிதிகளை தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இதுவரை 24 எம்எல்ஏ, 2 எம்பி என மொத்தம் 26 பேரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது. இதில் 4 அமைச்சர்களும் அடங்கும். சென்னை செப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜே.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற நபர்களில் பெரும்பாலனோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், புதிதாக தஞ்சாவூர் தொகுதி திமுக எம்எல்ஏ டி.கே.ஜி  நீலமேகத்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையி 25 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே ஒரத்தநாடு திமுக எம்எல்ஏ ராமச்சந்திரன், பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராசு ஆகியோர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

;