வெள்ளி, அக்டோபர் 30, 2020

தமிழகம்

img

கல்விக் கட்டணம் வசூலிப்பு: அரசு பதில் தர உத்தரவு

சென்னை:
தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டண வசூல் மற்றும் ஊதியம் வழங்கும் நடவடிக்கைகளை அரசே ஏற்கக் கோரிய மனு மீது 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்களின் வருமானத்தை வருமான வரித்துறை தணிக்கை செய்து கட்டணத்தை குறைக்கக்கோரி, அகில இந்திய தனியார் கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கு திங்களன்று (ஆக.31) விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், கல்வி நிறுவனங்களில் கல்விக்கட்டண வசூலை ஏற்க கோருவது பற்றியும், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கும் நடவடிக்கைகளையும் அரசே ஏற்க கோருவது பற்றியும், நான்கு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

;