world

img

இந்தியா - நேபாளத்திற்கு 1 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கியது 

இந்தியா 1 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நேபாளத்திற்கு , இன்று வழங்கியுள்ளது.

ஜனவரி 20 ஆம் தேதி முதல் பூடான், மாலத்தீவு , வங்கதேசம் , நேபாளம் , மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் அறிவித்தது.
இந்நிலையில் நேபாளத்திற்கு 3.50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. எனினும் , இன்று 1 லட்ச தடுப்பூசிகள் மீண்டும் இந்தியா அனுப்பியது.

இது குறித்து நேபாள அதிகாரி ஒருவர் ஏ.என்.ஐ செய்தியில் கூறியதாவது : கொரோனா தடுப்பூசிகள் ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று மதியம் காத்மாண்டில் தரையிறங்கு என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் , மோசமான வானிலை காரணமாக தரையிறங்கவில்லை. எனினும் விமானம் நேபாளத்துகுள் வந்துவிட்டது என்று தெரிவித்தார்.

;