நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி மறுப்பு தெரிவித்திருப்பது அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் சமூக ஊடகத் தடையும், ஊழலுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டமும் வன்முறையாக வெடித்தது. இந்த போராட்டத்தில் 3 காவலர்கள் உட்பட மொத்தம் 72 பேர் உயிரிழந்தனர்.
மேலும் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், அதிகாரிகளின் இல்லங்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் தீக்கிரையாகின. போராட்டம் கட்டுக்குள் வராத நிலையில், நேபாளத்தின் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஒருமித்த நிலையில் பதவி விலகினர்.
இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி மறுத்ததோடு, இதுகுறித்து விசாரணை நடத்தவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் நேபாள அரசியலில் பரபரப்பும் குழப்பமும் நிலவி வருகின்றன