Government bus to Tirupur

img

மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பேருந்து

மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பேருந்து வெள்ளியன்று மாலை சென்று கொண்டிருந்தது. அன்னூர் நாகம்மாபுதூர் அருகே சென்றபோது, அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் மரத்தின் கிளை முறிந்து பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே விழுந்தது. இச்சம்பவத்தில் பேருந்தின் ஓட்டுநர், பயணிகள் யாரும் காயமின்றி உயிர்தப்பினர்.