world

img

பாகிஸ்தான்: குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்வு

பாகிஸ்தான் மசூதியில் நடந்த  குண்டுவெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது. 
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு மேற்கே 190 கீமி தொலைவில் அமைந்துள்ளது பெஷாவர் நகரம். கொச்சா ரிசல்டார் என்ற பகுதியில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறுவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்பாக குண்டு வெடித்தது. இதில் 30 பேர் பலியானார்கள். 56 பேர் படுகாயமடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. 
தற்போது இந்த குண்டுவெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது. 194 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் பெஷாவர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்த அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்