திங்கள், நவம்பர் 23, 2020

tamilnadu

img

நந்தா கல்வி குழுமத்தில் ரூ.150 கோடி சொத்து ஆவணங்கள்; ரூ.5 கோடி பறிமுதல்....

ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நந்தா கல்வி குழுமத்தின் கீழ், பொறியியல் மற்றும் கலைக்கல்லூரி உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.  வரி ஏய்ப்புஉள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் கல்வி குழுமத்தில் நடப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நந்தா கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் புதனன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 

தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள நந்தா கல்வி குழுமத்திற்கு சொந்தமான 22 இடங்களில்  சோதனை நடத்தினர். இதில்  கணக்கில் காட்டப்படாத ரூ.150 கோடி சொத்து ஆவணங்களையும் ரூ.5 கோடி ரொக்க பணத்தையும்  வருமான வரித்துறை அதிகாரிகள்பறிமுதல் செய்தனர்.  மாணவர்களி டம் அதிக தொகை வசூலித்து, குறைவான தொகைக்கு கணக்குகாட்டியது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

;