சனி, செப்டம்பர் 19, 2020

தமிழகம்

img

வரும் 10-ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகுகிறது... 

சென்னை
கொரோனா பதற்றத்தால் தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் மாணவர்களின் எதிர்காலத்தை கணக்கில் வைத்து  காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்களின் அடிப்படையில் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் அறிவித்திருந்தது. 

\இந்நிலையில் வரும் 10-ஆம் தேதி  (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் அளித்த கைபேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவு அனுப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;