world

img

750 எம்.எல் கொள்ளளவு கொண்ட குடிநீரின் விலை 44 லட்சமா?  அப்படி என்ன ஸ்பெஷல்...    

பாரீஸ் 
இன்றைய உலகில் வெளியில் செல்வோர் அவசர தேவைக்கு கடைகளில் 1 லிட்டர் அளவு கொண்ட பாட்டில் குடிநீர் வாங்குவது வழக்கம். இந்தியாவில் 10 மற்றும் 20 ரூபாய்களில் தண்ணீர் பாட்டில்கள் விற்கப்படுகின்றன. தற்போது இந்தியவில் அக்குவாபீனா, கின்லே போன்ற குடிநீர்கள் முன்னணியில் உள்ளன.     

சில பிராண்டுகள் முக்கிய நீரூற்று, உலகின் உயரமான  நீரூற்று, யாரும் செல்லமுடியாத நீரூற்று, இயற்கை நீரூற்று போன்ற பகுதிகளிலிருந்து தண்ணீர் பிடிக்கப்பட்டதாக கூறி 1 லிட்டர் பாட்டில்களை ஆயிரம் ரூபாய்க்கும் மேலாக விற்று வருகிறது. இது அனைவர்க்கும் தெரிந்தது தான். 

ஆனால் ஒரு கம்பெனியின் 750 எம்.எல் குடிநீரின் விலை ரூ. 44 லட்சமாம். கேட்கும் போதே சற்று மயக்கம் வரும் செய்தியாக தான் உள்ளதா? அதனை பற்றி விரிவாக பார்ப்போம்... 

பிஜி மற்றும் பிரான்சில் உள்ள ஒரு இயற்கை நீரூற்றுகளில் இருந்து வரும் தூய்மையான குடிநீரை கொண்டு வந்து அதனை 24 காரட் தங்க பாட்டிலில் ஊற்றி இந்த குடிநீரை விற்பனை செய்கிறார்கள். இந்த குடிநீரின் பெயர் அக்வா டி கிரிஸ்டலோ ட்ரிபுடோ அ மாடிகிலானி ஆகும்.  அனைத்து தண்ணீரையும் விட மிகச்சிறந்த நீர் என்று சொல்லப்பட்டாலும் இதை அடைத்து வைத்திருக்கும் தங்க பாட்டிலுக்காகவே அதிக விலை விற்கப்படுகிறது என கூறப்படுகிறது.  

அக்வா பன்னா என்ற இத்தாலி நிறுவனம் இந்த குடிநீரை விற்பனை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

;