world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

  1. லாத்வியா தேசத்துக்குள் ரஷ்யா அல்லது பெலா ரஸிலிருந்து வரும் பிற நாட்டு குடிமக்கள் ரஷ்யா ஆக்கிரமிப்பு நாடு என கையெழுத்திட்டு ஆவணம் தர வேண்டும்.
  2. இல்லாவிடில்  விசா மறுக் கப்படும். ரஷ்ய எதிர்ப்புக்கு வானமே எல்லை! லாத்வியாவின் மக்கள் தொகை வெறும் 18 லட்சம்தான்! உக்ரைன் பற்றிய பல உண்மைகளை சொல்லத் தொடங்கிய காரணத்தால்தான் போர்க் கைதிகளை அமெரிக்க சிறிய ஏவுகணை மூலம் உக்ரைன் கொன்றது என ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது.
  3. தனது சொந்த குடிமக்களையே கொல்லும் உக்ரைன் தலைவர்கள் பற்றி என்ன வென சொல்வது! ரஷ்யாவுக்கு எதிராக விஷம் கக்கும் ஐரோப்பிய தலைவர்களில் ஒருவர் ஜெர்மனியின் உதவி ஜனாதிபதி ராபர்ட் ஹெபக்.இவர் பசுமைக் கட்சியை சேர்ந்தவர்.
  4. ரஷ்யாவை தோற்கடிக்க ஜெர்மனி மக்கள் அனைத்து தியாகங்களையும் செய்ய வேண்டும் என இவர் ஒரு கூட்டத்தில் கூறினார். உக்ரைனுக்காக நாங்கள் ஏன் துன்பப்பட வேண்டும் என மக்கள் எதிர்க் கேள்வி கேட்டனர்.  
  5. ரஷ்ய எரிசக்திக்கு பிரிட்டன் தடை விதித்துள் ளது. ஆனால் சில  பிரிட்டன் கப்பல்கள் ரகசிய மாக எரிசக்தியை பல இடங்களுக்கு கொண்டு செல்கின்றன.
  6. உண்மை நிலை என்ன என்பதை களத்தில் உள்ளவர்கள் அறிவார்கள். அரசியல் வாதிகள் அறிவார்களா? ரஷ்ய எரிசக்திக்கு எதிராக தடை விதித்த கார ணத்தால் ஜெர்மனியில் மின்சாரப் பற்றாக்குறை உருவாகியுள்ளது.
  7. பல பாரம்பரிய கட்டிடங்க ளுக்கு தரப்படும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள் ளது. தடை பாதிப்பு அதிகம் ரஷ்யாவுக்கா? அதனை விதித்த தேசங்களுக்கா? எரிசக்திக்காக ரஷ்யாவை மீது சார்ந்திருப்பதை எப்படி குறைக்க வேண்டும்?
  8.  லாத்வியாவின் வழிமுறை: விலை குறைவான ரஷ்ய எரிசக்தி யை வாங்க வேண்டும்- ஆனால் ரஷ்ய நிறுவ னங்களிடமிருந்து அல்ல! சில ஐரோப்பிய தேசங்களின் திணறல் பரிதாபமானது!
  9. ஜெர்மனி தமக்கு கொடுத்த பீரங்கிகள் சரியாக இயங்கவில்லை என உக்ரைன் குற்றச்சாட்டு! பழுதான ஆயுதங்கள் தங்கள் தலையில் திணிக் கப்படுகின்றனவா எனும் கேள்வியை உக்ரைன் ராணுவம் எழுப்புகிறது.