வியாழன், அக்டோபர் 22, 2020

தமிழகம்

img

கொரோனாவால் இறந்த முன்களப் பணியாளர் குடும்பங்களுக்கு நிதி

சென்னை:
கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.கொரோனா பரவும் சூழலில் மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர் தொடர்ந்து தத்தமது பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கொரோனா பாதித்து உயிரிழந்த 28 முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

;