india

img

ஏழை நாடுகளிடம் கையேந்தும் நிலை வந்தும் ரூ. 20 ஆயிரம் கோடி செலவு தேவையா? நாடாளுமன்ற கட்டுமானப் பணியை நிறுத்தி வைக்காதது ஏன்? மோடி அரசுக்கு சிவசேனா கேள்வி.....

மும்பை:
ஏழை நாடுகளுக்கு உதவிக் கொண்டிருந்த இந்தியா, இன்று அந்த ஏழை நாடுகளிடமே கையேந்தும் நிலையை மோடி அரசு உருவாக்கி விட்டதாக சிவசேனா விமர்சித்துள்ளது.இதுதொடர்பாக சிவசேனா தனது ‘சாம்னா’ பத்திரிகையில் மேலும்குறிப்பிட்டிருப்பதாவது:உலகளவில் ஐந்தில் ஒரு பங்குகொரோனா நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர். கடந்த பத்து நாட்களில்மட்டும் 36 ஆயிரத்து 110 பேர் இறந்திருக்கின்றனர். ஒரு மணி நேரத்துக்கு 150 பேர் இறக்கின்றனர். உயிரிழப்பில் அமெரிக்கா மற்றும் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி விட்டோம். இந்தியாவில் பரவும் கொரோனா உலகுக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது என்று ‘யுனிசெப்’ நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

நம் நாடு கடுமையான பொருளாதாரச் சுமையை இந்த நேரத்தில் தாங்கி வருகிறது. முந்தைய பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, பி.வி. நரசிம்மராவ், மன் மோகன் சிங் ஆகியோர் கடந்த 70 ஆண்டுகளில் கட்டமைத்த வளர்ச்சித் திட்டங்கள், பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளால்தான் இந்தக் கடினமானநேரத்திலும் இந்தியா தாக்குப்பிடித்து நிற்கிறது. இதற்காக அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்க வேண்டும். அவர்களால்தான் இந் தியா வாழ்ந்து வருகிறது.உலகில் பல நாடுகளும் இந்தியாவுக்கு தற்போது உதவிக் கொண்டு இருக்கின்றன. வங்கதேசம் கூட10 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகளைஅனுப்பி உள்ளது. மிகச்சிறிய நாடுகளான பூடான், நேபாளம், மியான்மர், இலங்கை போன்றவையும் இந்தியாவுக்கு உதவுகின்றன. மிகச்சிறிய நாடுகளின் உதவியை பெற வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா தள்ளப்பட் டுள்ளது.இதற்கு முன்பு பாகிஸ்தான், ருவாண்டோ, காங்கோ போன்ற ஏழைநாடுகள்தான் மற்ற நாடுகளிடம் இது போன்ற உதவிகளை பெற்றன.தற்போதைய ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளால் இந்தியாவும் இந்த சூழ்நிலைக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சிறிய நாடுகளின் உதவிகளையும் ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை இருந் தும் ரூ. 20 ஆயிரம் கோடிக்கு புதிய நாடாளுமன்றம் கட்டும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை நிறுத்தி வைக்க பிரதமர் தயங்குகிறார். அதுதான் வளர்ச்சி என்று கருதுகிறார்.மத்திய அரசு சிறந்த தேசிய அரசாக இருந்திருந்தால் அரசியல் ரீதியான நன்மை, தீமை பற்றி சிந்திக்காமல், அனைத்து கட்சிகளையும் ஆலோசித்து நோயை வீழ்த்துவதற் கான வழிகளை கண்டறிந்து இருக்கும்.தேசிய குழுவை அமைத்திருக்கும். ஆனால், அதைச் செய்யவில்லை.பாஜக எம்.பி. சுப்பிரமணியசாமி கூட, மத்திய சுகாதார அமைச்சரை மாற்றி விட்டு நிதின் கட்காரிக்கு அந்த பொறுப்பை வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார். இது, மத்திய சுகாதார அமைச்சகம் தோல்வி அடைந்து இருப்பதை காட்டுகிறது.இவ்வாறு சாம்னா தலையங்கத் தில் கூறப்பட்டுள்ளது.

;