world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

  1. ரஷ்ய எண்ணெய்க்கு மாற்றை உருவாக்குவது சாத்திய மற்ற ஒன்று என்பதை ஐரோப்பிய நாடுகள் உணர வேண்டும் என லூக் ஆயில் எனும் தனியார் நிறு வனத்தின் முன்னாள் உயர் அதிகாரி வஜிட் அலக்பெரவ் கூறியுள்ளார்.  
  2. உக்ரைனின் தென் கிழக்குப் பகுதியில் ரஷ்யா கைப்பற்றிய எனர்கோடர் எனும் நகரத்தின் மேயர் மீது குண்டு வீசி கொலை முயற்சி நடந்துள்ளது. இது  உக்ரைன் பயங்கரவாதிகளின் செயல் என கருதப்படு கிறது. ரஷ்யாவுக்கு எதிராக மால்டோவா எனும் முன்னாள் சோவியத் குடியரசுக்கு ஆயுதங்கள் தரத் தயார் என  அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் கிரிகோரி மீக்ஸ் தெரிவித்துள்ளார்.
  3. எப்படியாவது ரஷ்யாவுக்கு எதிராக இன்னொரு போர் முனையை உருவாக்க அமெரிக்கா முயல்கிறது. ரஷ்ய தடைகள் காரணமாக பிரிட்டனின் 40% குடும் பங்கள் “எரிசக்தி வறுமையில்” வீழும் ஆபத்து உள்ளது என ஈ.ஓ.என். எனும் உலகின் மிகப்பெரிய மின்சார நிறுவனத்தின் முதன்மை அதிகாரி மைக்கேல் லீவீஸ் அபாய சங்கு ஊதியுள்ளார்.
  4. உக்ரைன் போர் காரணமாக உலக அளவில் உணவு பற்றாக்குறை கடுமையாக உருவாகும் ஆபத்து தவிர்க்க இயலாததாக ஆகிறது என எக்னாமிஸ்ட் எனும் பத்திரிக்கை எச்சரித்துள்ளது.
  5. உக்ரைன் நேட்டோவில் இணைவது உடனடி சாத்திய மற்றது என்பது தெரிந்தும் பைடன் அரசாங்கம் பொய் நம்பிக்கையை உக்ரைனுக்கு தந்தது என  ஒபாமா நிர்வாகத்தில் ரஷ்யாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த மைக்கேல் மெக்ஃபால் குற்றம்சாட்டியுள்ளார்.
  6. அமெரிக்காவை திருப்திப்படுத்தவும் ரஷ்ய எதிர்ப்பு காரணமாகவும் மட்டுமே சுவீடனும் பின்லாந்தும் நடு நிலையை கைவிட்டு நேட்டோவில் சேர முயல் கின்றன என ராபர்ட் பிரிட்ஜ் எனும் பத்திரிக்கை யாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
  7. உக்ரைன் போருக்கு அடிப்படைக் காரணம் ரஷ்யா வின் பாதுகாப்பு குறித்து மேற்கத்திய நாடுகள் கவனம் செலுத்த தவறியதுதான் என ஜெர்மனியின் சமூக ஜனநாயக கட்சியின் முன்னாள் தலைவர் ஒஸ்கார் லஃபோன்டைன் கூறியுள்ளார்.
  8. மரியபோல் நகரில் அஸ்வோடல் இரும்பாலையில் பதுங்கியிருந்த 2400க்கும் அதிகமான உக்ரைன் வீரர்கள் சரண் அடைந்த பின்னர் அங்கு உள்ள  கண்ணி வெடிகளை அகற்றும் பணியை ரஷ்ய வீரர்கள்  மேற்கொண்டு வருகின்றனர்.
  9. நூற்றுக்கணக்கான உக்ரைன் வீரர்களின் உடல்களும் அங்கு இருப்ப தாக செய்திகள் கசிந்துள்ளன.
;