வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

தமிழகம்

img

தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை:

சென்னை தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது குண்டு வெடிக்கும் என மொட்டைக் கடிதம் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு வந்ததால்பரபரப்பு ஏற்பட்டது. இந்த கடிதத்தால் பதற்றம் நிலவியது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


;