tamilnadu

img

‘இரவு பகலாக நாடாளுமன்ற கூட்டத்தை நடத்தி முதலாளிகளுக்காக சட்டம் இயற்றும் மோடி அரசு’

திருநெல்வேலி:
இந்திய நாடாளுமன்ற கூட்டத்தை ஏற்கனவே அறிவித்திருந்த தைவிட கூடுதல் நாட்கள் நீட்டித்தும் இரவு பகலாக நடத்தியும் முத லாளிகளுக்கு தேவையான சட்டங் களை மோடி அரசு நிறைவேற்றி வருகிறது. தேர்தலுக்காக பணத்தை அள்ளி அள்ளி கொடுத்த முதலாளிகள் மோடி அரசுக்கு நெருக்கடி கொடுத்து தங்களுக்கு தேவையான சட்ட திருத்தங்களை கொண்டு வருவதாக அ.சவுந்தர ராசன் கூறினார்.

நெல்லையில் நடந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் மூன்றுநாள் மாநாடு செவ்வாயன்று நிறைவு பெற்றது. அதையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் சம்மேளன தலைவர் அ.சவுந்தரராசன் மேலும் பேசியதாவது:
மோட்டார் வாகன திருத்தச் சட்டம் எவ்வளவு மோசமானது என்பது எல்லோருக்கும் தெரியும். ரூ.500 அபராதம் இனி ரூ.5 ஆயிர மாகும். ஓட்டுநர் உரிமங்கள் சர்வ சாதாரணமாக பறிமுதல் செய்யப்படும். நிரந்தரமாகவே உரிமங்கள் ரத்து செய்யப்படும். ஒரு விபத்து என்றால் 7 ஆண்டுகள் வரை ஓட்டுநருக்கு சிறைத்தண்டனை வழங்க லாம். இந்த சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று ஜெயலலிதா சொன்னார். போக்குவரத்து துறை அமைச்சர் தில்லிக்கு சென்று ஒரு மனுவை கொடுத்தார். அந்த மனு வுக்கு நாம் நிறைய விவரங்கள் கொடுத்திருக்கிறோம். ஆர்டிஓ அலுவலகம் வேண்டும். அவற்றை எப்படி மூட முடியும். மோட்டார் வாகன வரி நமக்குத்தான் வேண்டும். உரிமம் கொடுக்கும் உரிமை  நமக்குத்தான் வேண்டும் என்றெல்லாம் பேசினார். அதற்கு விரோதமான சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் நீங்கள் எதிர்ப்புதெரிவிக்க வேண்டும். ஆந்திரா, மேற்குவங்கம், ஒரிசா போன்ற பல்வேறு மாநிலங்கள் மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க உள்ளன. 

பிஎஸ்என்எல்க்கு 4ஜி மறுப்பு
நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் கம்பெனிகளின் வசதிக்காக மோடி அரசு சீரழிக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் உள்ளது. ஜியோ நிறுவனத்திற்கு இரண்டரை லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது.தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 4 ஜி இணைய வசதியை பிஎஸ்என்எல்க்கு வழங்காமல் அந்த நிறுவனத்தை முடமாக்கப்பார்க்கிறார்கள். பிஎஸ்என்எல்நிறுவனத்துக்கு தேவையான வற்றை மத்திய அரசு செய்து கொடுத்தால் தனியார் நிறுவனங் களைவிட சிறப்பான சேவையை வழங்கவும் வளர்ச்சி பெறவும் முடியும். ஆனால் அதை செய்ய மறுக்கிறது மோடி அரசு.

அதுபோல சேலம் ஸ்டீல் நிறுவனம் சொந்தமாக ஒரு மின்நிலையம் அமைக்கவும் ஒரு தொழிற்பேட்டை அமைக்கவும் அனுமதி அளித்தால் அங்குள்ளஉபரி நிலத்தை பயன்படுத்து வதுடன் அந்த நிறுவனத்துக்கு லாபம் ஈட்டவும் பலருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் முடியும். ஆனால் இதையெல்லாம் மோடி அரசு செய்யாது.பாஜக எல்லா வகையிலும் முதலாளிகளுக்கு சேவகம் செய்யமுடிவு செய்துவிட்டது. அதன் விளைவாக தொழிலாளிகள், விவசாயி கள், சிறு உற்பத்தியாளர்கள், சிறு உடமையாளர்கள் மேலும் தாக்குதலுக்கு உள்ளாவார்கள். சின்னவியாபாரிகள் பெரிய வியாபாரதிமிங்கலங்களுக்கு இரையா வார்கள். கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாய் கோடிக்கணக்கான மக்கள் கொடுப்பதை கொடு என்று 
கையேந்தி நிற்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் கையேந்தி நிற்கமாட்டார்கள் கையை உயர்த்தி நிற்பார்கள் என்பதை இந்த நாடு பார்க்கப் போகிறது என்று பேசினார்.

ஆறுமுக நயினார்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என்கிற பொதுத்துறைக்கு சொந்தமான பேருந்துகளில் தினமும் 2 கோடி மக்கள் பயணம் செய்கிறார்கள். தினமும் ஒரு கோடி கிலோ மீட்டர் தூரம் இதன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 500 பேர் வசிக்கும் கிராமத்துக்கு கூட பேருந்துகள் இயக்குகிறோம் என்று அமைச்சர் பெருமை கொள்கிறார். தங்களது சாதனை யாக இதை கூறிக்கொள்ளும் அரசுஇந்த சாதனைக்கு உறுதுணை யாக பணியாற்றும் தொழிலா ளர்களுக்கு தொடர்ந்து வஞ்சனை செய்து வருகிறது. அதிகாரிகளின் காட்டு தர்பார் நடந்து கொண்டி ருக்கிறது. மற்றொரு புறம் அரசாங்கத்தின் மோசமான நடவடிக்கைகளும் நம்மை பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. தொழிலாளர்களுக்கான ஊதியஒப்பந்தம் வரும் ஆகஸ்ட்டு மாதத்துடன் முடிய உள்ளது. புதியஒப்பந்தத்துக்கான கோரிக்கை களை தயாரிப்பது ,ஆகஸ்ட் 5 ஆம்தேதி அனைத்து பணிமனை களுக்கும் அனுப்பி தொழிலாளர்களின் கருத்து கேட்பது, இறுதியாக 19ஆம் தேதி அனைத்து மண்டலங்களிலும் பிரம்மாண்ட மான ஆர்ப்பாட்டம் நடத்தி நிர்வா கத்திடம் ஊதிய உயர்வுக்கான பொதுக்கோரிக்கைகளை ஒப்படைப்பது என்று முடிவு செய்யப்பட்டு ள்ளது. இந்த கோரிக்கைகளை வென்றெடுக்கும் வகையில் முறையான பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். பிரச்சனை களுக்கு தீர்வுகாண அரசு முன்வரவில்லை என்றால் அரசுக்கு பாடம்புகட்டும் வகையில் வேலை நிறுத்தம் நடத்தவும் தொழிலா ளர்கள் தயாராக வேண்டும் என கேட்டுக்கொண்டார். பொதுக்கூட்டத்தில் திருவில்லி புத்தூர் புயல் கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. 

;