tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மின்ஊழியர்கள்

நாமக்கல், மே 20- மின்வாரிய ஊழியரை ஒருமையில் திட்டி மிரட்டல் விடுத்த  நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியு றுத்தி மின்வாரிய ஊழியர்கள் காவல் நிலையத்தை முற்றுகை யிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், குளத்துக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தலைமை மின்சார வாரிய  அலுவலகத்தில், புறநகர் பகுதி பொறியாளராக பணிபுரிப வர் வினோத் குமார். இவர் செவ்வாயன்று வழக்கம் போல்  அலுவலகத்தில் பணியிலிருந்த பொழுது, அங்கு வந்த வேமங் காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனது நிலத்திற்கு அருகே மின்கம்பங்கள் போடப்பட்டுள்ளது. அதை  எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதற்கு, ‘ஊழியர் கள் பணிக்கு சென்றுள்ளதால், அவர்கள் திரும்பிய பிறகு  மின்கம்பங்கள் எடுக்க நடவடிக்கை எடுப்பதாக’ வினோத் குமார் கூறியுள்ளார். அதற்கு பிரகாஷ் உதவி பொறியா ளரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், மிரட்டல் விடுத்த தாக தெரிகிறது. மேலும், அங்கிருந்த பெண் ஊழியர்களை யும் திட்டியதாக தெரிகிறது. இதனால் ஊழியர்கள் பணியை  புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அனைத்து ஊழியர்களுக்கும் பரவி யது. தொடர்ந்து, குமாரபாளையம் வடக்கு மற்றும் தெற்கு புற நகர் பகுதி மின்சார வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் பணி களை புறக்கணித்துவிட்டு, குமாரபாளையம் காவல் நிலை யத்தை முற்றுகையிட்டனர். அப்போது பிரகாஷ் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி முழக்கங்களை  எழுப்பினர். தொடர்ந்து, காவல் நிலையத்தில் மின்ஊழியர் கள் புகாரளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட போலீசார்,  விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும், என உறுதியளித்தனர். அதனையேற்று, மின்வாரிய ஊழி யர்கள் கலைந்து சென்றனர்.

பாசன வாய்க்காலில் மருத்துவக் கழிவுகள் விவசாயிகள் அதிர்ச்சி!

கோபி, மே 20- ஈரோடு மாவட்டம், கோபி வாய்க்கால்வீதியில் தடப்பள்ளி  பாசன வாய்க்கால் செல்லும் சாலையோரங்களில், அடையா ளம் தெரியாத நபர்கள் இரவு நேரத்தில் மருத்துவமனைக ளில் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மற்றும் மருந்து குப்பிகளை  கொட்டிச் சென்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும்  விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. தடப்பள்ளி பாசன வாய்க்கால் சாலையோரங்களில் பொதுமக்கள் தங்கள் வீட்டுக் குப்பைகளையும், நெகிழி கழிவு களையும் கொட்டி வருகின்றனர். இறைச்சிக் கடைக்காரர் களும் இரவு நேரங்களில் கோழி இறைச்சி கழிவுகளை மூட்டை களாக அடைத்து இங்கு கொட்டிச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், தற்போது மருத்துவக் கழிவுகளும்  கொட்டப்பட்டிருப்பது தெரியவந்தள்ளது.  இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயி கள் கூறுகையில், பாசன நிலங்களுக்கு மிக அருகில், குப்பை  மற்றும் கோழிக் கழிவுகளுக்கு மத்தியில் மக்காத மருத்துவக்  கழிவுப் பொருட்களான ஊசிகள் மற்றும் மருந்து குப்பிகள்  கொட்டப்பட்டிருப்பதால், அவை விவசாய நிலங்களில் சரிந்து, விவசாயப் பணிகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பாசன வாய்க்கால் அரு காமையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது மிகவும்  ஆபத்தானது. இதனால் நோய் தொற்றுகள் பரவும் அபாயம்  உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, வாய்க்கால்வீதி தடப்பள்ளி பாசன நிலங்களையொட்டி குப்பை மற்றும் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். அத்துடன், மருத்துவக் கழிவுகளை கொட்டிச் சென்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

நாமக்கல், மே 20- 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 2024 – 25 ஆம் கல்வி ஆண்டின், 10  மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் அதிக  மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டி பரிசு வழங்கும்  விழா செவ்வாயன்று நடைபெற்றுது. முன்னாள் மாணவர்  சங்கத் தலைவர் கோகுலநாதன் வரவேற்றார். திருச்செங் கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நகர்மன்றத் தலைவர்  நளினி சுரேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு, பள்ளியள வில் 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் 3 மதிப்பெண்களை பெற்ற  3 மாணவர்கள், பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற  மாணவர்கள் 16 பேருரை பாராட்டி பரிசுகள் வழங்கினர். இதே போல், 10 ஆம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற  4 மாணவர்கள், பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற 7  மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு

நாமக்கல், மே 20- திருச்செங்கோட்டில்  கட்டி முடிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகா தார நிலையங்கள் திங்களன்று திறந்து வைக்கப்பட்டன. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சிக்குட் பட்ட கொல்லப்பட்டி மற்றும் எட்டிமடை ஆகிய பகுதிகளில்  தலா ரூ.30 லட்சம் மதிப்பீட்டில், அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இதற்கான திறப்பு விழா  திங்களன்று நடைபெற்றது. திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பர மத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் கட்டிடங்களை திறந்து வைத்தனர். இந் நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடே சன், நகர்மன்ற துணைத்தலைவர் கார்த்திகேயன், நக ராட்சி ஆணையாளர் அருள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.