world

img

கோவிட் 19 - நிலைகுலைந்த பிரிட்டன்

 

கோவிட் 19 வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதால் பிரிட்டன் நிலைகுலைந்து போயியுள்ளது.

கோவிட் 19 என்கிற கொரோனா வைரசால் மிக, மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று பிரிட்டன். இந்நாட்டில் மட்டும் தற்போது வரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் கோவிட் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட் 19 வைரசின் அடுத்தடுத்த அலைகளில் சிக்சி கடுமையாக பாதிக்கப்பட்ட பிரிட்டனில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வந்தது. இதனால் வைரசின் சீற்றம் குறைந்துவிட்டதாகவே அந்நாட்டு மக்களும், அரசும் கருதியது.

இச்சூழலில் கடந்த ஒரிரு வாரங்களாக கோவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் பெருமளவு உயரத் துவங்கியுள்ளது. குறிப்பாக, வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை அடுத்தடுத்த தினங்களில் இரட்டிப்பாகி வருவது அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளியன்று மட்டும் புதிதாக 88 ஆயிரத்து 376 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிய உருமாற்றியான ஒமைக்ரான் வைரசின் தாக்குதல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.  

இதன்காரணமாக, அந்நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பியுள்ளது. மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாசல்களில் காத்துக் கிடக்கின்றனர். அதேபோல், கோவிட் 19 வைரசிற்கு எதிரான தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளவும் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே, தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பதிவு செய்யும் அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் தொடர்பு கொண்டதால் அந்த இணையதளத்தின் சேவை சில மணிநேரம் தடைபட்டது. இத்தகைய கடுமையான சூழல் காரணமாக ஒட்டுமொத்த பிரிட்டனே நிலைகுலைந்து போய்யுள்ளது. 

;