india

img

‘மாலேகான் குண்டுவெடிப்புப் புகழ்’ பிரக்யா ‘யோகா’ பற்றி சொற்பொழிவு... எம்.பி.க்களுக்காக நாடாளுமன்ற மக்களவை ஏற்பாடு...

புதுதில்லி:
சர்வதேச யோகா தினம் ஜூன் 21 அன்றுகடைப்பிடிக்கப்படுவதையொட்டி, ஜூன் 20 அன்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் களுக்காக சிறப்பு யோகா நிகழ்ச்சியை மக்களவைச் செயலகம் ஏற்பாடு செய்துள்ளது. காணொலி முறையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், மாலேகான் குண்டுவெடிப்பு புகழ்- பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் சிறப்புஅழைப்பாளராக கலந்து கொண்டு, எம்.பி.க்களுக்கு யோகா பயிற்சி அளிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில் பிரக்யா சிங் தாக்கூரும் ஒருவர். இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர்காயமடைந்தனர். ஆனால், வழக்கு நிலுவையில் இருக்கும்போதே என்ஐஏ நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றதன் அடிப்படையில், பிரக்யா சிங் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். எனினும் பிரக்யா சிங் எம்.பி. ஆவதற்கு முன்போ, பின்போ சர்ச்சைகளுக்கு மட்டும் பஞ்சம் இருந்தது இல்லை. மே 2019 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக மகாத்மா காந்தியைப் படுகொலை நாதுராம் கோட்சேவை “ஒருஉண்மையான தேசபக்தர்” என்று அழைத்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

மகாத்மா காந்தியை அவமதித்ததற்காக தாக்கூரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என்று பிரதமர் நரேந்திர மோடியும் அப்போது கொதித்தெழுந்தார். பாஜக தலைவர் அமித் ஷா- 10 நாட்களில் பிரக்யா மீது கட்சி ஒழுங்குநடவடிக்கை எடுக்கும் என்றார். ஆனால், எதுவும்நடக்கவில்லை.கொரோனா தொற்றின் முதல் அலையின் போது, “ஆகஸ்ட் 5 வரை ஒரு நாளைக்கு ஐந்துமுறை ஹனுமான் சாலிசாவை ஓதினால் கொரோனா தொற்று உலகத்திலிருந்தே ஓடி விடும்” என்று வழக்கம்போல பிரக்யா சிங் உளறிக் கொட்டினார்.இந்நிலையில்தான் அவரை வைத்தே சர்வதேச யோகா தின சிறப்புச் சொற்பொழிவுக்கு நாடாளுமன்றம் ஏற்பாடு செய்துள்ளது. அவருக்கு முன்னதாக, ராஜஸ்தானின் சிகாரைச்சேர்ந்த பாஜக எம்.பி. சுமேதானந்த் சரஸ்வதி தியானம் குறித்தும் எம்.பி.க்களுக்கு வகுப்பு எடுக்கிறார்.

;