திங்கள், செப்டம்பர் 28, 2020

தமிழகம்

img

இன்று கிராம சபை கூட்டம் ரத்து

சென்னை:
இந்தாண்டு கொரோனா காரணமாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டம் நடைபெறாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப் படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கவும், வளர்ச்சித் திட்டங் களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுத்தும் நோக்கத்தில் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று ஆண்டுதோறும் கிராம சபை கூட்டம் நடைபெறும்.இந்தாண்டு கொரோனா காரணமாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டம் நடைபெறாது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

;