முற்போக்காளர் ஜெர்மி கோர்பின் பிரிட்டனின் வடக்கு இலிங்க்டன் தொகுதியிலிருந்து மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.
இந்த தொகுதியில் அவர் 1983ஆம் ஆண்டிலிருந்து தொடர் வெற்றி பெற்றுள்ளார். அவரது முற்போக்கு கருத்துகளுக்காக தொழிலாளர் கட்சித் தலைமை அவருக்கு போட்டியிட அனுமதி மறுத்தது. அவர் சுயேட்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்ததையடுத்து தலைமை அவரை கட்சியிலிருந்து வெளியேற்றியது. அதிகாரப்பூர்வ தொழிலாளர் கட்சி வேட்பாளர் மிகப்பெரிய செல்வந்தர். அவரை தோற்கடித்து கோர்பின் பெற்ற வெற்றி தொழிலாளர் கட்சி பெற்றுள்ள வெற்றியைவிட முக்கியத்துவம் வாய்ந்தது.