கல்வி

img

தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவி பொறியாளர் பணி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 600 பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர், காலியிடங்கள், காலியிடப் பகிர்வு குறித்த விபரங்கள் www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பள விகிதம்: ரூ.39,800 - ரூ.1,26,500.

வயது வரம்பு: 1.7.2019 தேதிப்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ST/SCA/விதவைகளுக்கு 5 வருடங்களும், BC/MBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி: EEE/ECE/EIE/CSE/IT/MECH/Civel Engg/ போன்ற பொறியியல் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Electrical/Mechanical/Civel Engg போன்ற பிரிவுகளில் AIME சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் TANGEDCO-ஆல் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும், ஆன்லைன் எழுத்துத் தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண் விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் குறித்த விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பொதுப்பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1000. SC,ST.SC(A),PWD மற்றும் விதவை பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை
www.tangedco.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.2.2020. மேலும், கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

;