tamilnadu

img

பெண்களை அவமதிப்பவர்களை தண்டிக்க சட்டமும், நடவடிக்கையும் தேவை.... கேரள கலை இலக்கிய சங்கம்

திருவனந்தபுரம்:
தனது யூடியூப் சேனல் மூலம் தொடர்ந்து பெண்களை அவமதித்து வரும் விஜய் பி நாயரை கைது செய்யுமாறு முற்போக்கு கலை இலக்கிய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ஷாஜி என் கருண், பொதுச் செயலாளர்அசோகன் சருவில் ஆகியோர் கூறியிருப்பதாவது: 

விஜய் பி நாயருக்கு திரைப்படக் கலைஞர் பாக்யலட்சுமியும் அவரது தோழியரும் தங்களது எதிர்ப்பை நேரடியாக தெரிவித்தது இயல்பானது. ஒழுக்கமான வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் விரும்புவோரால் இதை கசித்துக்கொண்டிருக்க முடியாது. சமூக ஊடகங்கள் மூலம் பெண்கள் அவமதிக்கப்படுவதற்கு எதிராக வலுவான சட்ட நடவடிக்கை இருக்க வேண்டும். இது தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களின் போதாமைகளை பல நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சனியன்று (செப்.26) திருவனந்தபுரத்தில் நடந்தசம்பவம், பெண்களை அவமதிக்கும்நபர்கள் கடுமையாக தண்டிக்கப்படும்படி சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது.

சமூகத்தின் முன்னணியில் வரும்திறமையான பெண்களுக்கு எதிராக அவதூறு செய்வதை விஜய் பி. நாயர்பகிரங்கமாக நிகழ்த்தி வருகிறார். இத்தகைய நபர்கள் சங்க பரிவார் அமைப்பினரால் பிரச்சாரம் செய்யப்படும் ‘குலஸ்திரி’ என்கிற அடிப்படைவாத கருத்துகளால் ஊக்கம் பெறுகின்றனர். இதை ஒரு தனிப்பட்ட நபரின் மனநல கோளாறாக பார்க்க முடியாது. இவை சமுதாயத்திற்குத் திரும்பிவரும் மனுவாத- நிலப்பிரபுத்துவ சிதைவின் வெளிப்பாடுகள். ‘சதி’ என்கிற உடன்கட்டை ஏறும் பெண்மையே அவர்களின் மாதிரி.நவீன ஜனநாயக கேரளாவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் இத்தகைய முயற்சிகளுக்கு எதிராக பெண்களின் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பு இருக்க வேண்டும். இத்தகைய எதிர்ப்புடன் முன் வரும் பெண்ணுடன் எப்போதும் பொதுமக்கள் நிற்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

;