tamilnadu

img

முன் களப் பணியாளர்களுக்கு நிதி குறைப்பு: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை:
முன்களப்பணியாளர்கள், கொரோனாவால் மரணம் அடைந்தால் ரூ.25 லட்சம் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என்று அதிமுக அரசு முடிவு எடுத்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

24 மணி நேரமும் இடைவேளையின்றி தங்களின் உயிரைப் பணயம் வைத்து கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் தியாக உணர்வுடன் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள், கொரோனா நோய்த் தொற்றால் மரணம் அடைந்தால் துவக்கத்தில் 10 லட்சம் என்றும் பின்னர் 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. தற்போது 25 லட்சம் ரூபாய் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும்” என்று அதிமுக அரசு முடிவு எடுத்திருப்பது சிறிதும் பொருத்தமற்றது என்பதுடன் மிகுந்த கண்டனத்திற் குரியது.முன்களப் பணியாளர்களுக்கு வாக்குறுதி கொடுத்தவர் முதலமைச்சர். அந்த வாக்குறுதியைத் தவறாமல் காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பும் தனக்கே இருக்கிறது என் பதை முதலமைச்சர் நிச்சயம் நினைவில் கொள்ள வேண்டும். மனமும், மனதில் இரக்கமும் இருந்தால் மார்க்கம் உண்டு.

அனாவசியமான அவசர டெண்டர்களுக்கும், ஊழல் காரியங்களுக்கும் நிதி ஒதுக்குவதைத் தள்ளிவைத்துவிட்டு, கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட முன்களப் பணியாளர்களின் மருத்துவச் செலவுக்கான ரூ.2 லட்சம், உயிரிழந்தவர் களுக்கு ரூ.50 லட்சம், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிதியுதவியை ரூ.25 லட்சமாகக் குறைத்து, தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த முன்களப் பணியாளர்களின் போற்றி வணங்க வேண்டிய பணியை அரசே மனிதாபிமானமின்றி சிறுமைப்படுத்திவிடக் கூடாது என்றும், நிர்க்கதியாக நிற்கும் அவர்களின் குடும்பங்களை நட்டாற்றில் தவிக்கவிட்டு விடக்கூடாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

;