world

img

ஆங்சாங் சூச்சிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை 

மியான்மரின் தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங்சாங் சூச்சிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1962முதல் 50 ஆண்டுகளுக்கு மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது. இதை தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சாங் சூச்சி கடுமையாக எதிர்த்தார். அதனால் அவர் சுமார் 21 ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இதையடுத்து தொடர் போராட்டம் காரணமாக கடந்த 2015ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ஆனாலும் ஆங் சாங் சூச்சியின் மகன்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றதால் அவரால் ஜனாதிபதியாக பதவியேற்க இயலவில்லை. அதனால் அவரது நம்பிக்கையை பெற்ற டின் கியாவ் ஜனாதிபதியாக பதவியேற்றார். இந்நிலையில் அந்நாட்டின் அதிகாரத்தை மீண்டும் ராணுவம் கைப்பற்றியது. மீண்டும் சூச்சி ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டார். தேர்தல் பிரச்சாரத்திற்காக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மீறியது, சட்டவிரோதமாக வாக்கி டாக்கிகளை இறக்குமதி செய்தது, தேசவிரோதப் பேச்சு, ஊழல் என 4 குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டன.
இந்த நிலையில், ஆங் சாங் சூச்சிக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த அந்நாட்டு நீதிமன்றம், அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஆங் சாங் சூச்சிக்கு 505 (பி) பிரிவின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இயற்கை பேரிடர் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், முன்னாள் ஜனாதிபதி வின் மைன்ட்டுக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

;