- அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தரும் ஆயுதங்கள் சமூக விரோத கிரிமினல் சக்திகளின் கை களுக்கு செல்லும் ஆபத்து உள்ளது என ‘‘யூரோபோல்’’ உளவு அமைப்பு எச்சரி த்துள்ளது.
- ரஷ்யாவை சிதைக்க கங்கணம் கொண்டுள்ள மேற்கத்திய நாடுகள் இது பற்றி கவலை கொண்டதாக தெரிய வில்லை.
- துர்க்கியே நாட்டின் ஜனாதிபதி எர்டோ கனும் புடினும் ஈரான் தலைவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பார்த்து ஜெர்மனியின் அயல்துறை அமைச்சர் அன்னலீனா பேர்பாக் அலறியுள்ளார்.
- நேட்டோ உறுப்பு நாடான துர்க்கியே இப்படி செய்வது துரோகம் என அங்கலா ய்த்துள்ளார்.
- புடினுடன் புகைப்படம் எடுப்பது கூட துரோகம் என வகைப் படுத்தும் அளவிற்கு ‘‘பசுமை கட்சி’’ யைச் சேர்ந்த அன்னலீனா போன்ற ஐரோப்பிய அரசியல்வாதிகள் சென்றுவிட்டார்கள்.
- சமீபத்தில் ஈரானுக்கு சென்றது ஒரிஜினல் புடின் இல்லையாம்! டூப்ளிகேட் புடினாம்! சொல்கிறார் உக்ரைனின் உளவுத்துறை தலைவர் கிரில் புடோனோவ். நிறைய ஹாலிவுட் திரைப்படங்கள் பார்ப்பார் போலும்! உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள் ளோம் என அமெரிக்க பாதுகாப்பு ஆலோ சகர் ஜேக் சல்லிவன் கூறியுள்ளார்.
- ரஷ்யா எதையும் செய்யும் எனவும் அவர் குற்றம்சா ட்டியுள்ளார். ஜெலன்ஸ்கியின் உயிருக்கு உக்ரைன் பாசிச சக்திகளிடமிருந்துதான் ஆபத்து உள்ளது என சுயேச்சையான சமூக ஊடகங்கள் பல நாட்களாக எச்சரித்து வருகின்றன.
- சில ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் சிலவற்றை சத்தமில்லாமல் அகற்றி வருகின்றன. ஏன் அவசரப்பட வேண்டும்! இப்பொ ழுது ஏன் பின்வாங்க வேண்டும்? செப்டம்பர் மாதம் நடக்க உள்ள- படு கொலை செய்யப்பட்ட- ஜப்பான் முன்னாள் பிரதமர் அபேயின் இறுதி சடங்குக்கு புடினை அனுமதிக்கமாட் டோம் என ஜப்பான் அறிவித்துள்ளது. அப்படி ஒரு எண்ணமே புடினுக்கு இல்லை என ரஷ்யா பதில் கொடுத்துள்ளது.
- மரணத்தில் அரசியல் செய்யும் வன்மம் ஜப்பானுக்கும் உருவாகியுள்ளது வேதனையான ஒன்று! உக்ரைனில் உள்ள ரஷ்யாவால் விடுவிக்கப்பட்ட கெர்சோன் பகுதியில் விரைவில் ரஷ்யாவுடன் இணைவது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என அந்த பகுதியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
- உக்ரைனில் நிகோலயேவ் எனும் முக்கிய நகரத்தை அதன் கவர்னர் விடலிட்டி கிம் ஊரடங்கு மூலம் முடக்க முடிவு செய்துள் ளார். அந்த நகரில் யார் ரஷ்யாவின் உள வாளி? யார் உக்ரைன் தேச பக்தர் என தெரியவில்லை எனவும் புலம்பியுள்ளார்.
- அரண்டவன் கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பேய்! ரஷ்யாவையும் சீனாவையும் எதிர்க்கு மாறு சில மேற்கத்திய உளவு நிறுவனங்கள் தன்னை நிர்ப்பந்தப்படுத்தியதாக செர்பியா வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் உலின் பகீர் தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
- அவ்வாறு செய்யாவிட்டால் அரசு பதவியில் நீடிக்க முடியாது எனவும் எது வேண்டுமானா லும் நடக்கும் எனவும் தன்னை மிரட்டிய தாகவும் கூறியுள்ளார். ஏகாதிபத்தி யத்தின் உண்மை முகம் இதுதான்! எங்கள் மீது போடப்பட்ட தடைகளை நீக்க நாங்கள் கோரவில்லை எனவும் உலக உணவு நெருக்கடியை உருவாக்கிய தடைகளை மேற்கத்திய நாடுகள்தான் திணித்தன எனவும் நெருக்கடியை தீர்க்க அந்த தடைகளை போட்டவர்கள்தான் நீக்க வேண்டும் எனவும் ரஷ்ய அமைச்சர் லாவ்ரவ் கூறியுள்ளார்.
- வினை விதைத்த வர்கள்தான் அதனை தீர்க்க வேண்டும். ரஷ்ய போர் விமானிகள் ரஷ்யாவை கை விட்டால் நிறைய நிதியும் மேற்கத்திய நாடுகளில் குடியுரிமையும் தரப்படும் என சில உக்ரைன் உளவாளிகள் ஆசை காட்டியதாக ரஷ்ய ராணுவம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. உக்ரைன் போரில் முன்னேறிக்கொண்டிருக்கும் ரஷ்யாவை கைவிட விமானிகள் என்ன முட்டாள்களா?
- ரஷ்யாவை எதிர்ப்பது இல்லை எனும் துர்க்கியேவின் நிலை ஜோ பைடனுக்கு எரிச்சலூட்டியுள்ளது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது.
- தாம் சொல்வதை வேத வாக்காக வளரும் நாடுகள் பயந்து ஏற்பர் எனும் காலம் மலையேறிவிட்டது என பைடனுக்கும் இதர அமெரிக்க தலைவர்களுக்கும் எப்பொழுது தெரியப்போகிறது?