பெய்ஜிங்,ஜன.12- மாலத்தீவு ஜனாதிபதி அரசுமுறை பயணமாக ஜனவரி 8 முதல் 12 வரை சீனாவிற்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது இருநாடுக ளுக்கும் இடையே வளர்ச்சி திட்டங்க ளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருதரப்பு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பேரிடர் மேலாண்மை, தொழில் மேம்பாடு, சமூக-பொரு ளாதார ஒத்துழைப்பு, சுற்றுலாத்துறை, காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்து வதில் இணைந்து பயணிப்பது, விவ சாயம், வீட்டுவசதி மேம்பாடு, டிஜிட்டல் பொருளாதாரம், நீலப் பொருளாதா ரம், குறிப்பாக மீன்வளம், கல்வி மற்றும் மனித வள மேம்பாடு மற்றும் பசுமை ஆற்றல் உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய அந்த 20 ஒப்பந்தங்க ளில் இரு நாட்டு ஜனாதிபதிகளும் கையெழுத்திட்டனர். முக்கிய ஒப்பந்தங்களில் ஒன்றாக சீனாவின் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் மற்றும் மாலத் தீவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தக அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையேயான பெல்ட் அண்ட் ரோடு ஒத்துழைப்புத் திட்டத்தை விரைவு படுத்துவதற்கான ஒப்பந்தம் அமைந் துள்ளது. அரசுக்குச் சொந்தமான செய்தி நிறு வனங்களான சீனா மீடியா குரூப் மற்றும் மாலத்தீவின் பொதுச் சேவை ஊடகம் மற்றும் சின்ஹுவா செய்தி நிறுவனம் ஆகியவற்றுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள் ளது முக்கிய அம்சமாக உள்ளன. மாலத்தீவு அரசாங்கத்தின் அறிக் கையின் படி , இரு நாடுகளும் கடன் தள்ளுபடி செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள தகவல் தெரிய வந்துள்ளது எனினும் தொகையை குறிப்பிடவில்லை. மாலத்தீவிற்கு கடன் வழங்கும் நாடாக சீனா உள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தரவுகளின்படி, 130கோடி டாலர்கள் கடன் வழங்கியுள்ளது சீனா. மேலும் மிக விரைவாக சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம் மூலம் மாலத்தீவின் உட்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்த உள்ளதும் தெரிய வந்துள்ளது.