திங்கள், செப்டம்பர் 21, 2020

தமிழகம்

img

எம்எல்ஏ கு.க.செல்வம் திமுகவில் இருந்து நீக்கம் 

சென்னை:
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம், திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட் டுள்ள அறிக்கையில், திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழுஉறுப்பினர் பொறுப்புக்களில் இருந்து விடுவிக்கப் பட்ட கு.க. செல்வம், கட்சியின் கட்டுப் பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும்  விதத்திலும் செயல்பட்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத் திற்கு அளித்த பதில் ஏற்றுக் கொள்ளும்படியாக  இல்லாத காரணத்தால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் கு.க. செல்வம் தொகுதி பிரச்சனைை என்று மத்திய ரயில்வே அமைச்சரை சந்திக்க போவதாக கூறி தில்லி சென்று பிஜேபி மாநில தலைவருடன் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா வை சந்தித்து பேசினார். இதையடுத்து அவருக்கு திமுக சார்பில் விளக்கம்  கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

;