tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

போச்சம்பள்ளி, சூளகிரியில் மாதர் சங்க மாநாடு

கிருஷ்ணகிரி, ஜூன் 23- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்  சூளகிரி வட்ட இரண்டாவது மாநாடு தனலட்சுமி தலைமையில் நடை பெற்றது. ரேவதி கொடியேற்றினார். வட்டச் செயலாளர் சரஸ்வதி வேலை அறிக்கை வாசித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஜி.ராணி உரையாற்றினார். இதில், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் முரளி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  11 பேர் கொண்ட வட்ட குழுவின் தலைவராக எம்.லட்சுமி, செயலாளராக ஜி.ரேவதி, பொருளாளராக பார்வதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நேத்ரா நன்றி கூறினார். போச்சம்பள்ளி போச்சம்பள்ளி வட்ட முதலாவது மாநாடு பழனிம்பாடியில் கவிதா தலைமையில் நடைபெற்றது. கொடியேற்றம் மற்றும் அஞ்சலிக்கு பின் வட்ட செயலாளர் டி.எம்.ராதா வேலை அறிக்கை வாசித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஆர். மல்லிகா, மாவட்டத் தலைவர் சரஸ்வதி ஆகியோர் உரையாற்றினர். மாநாட்டில் 9 பேர் கொண்ட நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது. தலைவராக வி.புனிதா, செயலாளராக எஸ்.கவிதா, பொருளாளராக அபிராமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அமுதா நன்றி கூறினார்.

“உங்களைத் தேடி உங்கள் ஊரில் “ சிறப்பு திட்டம் திட்டக்குடியில் ஆட்சியர் நாளை ஆய்வு செய்கிறார்

கடலூர், ஜூன் 23- கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் புதனன்று (ஜூன் 25) “உங்களைத் தேடி உங்கள் ஊரில் “ என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், மக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மற்றும் அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை திட்டக்குடி வட்டாட்சியர்அலுவலகத்தில் மனுக்கள் பெறப்படவுள்ளது.

புதுச்சேரியில் ஜூலை 12 முதல் திருக்குறள் பேச்சு போட்டி

புதுச்சேரி, ஜூன் 23- மாணவ சமுதாயத்தினரிடையே திருக்குறளின் கருத்துகளைப் பரப்ப பேச்சு போட்டிகள் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் புதுச்சேரியில் நடைபெற உள்ளது.  ஸ்ரீராம் இலக்கியக் கழகம், வரும் ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 24 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே திருக்குறள் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்தவுள்ளது. 12 மையங்களில் நடைபெறும் இப்போட்டியில், புதுச்சேரியில் ஜூலை 20 ஆம் தேதி மறைமலை அடிகள் சாலையில் உள்ள செயின்ட் ஆண்டனி'ஸ் உயர்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இடைநிலை பிரிவுகள் (6-8 ஆம் வகுப்புகள்), மேல்நிலை (9-12 ஆம் வகுப்புகள்), கல்லூரி என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாணவ சமுதாயத்தினரிடையே திருக்குறளின் கருத்துகளைப் பரப்பவும், தமிழாற்றலை வளர்க்கவும், வரையும் திறனை ஊக்குவிக்கும் 1988 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீராம் இலக்கிய கழகம் இப்போட்டியை நடத்தி வருகிறது.

35 சவரன் தங்க நகைகள் கொள்ளை  

செங்கல்பட்டு, ஜூன் 23- செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் ஈஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகையன்,55 அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வருகிறார்.இவர் கடந்த 21ம் தேதி குடும்பத்துடன் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.  இந்நிலையில் திங்களன்று அதிகாலை முருகையன்  வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 35 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி விட்டு வீடு முழுதும் மிளகாய் பொடியை தூவிவிட்டு சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து முருகையன் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வர வைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த பகுதி யில் உள்ள ‘சிசிடிவி’ கேமராக்  களை ஆய்வு செய்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். மறைமலைநகர் காவல் நிலைய சோதனைச் சாவடி 500 மீட்டர் தூரத்தில் உள்ள நிலையில் கொள்ளை சம்பவம் நடை பெற்று உள்ளது.