திங்கள், நவம்பர் 23, 2020

tamilnadu

img

இடஒதுக்கீடுக்கு எதிராக செயல்படும் பாஜக... ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை:
மதச்சார்பின்மை, சமூகநீதி, கூட்டாட்சி, மக்கள் உரிமைகள், ஜனநாயகத்தின் மீது அடுக்கடுக்கான தாக்குதலை நடத்தி வரும் பாஜக அரசை, மக்களின் நலனுக்காக விடுதலை போராட்ட பாரம்பரியத்தோடு எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்றுஅரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்என்று இந்திய மருத்துவ ஆணையம் (எம்சிஐ) வலியுறுத்தி உள்ளது. அரசியல் சட்ட நடைமுறைக்கு மாறாக,இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தமாட்டோம் என்று மத்திய அரசு கூறியிருப்பது சமூக நீதிக்கும், பிற்படுத் தப்பட்ட மக்களுக்கும் எதிரானது. மத்திய அரசு ஆணவப்போக்கோடு செயல்படுகிறது.

வங்கி ஊழியர் நியமனத்தில்ஓபிசி, எஸ்சி/எஸ்டி ஆகியோருக் கான இடஒதுக்கீட்டிலிருந்து சில இடங்களை பறித்து பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கொடுத்திருப்பதும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. தமிழக மக்களின் நலன்களுக்குமட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்றார்.மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், “உயர் சிறப்பு கல்விநிறுவனம் என்ற மத்திய அரசின் அறிவிப்பானது புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் அமைந்துள்ளது. கல்வியை வணிகமயமாக்கும் நடவடிக்கையாகும். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, மாநில அரசை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பது கண்டிக்கத்தக் கது. இதற்கு கடும் எதிர்ப்பு உருவாகி, அனைத்து எதிர்க்கட்சிகளும்ஆட்சேபித்த பிறகு சூரப்பாவை சட்டத்துறை அமைச்சர் கண்டித் துள்ளார். உயர்சிறப்பு கல்வி நிறுவன அந்தஸ்து தேவையில்லை என்றுஅமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது” என்றார்.இந்நிகழ்வில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், பி.சம்பத், மாநிலச் செயற் குழு உறுப்பினர் கே.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் க. உதயகுமார், வெ.ராஜசேகரன், அலுவலகசெயலாளர் வில்சன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;