world

img

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல்: முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது

பாரீஸ்,ஜூலை 1- பிரான்ஸ் நாட்டின் முதல் கட்ட நாடாளு மன்றத் தேர்தலில் 577 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு  துவங்கியுள்ளது.

அந்நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், அதி தீவிர வலதுசாரியான  மரீ லீ பென், மற்றும் மக்கள் முன்னணி கூட்டணி தலைவர்கள் வாக்களித்துள்ளனர். கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தேர்தலில், பிரான்சில் அதி தீவிர வலதுசாரியான மரீ லீ பென்னின் ‘தேசிய முன்னணி” 32  விழுக்காடு வாக்கு கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது. ஜனாதி பதி மக்ரோனின் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது.

இதன் காரணமாக மாக்ரோன் உடனடியாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி முதல் கட்ட நாடாளு மன்ற தேர்தல் ஜூன் 30 அன்று துவங்கியது. 4.9 கோடி வாக்காளர்களை கொண்ட பிரான்ஸ் தேர்தல் உக்ரைன்- ரஷ்ய போர்,இஸ்ரேல் பாலஸ்தீன போர் ,அதிகரித்து வரும் புலம் பெயர் மக்கள் ஆகிய சர்வதேச நெருக்கடிக ளுக்கு இடையே  நடைபெறும் முக்கியமான தேர்தலாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப்பெரிய பொருளாதார நாடான பிரான்ஸ் தேர்தலில் தீவிர வலதுசாரிகளின் வளர்ச்சி ஐரோப்பிய ஒன்றியத்திலும், சர்வதேச அரசியலிலும் மிக தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற எச்சரிக்கையுடன் இத்தேர்தல் முக்கி யத்துவம் பெற்றுள்ளது. 

தேர்தலுக்கு முந்தைய இறுதிக் கருத்துக் கணிப்புகளின்படி, தேசிய முன்னணி 35 சதவீதம் முதல் 37 சதவீதம் வரை வாக்குகளைப் பெறும் எனவும், மத்திய-இடது, இடதுசாரிகள், சோஷலிஸ்டுகள் இணைந்து உருவாக்கியுள்ள ‘மக்கள் முன்னணி’ 27.5 முதல் 29 சதவீத வாக்குகளும், மாக்ரோனின் கட்சி 20-21 சதவீத  வாக்குகள் பெறும் எனவும் கணிக்கப் பட்டுள்ளது.

ஜூலை 7 அன்று நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிவுகளை வைத்தே  புதிய ஆட்சி அமையும்.

;