வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

தமிழகம்

img

தமிழகத்தில் மேலும் 2,516 பேருக்கு கொரோனா தொற்று... 

சென்னை 
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் தினமும் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் மண்டலமான சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவது பெரும் சவாலான காரியமாக உள்ளது. தற்போது தென் மாவட்டத்தின் பெரிய நகரான மதுரையிலும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், அங்கு இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணிநேரதத்தில் 2,516 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 64 ஆயிரத்து 603 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 39 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் இருந்த 1,217 பேர் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 339 ஆக உயர்ந்துள்ளது. 

இன்றைய கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 1,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு மொத்த பாதிப்பு 44 ஆயிரத்து 205 ஆக உயர்ந்துள்ளது.  

;