இ-சேவை மையங்களில் காத்து கிடக்கும் மாணவர்கள்
சிதம்பரம், மே 20- தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட்ட நிலையில், சாதி, வருமானம், இருப்பிட மற்றும் மாற்றுச் சான்றிதழ்களில் பெறவேண்டியுள்ளது. தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பிலிருந்து இந்த சான்றுகளுக்கு அரசு இ சேவை மையம் மற்றும் தனியார் அங்கீகாரம் பெற்ற மையங்களில் மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இ சேவை மையங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இ சேவை மையங்களில் சர்வர் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்,மாணவர்கள் குறித்த நேரத்தில் சான்று பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்வதற்கும் விண்ணப்பிப்பதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீட்டுமனை பட்டா வழங்க கிராம சபையில் வலியுறுத்தல்
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 471 மதிப்பெண்கள் பெற்ற 2 கைகளும் இல்லாத மாணவர் கீர்த்திவர்மன் தாயார் கஸ்தூரிக்கு இலவச வீட்டு மனை பட்டாவை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் வழங்கினார். கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான் உடனிருந்தார்.
தொடர் மழை: செங்கல் உற்பத்தி பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் அதிகமாக செங்கல் உற்பத்தி நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக கட்டுமான பணி கள் அசுர வேகத்தில் நடந்து வரும் நிலை
யில், தேவை அதிகரித்துள்ளதால் செங்கல் உற்பத்தி முழு வீச்சில் நடை பெற்று வந்தது. இதன் மூலம் சுமார் 1000 தொழிலாளர்கள் இப்பகுதியில் நேரடியாக வும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த நிலையில், போச்சம்பள்ளி பகுதி யில் சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் செங்கல் சூளையில் செங்கல் உற்பத்திக்கு அடிப்படை வேலை களை கூட செய்ய முடியவில்லை. சேரும்,
சகதியுமாக இருப்பதால் வேலையில்லாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர் தர்ப்பகராஜ், நவீன செயற்கை கால் வேண்டி விண்ணப்பித்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் நவீன செயற்கை கால் அளவீடு செய்யப்பட்டு 14 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு 12 லட்சத்து 11 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பிலான நவீன செயற்கை கால்கள் வழங்கினார்.
சென்னை, மே 20- வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டு கிராம சபைக் கூட்டம் மகாலட்சுமி நகரில் நடைபெற்றது. கிராமத் தலைவர் எஸ்.கதிர்வேல் தலைமை தாங்கினார். இதில் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், மணலி எக்ஸ்பிரஸ் சாலையில் ரவுண்டானா அமைக்க வேண்டும், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் குப்பன், செயலாளர் ஆர்.செல்வம், பொருளாளர் பி.மோகன்தாஸ், காமராஜ் நகர் தலைவர் நிரஞ்சன் பட்நாயக், முல்லை நகர் நிர்வாகி பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உணவகத்தில் ஹூக்கா பார் நடத்திய வழக்கில் ஒருவர் கைது
சென்னை, மே 20- சென்னை புரசைவாக்கத்தில் உண வகத்தில் ஹூக்கா பார் நடத்திய வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சட்டவிரோதமாக ஹூக்கா பார் செயல்படுவதாக தலைமைச் செயலக காலனி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படை யில் போலீசார், அங்கு கடந்த 15ஆம் தேதி திடீர் சோதனை செய்தனர். இச்சோதனை யில் அங்கு சட்டவிரோதமாக ஹூக்கா பார் செயல்படுவது தெரியவந்தது. இதை யடுத்து அங்கிருந்த 2 ஹூக்கா பைப்புகள்,5 குடுவைகள்,30 கிலோ புகையிலை கலந்த ஹூக்கா,5 கிலோ ஹூக்கா மசாலா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த ஹூக்கா பார் நடத்தி வந்த மாதவரம் தட்டான்குளம் சாலைப் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (52) என்ப வரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் இவ் வழக்கில் தேடப்பட்டு வந்த ம.சந்தீப் (24) என்பவரை காவல்துறையினர் செவ்வாயன்று கைது செய்தனர். சந்தீப் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட மனோஜின் மகன் ஆவார்.
கீர்த்திவர்மன் குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 471 மதிப்பெண்கள் பெற்ற 2 கைகளும் இல்லாத மாணவர் கீர்த்திவர்மன் தாயார் கஸ்தூரிக்கு இலவச வீட்டு மனை பட்டாவை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் வழங்கினார். கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான் உடனிருந்தார்.
தொடர் மழை: செங்கல் உற்பத்தி பாதிப்பு