world

img

நேபாள நாடாளுமன்றம் கலைப்பு.... 2021 ஏப்ரல் - மேயில் பொதுத் தேர்தல்....

காத்மாண்ட்:
நேபாள அமைச்சரவையின் பரிந்துரை யை ஏற்று ஜனாதிபதி, நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார்.அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

நேபாள பிரதமர் சர்மா ஒலி டிசம்பர் 20 ஞாயிறன்று அமைச்சரவைக் கூட்டத்தை அவசரமாக கூட்டினார். இக்கூட்டத்தில் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரிக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. பிரதமர் சர்மா ஒலி, ஜனாதிபதி அலுவலகத்திற்கு நேரில் சென்றும் தங்களது முடிவை தெரிவித்தார். இந்த பரிந்துரையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு நாடளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார். அத்துடன், அடுத்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதியில் இருந்து மே 10 ஆம் தேதிக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்ததாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

;